எழிலை மீண்டும் வீட்டுக்கு வரவைக்க போராடும் மொத்த குடும்பம், பேச மறுத்த பாக்கியா- விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி

0
436
- Advertisement -

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் கடந்த வாரம் கோபி- ராதிகா இடையே சண்டை நடந்தது. கோபத்தில் ராதிகா, எதற்கு தான் உங்களை திருமணம் செய்து கொண்டேனோ? என புலம்ப, உடனே கோபி, உன்னால் தான் என் வாழ்க்கை இப்படி ஆனது என சொல்ல, விவாகரத்து கொடுத்து விட்டு நிம்மதியாக உன் குடும்பத்துடனே போய் சேருங்கள் என்று ராதிகா சொன்னார். பின் கோபி வெளியே சென்று விட்டார். எழில், மீண்டும் சினிமா வாய்ப்பு தேடி சென்றிருந்தார். ஆனால், எங்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

-விளம்பரம்-

இன்னொரு பக்கம் வீட்டில் செழியன், தனக்கு புதிய ஆர்டர் கிடைத்தது என்று சொல்லி சந்தோஷப்பட்டு தன்னுடைய சம்பளத்தையும் அம்மாவிடம் கொடுத்தார். அந்த சமயம் பார்த்து எழில் வீட்டுக்கு வந்தார். அவருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்காததை தெரிந்த ஈஸ்வரி, மோசமாக திட்டி இருந்தார். எழில் எதுவும் பேசாமல் அழுது கொண்டே சென்று பாட்டி சொன்னது நினைத்து மாடியில் கண்கலங்கி இருந்தார். இதை பார்த்த அமிர்தா மற்றும் பாக்கியா இருவரும் எழிலுக்கு ஆறுதல் சொல்லி இருந்தார்கள். அடுத்த நாள் ஜெனி கர்ப்பமாக இருப்பது வீட்டில் எல்லோருக்கும் தெரிந்து சந்தோஷப்பட்டு இருந்தார்கள்.

- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியல்:

இந்த வாரம், அமிர்தாவை பார்த்து ஈஸ்வரி, நீ எப்போது குழந்தை பெற்றுக் கொள்ளப் போகிறாய்? உங்களுக்கு என்று ஒரு குழந்தை வேண்டாமா? என இந்த முறை மோசமாக திட்டி இருந்தார். இதனால் அமிர்தா மனமுடைந்து எழில் இடம் சொல்லி இருந்தார். இதனால் வீட்டிற்கு வந்த எழில், தன்னுடைய பாட்டி ஈஸ்வரியிடம் கோபப்பட்டு பேசி இருந்தார். அதற்கு ஈஸ்வரி, உன் பொண்டாட்டி பத்த வைத்து விட்டாளா? என்று பேச, நீங்கள் எதற்காக அவளிடம் குழந்தை பற்றி கேட்டீர்கள்? என்று இருவருக்கும் இடையே சண்டை நடந்தது.

சீரியல் கதை:

ஒரு கட்டத்தில் ஈஸ்வரி, உன்னோட பெரியவன் சம்பாதிக்கிறான், இரண்டு குழந்தைக்கு அப்பா ஆகிவிட்டான். நீ என்ன செய்கிறாய்? நான் இப்படிதான் பேசுவேன். நிலாவிற்கு மூணு வேளை சாப்பாடு உங்களால் போட முடியுமா? என்று கேட்டு இருந்தார். உடனே பாக்யாவுக்கு கோபம் வந்து, நீ வீட்டை விட்டு வெளியே போ எழில் என்று சொல்கிறார். இதைக் கேட்டு எல்லோருமே அதிர்ச்சியாகி நிற்கிறார்கள். பின் தாத்தா, ஈஸ்வரி பாட்டியை அழைத்து ரூமுக்கு சென்று விட்டார். இன்னொரு பக்கம் ரூமில் அமிர்தா- எழில் இருவரும் நடந்ததை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.

-விளம்பரம்-

நேற்று எபிசோட்:

கடைசியில் எழில் வீட்டை விட்டுப் போக தயாராக வந்து நின்றார். இதை பார்த்து பாக்கியா மனம் உடைந்து எதுவும் பேசாமல் இருந்தார். நேற்று எபிசோடில், அமிர்தா- எழில் வீட்டை விட்டு கிளம்புவதை பார்த்து எல்லோருமே கதறி அழுது, வேண்டாம் என்று தடுத்த்தார்கள். இருந்தும் எழில் தன் முடிவில் மாறவில்லை. மேலும், ஈஸ்வரியிடம் எழில் பேச, நீ வெளியே போகக்கூடாது என்று ஈஸ்வரி சொல்கிறார். இருந்துமே எழில் கேட்கவில்லை. கடைசியில் தன் அம்மாவை பார்த்து எழில் நிற்க, பாக்கியா எதுவும் பேசாமல் அழுது கொண்டே, நீ வீட்டை விட்டு வெளியே போ என்று செல்கிறார்.

இன்றைய எபிசோட்:

எழில் வெளியே சென்று விட்டார். எல்லோரும் இதை நினைத்து புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி, நீ ஏன் எழிலை தடுக்கவில்லை? நீ சொல்லி இருந்தால் அவன் போக மாட்டான் . இனிமேல் இந்த வீட்டில் நான் எதுவுமே பேசவில்லை என்று பாக்கியாவை திட்டிவிட்டு சென்று விடுகிறார். பின் எல்லோரும் எழிலுக்கு போன் செய்து வர வையுங்கள் என்று பாக்கியாவை கட்டாயப்படுத்துகிறார்கள். அதற்கு பாக்கியா, முடியாது. அவன் நினைத்ததை அடைய வேண்டும். இதுதான் அவனுக்கு சரியான வழி. அவன் சாதித்த பிறகு வரட்டும் என்று அழுகிறார். இன்னொரு பக்கம் எழில், தன் மனைவி குழந்தையுடன் ஹோட்டலில் தங்கி இருக்கிறார்.

Advertisement