விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் பிரச்சனைகளுக்கு பின் பாக்கியா மீண்டும் ரெஸ்டாரன்ட்டை திறந்திருந்தார். கல்லூரியில் நடன மாஸ்டரை வைத்து பயிற்சி எடுக்க வேண்டும் என்று சொன்னதால் பாக்யா மாஸ்டரை சந்தித்தார். ஆனால், அவர் அதிகமாக செலவாகும் என்று சொன்னதால் பாக்கியா ஒத்து கொள்ளவில்லை. இன்னொரு பக்கம் எழில், தன்னுடைய கதையைப் பற்றி தயாரிப்பாளிடம் சொல்ல அவரும் ஒத்துக்கொண்டார். இதை எழில், அமிர்தா-பாக்கியாவிடம் சொல்லி சந்தோஷப்பட்டார்.
இந்த வாரம் தன்னுடைய அப்பா கோபியிடம் சொல்லி இனியா டான்ஸ் கிளாசில் சேர்ந்தார். இன்னொரு பக்கம் ரெஸ்டாரண்டில் புதிய ஆர்டர் எடுப்பதை பற்றி பாக்கியா பேசிக் கொண்டிருந்தார். அப்போ அந்த புது செப்பையும் வரவைத்து ஆர்டரை எடுக்கலாம் என்று பாக்கியா சொல்ல, செல்வி வேண்டாம் என்கிறார். ஆனால், பாக்கியா அதை கேட்கவில்லை. மறுபடியும் புது செப் வேலைக்கு வந்து சேந்தார். இன்னொரு பக்கம் எழில் தன்னுடைய புது தயாரிப்பாளரை சந்தித்து கதையை பற்றி பேசி இருந்தார்.
பாக்கியலட்சுமி:
இதையெல்லாம் ஒழிந்து நின்று கோபி கேட்டு சந்தோஷப்பட்டார். பின் தன்னுடைய மகள் கல்லூரிக்கு சென்று நடன வகுப்பை பற்றி கோபி விசாரிக்க, இனியாவும் ரொம்ப சந்தோஷப்பட்டார். நேற்று எபிசோட்டில் செழியன் முன்பு போல் தன்னிடம் பேசுவதில்லை என்று ஜெனி அவருடைய அப்பாவிடம் புலம்ப, அவரும் நீ தைரியமாக இரு. நான் பார்த்துக் கொள்கிறேன் என்று ஆறுதல் சொன்னார். டான்ஸ் கிளாஸில் இனியா மும்முரமாக பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார். இதை கோபி- ராதிகா இருவருமே பார்த்து பாராட்டி இருந்தார்கள்.
நேற்று எபிசோட்:
பின் கோபி தன்னுடைய ரெஸ்டாரண்டில் நண்பன் செந்தில் உடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த புது செப் மீண்டும் வேலையில் சேர்ந்த விஷயத்தை கோபியிடம் சொன்னார். பின் பாக்கியா எடுக்கப் போகும் புது ஆர்டரிலும் பிரச்சனை செய்ய இருப்பதை பற்றி சொல்ல, கோபி ரொம்ப சந்தோஷப்பட்டார். இதையெல்லாம் கேட்டு செந்தில் ரொம்பவே பதறி இருந்தார். மேலும், இனியாவின் டான்ஸ் காம்பிடிஷன் நடைபெற்றது. அதில் பாக்கியா- கோபி குடும்பத்தினர் கலந்து கொண்டிருந்தார்கள். இனியா நடனம் ஆடும் போது உற்சாகத்தில் கோபியும் நடனமாடி இருந்தார்.
இன்றைய எபிசோட்:
கடைசியில் பைனல் ஆடிஷன் போட்டியில் இனியா வெற்றி பெற்றார் என்றவுடன் எல்லோருமே சந்தோஷப்படுகிறார்கள். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் இனியா கீழே இறங்கி வந்து தன்னுடைய அப்பாவை தான் கட்டிப்பிடித்து சந்தோஷப்பட்டு, மேடை அழைத்தும் சென்று, இவர்தான் இதற்கெல்லாம் காரணம். நான் வெற்றி பெற்றதற்கு என்னுடைய அப்பா தான் என்று புகழ்ந்து பேசுகிறார். இதையெல்லாம் கேட்டு பாக்கியா மனம் உடைந்து அங்கிருந்து கிளம்புகிறார். இதை பார்த்த கோபி சந்தோஷப்பட்டு பாக்கியாவை வெறுப்பேத்தி பேசுகிறார். உடனே எழில் அவருக்கு பதிலடி கொடுத்து அனுப்புகிறார்.
சீரியல் ட்ராக்:
பின் வீட்டில் இனியா தன்னுடைய பாட்டி இடம் சொல்லி ரொம்ப சந்தோஷப்படுகிறார். அப்போது பாக்கியா, எப்போது நீ மாஸ்டரை வைத்தாய்? என்னிடம் சொல்லவே இல்லை என்று கேட்டதற்கு, அப்பா தான் எனக்கு ரெடி பண்ணி கொடுத்தார் என்று பொய் சொல்கிறார். உடனே பாக்கியா கோபப்பட்டார். அதற்கு செழியன் தடுத்து இனியாவை கூட்டிக்கொண்டு போகிறார். பாக்யாவால் எதுவும் பேச முடியாமல் அமைதியாகி விட்டார். மறுநாள் காலையில் ஜெனி- அமிர்தா இருவருமே பாக்யா, ஈஸ்வரியை தயாராக சொல்லி அவர்களை வெளியில் அழைத்துச் செல்ல பார்க்கிறார்கள். அவர்களுமே தயாராகி வெளியில் கிளம்புகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.