விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் ராமமூர்த்தி இறந்துவிட்டார் என்று சொன்னவுடன் மொத்த குடும்பமும் நம்பவும் முடியாமல், ஏற்று கொள்ள முடியாமல் பரிதவித்து இருந்தது. தன்னுடைய தந்தை இறந்ததை அறிந்த கோபி ரொம்ப அழுதார். ஒவ்வொருவருமே தாத்தாவை நினைத்து புலம்பி அழுது இருந்தார்கள். பழனிச்சாமி, இறுதி சடங்கிற்கு தேவையான வேலைகளை செய்தார். கடந்த வாரம், இறுதி சடங்கு செய்ய கோபி தயாராகி இருந்தார். உடனே ஈஸ்வரி, நீ செய்யக்கூடாது. என்னுடைய புருசனின் கடைசி ஆசையே அதுதான் என்று சொன்னவுடன் எல்லோருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.
உடனே கோபி, என்னுடைய அப்பாவிற்கு நான் தான் இறுதி சடங்கு செய்வேன் என்று அழுது கெஞ்சி இருந்தார். இருந்தாலுமே, ஈஸ்வரி ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும், இதை யார் செய்வார்கள்? என்று கேட்டதற்கு பாக்யா தான். மகள் இடத்தில் இருந்து எல்லாமே செய்வாள் என்று சொன்னவுடன் கோபி ஒத்து கொள்ளவில்லை. கடைசியில் பாக்கியா தன்னுடைய மாமனாருக்கு இறுதி சடங்குகளை செய்தார். இதை பார்த்து கோபி அழுது புலம்பி கத்தினார். ராமமூர்த்தி இறுதி ஊர்வலம் நடந்தது.
பாக்கியலட்சுமி சீரியல்:
ராமமூர்த்தியை மயான பூமிக்கு எடுத்து சென்றார்கள். பாக்கியா தான் கடைசி சடங்குகளை எல்லாம் செய்து கதறி கதறி அழுதார். கோபி ஓரமாக நின்று எதுவும் செய்ய முடியவில்லை என்ற வருத்தத்தில் இருந்தார். இதை நினைத்து கோபி ராதிகாவிடம் புலம்பி அழ, அவர் ஆறுதல் சொல்லியும் ஏற்றுக் கொள்ளாமல் அப்பாவை நினைத்தும், இறுதி சடங்கை செய்ய முடியாததை நினைத்தும் ரொம்ப புலம்பி இருந்தார். வேதனையில் ஈஸ்வரி, பாக்யாவின் மடியில் படுத்து ராமமூர்த்தியின் உடைய பழைய நினைவுகளை பகிர்ந்து இருந்தார். பின் இனியா தன்னுடைய தாத்தாவை பற்றி பேசி அழ, எழில் சமாதானம் செய்து அனுப்பி விட்டு தனியாக நின்று வருத்தப்பட்டார்.
சீரியல் கதை:
பாக்கியா வரும்போதும் சேரில் ராமமூர்த்தி உட்கார்ந்திருப்பது போல பார்த்து கதறி அழுதார். மறுநாள் ராமமூர்த்தியின் அஸ்தியை செழியன், எழில் வாங்கி வந்தார்கள். அப்போது கோபி, ராதிகாவும் மயானத்திற்கு சென்று அஸ்தியை வாங்கி இருந்தார். இன்னொரு பக்கம் வீட்டில் ஜெனியை தங்களுடன் அழைத்து செல்வதற்கு அவரின் அப்பா- அம்மா பேச, எல்லோருமே ஒத்துக் கொள்கிறார்கள். ஆனால், ஜெனி மட்டும் வரமாட்டேன் என்று அடம் பிடித்தார். நேற்று எபிசோடில், ராமமூர்த்தியின் அஸ்தியை வைத்து வீட்டில் சாமி கும்பிட்டு கங்கையில் கரைத்தார்கள்.
நேற்று எபிசோட்:
இன்னொரு பக்கம் கோபியும் தன்னுடைய அப்பாவின் அஸ்தியை கங்கையில் கரைத்தார். எல்லா சடங்குகளையும் எழில் செய்து முடித்துவிட்டு தாத்தாவை பற்றி நினைத்து வருத்தப்பட்டு பேச, செழியன் ஆறுதல் சொல்லி இருந்தார். இந்நிலையில் இன்றைய எபிசோடில், ராமமூர்த்தியை நினைத்து ஈஸ்வரி வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது எல்லோருமே வீட்டில் தங்களுடைய அடுத்த வேலைகளை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். உடனே பாக்கியா, ஈஸ்வரிக்கு நெத்தியில் போட்டு வைத்து நீங்கள் இப்படி இருந்தால் தான் மாமாவுக்கு பிடிக்கும் என்று சொல்கிறார்.
இன்றைய எபிசோட்:
மறுநாள் செழியன்-எழில் வாக்கிங் போகும்போது கோபியும் வாக்கிங் சென்றிருந்தார். அவர்கள் பெரிதாக அவரிடம் பேசவில்லை . அப்போது ஒருவர் கோபியிடம், ராமமூர்த்திக்கு செய்த சடங்கு பத்தி பேசி வம்பு இழக்க, ஆத்திரத்தில் கோபி கத்துகிறார். உடனே செழியன் தடுத்து சமாதானம் செய்து அனுப்பி விடுகிறார். அதற்குப் பின் ஈஸ்வரி குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருக்கிறார். இனியா கல்லூரிக்கு செல்லும் போது தன்னுடைய தாத்தாவை பார்த்து அழுகிறார். உடனே ஈஸ்வரி ஆறுதல் சொல்லி அனுப்பி வைக்கிறார். வெளியில் கோபி, நான் கல்லூரிக்கு அழைத்து செல்கிறேன் என்று இனியாவை கூட்டிக்கொண்டு போகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.
Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.