விஜய் டிவியில் டிஆர்பியில் முன்னிலை வகுக்கும் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. சீரியலில் பாக்கியாவை அவர் கணவர் கோபி விவாகரத்து செய்து ராதிகாவை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். கடந்த சில வாரங்களுக்கு முன் ராதிகா கால் தடுமாறி ராதிகா கீழே விழுந்ததால் கர்ப்பம் கலைந்து இருந்தது. இதனால் ராதிகா அம்மா, போலீஸ் ஸ்டேஷனில் ஈஸ்வரி மீது புகார் கொடுத்து இருந்தது மிகப்பெரிய அளவில் பூகம்பமாக வெடித்து இருந்தது. பின் மயூ சொன்ன சாட்சியை ஏற்று நீதிமன்றம் ஈஸ்வரி வழக்கை தள்ளுபடி செய்து வெளியே வந்தார்.
அதன் பின் கோபி, தன்னுடைய அம்மாவிடம் அழுது மன்னிப்பு கேட்க கோபத்தில் ஈஸ்வரி, இனி எனக்கு மகனே இல்லை என்று தலையில் தண்ணீர் எடுத்து ஊற்றிக் கொண்டார். கோபி எதுவும் பேச முடியாமல் மனம் நொந்து வெளியே வந்து விட்டார். இந்த சூழ்நிலையில் சென்னையில் சமையல் போட்டி நடந்தது. அதில் பாக்கியா- கோபி இருவரும் கலந்து கொண்டு இருந்தார்கள். இன்னொரு பக்கம் இனியா, தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து படிக்க செல்கிறேன் என்று பொய் சொல்லி பார்ட்டியில் ஆட்டம் பாட்டம் என சந்தோசமாக இருந்தார். ஆனால், பார்ட்டியில் நண்பர்களுக்குள் இடையில் நடந்த சண்டையில் போலீஸ் வந்து அனைவரையும் கைது செய்து இருந்தது.
பாக்கியலட்சுமி சீரியல்:
அந்த சமயம் அங்கு வந்த ராதிகா, இனியாவை காப்பாற்றி பாக்கியாவை வர வைத்து நடந்ததை சொன்னார். அதை கேட்டு பாக்யா உடைந்து போய் எதுவும் பேசாமல் கையெடுத்து கும்பிட்டு நன்றி என்று ராதிகாவிடம் சொன்னார். கடைசியில் சமையல் போட்டியில் கோபி நன்றாக சமைத்து வெற்றி பெற்று விடுகிறார். இன்னொரு பக்கம் வீட்டில் எல்லோருமே இனியாவை திட்டி இருந்தார்கள். அதே சமயம் கோபி, நடந்ததை செழியன் மூலம் தெரிந்து கொண்டு இனியாவை நினைத்து வருத்தப்பட்டார். வழக்கம் போல் கோபி வீட்டிற்கு வந்து பாக்கியாவை திட்டி சண்டை போட்டு இனியாவை அழைத்து செல்ல பார்த்தார்.
சீரியல் கதை:
கடைசியில் இனியா, நான் வரவில்லை அம்மாவுடன் இருக்கிறேன் என்று சொன்னவுடன் கோபி எதுவும் பேசாமல் வெளியே சென்று இருந்தார். இன்னொரு பக்கம், கல்லூரியில் பார்ட்டிக்கு சென்ற மாணவர்களின் பெற்றோர்கள் வரவேண்டும், அதற்கு பிறகு தான் உங்களை வகுப்பில் சேர்த்துக் கொள்வேன் என்று நிர்வாகம் சொல்லி இருந்ததால் இனியா பயந்து கோபியிடம் சொல்லி விடுகிறார். ஆனால், பாக்கியாவிற்கு கல்லூரி விவகாரம் தெரிந்து இனியாவையும், தாத்தா, பாட்டியும் அழைத்து கொண்டு செல்கிறார். அப்போது கல்லூரியில் இனியாவுக்கு டிசி கொடுக்கிறேன் என்று சொன்னவுடன் பாக்கியா மன்னிப்பு கேட்கிறார்.
இன்றைய எபிசோட்:
உடனே பிரின்சிபால், இனியா அப்பா வரவேண்டும் என்று சொன்னவுடன் ஈஸ்வரி, அவன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு போய்விட்டான். அவன் பொறுப்பான அப்பாவே கிடையாது என்று கோபமாக பேசி இருக்கிறார். இதைக் கேட்டு பிரின்சிபால், மனம் மாறி இனிமேல் இந்த தவறு நடக்காத பார்த்துக் கொள்ளுங்கள் என்று அனுப்பி விடுகிறார். அதற்குப் பிறகு கோபி, பிரின்சிபலை சந்திக்கிறார். கோபியை பார்த்து அவர், இப்படியா ஒரு பொறுப்பில்லாமல் நடந்து கொள்வது என்று திட்டி அவருக்கு அறிவுரை சொல்லி அனுப்புகிறார்.
சீரியல் ட்ராக்:
இது எல்லாம் கேட்டு கோபிக்கு கோபம் வந்து வீட்டில் பாக்கியா விடம் சண்டை போடுகிறார். அப்போது ஈஸ்வரி, உண்மையை தானே சொன்னோம். நீ என்னைக்கு பொறுப்பான அப்பாவாக நடந்து இருக்கிறாய் என்று கேட்கிறார். உங்களுக்கும் எனக்கும் சம்பந்தமில்லாமல் இருக்கலாம், என் மகளுக்கும் எனக்குமான உறவை யாராலும் பிரிக்க முடியாது என்று கோபி சொன்னவுடன் பாக்யா, அப்பா என்றால் எல்லா கஷ்டத்திலும், எல்லா நேரத்திலும் கூட இருக்க வேண்டும் என்று சொல்ல அமைதியாக கோபி வந்து விடுகிறார். கடைசியில், கோபி ராதிகாவிடம் நடந்ததை சொல்லி வருத்தப்படுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.