சினிமா வாய்ப்பு கிடைக்காமல் தவிக்கும் எழில், அசிங்கப்படுத்தும் ஈஸ்வரி – விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி

0
302
- Advertisement -

விஜய் டிவியில் டிஆர்பியில் முன்னிலை வகுக்கும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் இனியா, தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து படிக்க செல்கிறேன் என்று பொய் சொல்லி பார்ட்டிக்கு சென்று இருந்தது மிக பெரிய பிரச்சனை ஆகி இருந்தது. ராதிகா தான் இனியாவை காப்பாற்றி இருந்தார். பின் இதை அறிந்த வீட்டில் உள்ள எல்லோருமே இனியாவை திட்டி இருந்தார்கள். கடந்த வாரம், கல்லூரியில் பார்ட்டிக்கு சென்ற மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து வர வேண்டும் என்று நிர்வாகம் சொல்லி இருந்தது.

-விளம்பரம்-

இதனால் பாக்கியா கல்லூரிக்கு போய் இருந்தார். கல்லூரியில், இனியாவுக்கு டிசி கொடுக்கிறேன் என்று சொன்னவுடன் பாக்கியா மன்னிப்பு கேட்க, அப்போது பிரின்சிபால் இனியா அப்பா வரவேண்டும் என்று சொன்னவுடன் ஈஸ்வரி, அவன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு போய்விட்டான் என்று கோபமாக சொல்லி இருந்தார். இந்த விஷயம் கோபிக்கு தெரிய வந்து ஈஸ்வரியிடம் கேட்டு சண்டை போட்டு இருந்தார். இன்னொரு பக்கம் வீட்டில் இனியா நடந்ததை நினைத்து ரொம்பவே வருத்தப்பட்டு புலம்பி அழுது இருந்தார்.

- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியல்:

கடைசியில் அவர், இறந்து போக முடிவு எடுத்து கடிதம் எழுதி யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியே போக பார்த்தார். அதை பார்த்த பாக்கியா, கடிதத்தை படித்து பார்த்து அதிர்ச்சி ஆகி இனியாவை திட்டி அழுதார். இனிமேல் இந்த தவறு செய்ய மாட்டேன் என்று இனியாவும் சொல்கிறார். இந்த வாரம் எபிசோடில் கோபி, ராதிகா இடையே சண்டை நடந்தது. கோபத்தில் ராதிகா, எதற்கு தான் உங்களை திருமணம் செய்து கொண்டேனோ? என புலம்ப, உடனே கோபி, உன்னால் தான் என் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது.

சீரியல் கதை:

நான் என் குடும்பத்தை இழந்து நிம்மதி இல்லாமல் தவிக்கிறேன் என்று சொல்ல, விவாகரத்து கொடுத்து விட்டு நிம்மதியாக உன் குடும்பத்துடனே போய் சேருங்கள் என்று ராதிகா சொன்னார். பின் கோபி தன் நண்பனை பார்க்க சென்று விட்டார். நேற்று எபிசோடில் பாக்கியா, வீட்டில் நடந்தை பழனிச்சாமி இடம் சொல்ல, அவர் ஆறுதலாக பேசுகிறார். இன்னொரு பக்கம் வீட்டில் எழிலுக்கு சரியான வேலை இல்லை என்று ஈஸ்வரி திட்டி இருந்தார். கோபி வழக்கம் போல் தன்னுடைய நண்பருடன் பாரில் குடித்துக்கொண்டு வீட்டில் நடந்ததை எல்லாம் பேச அப்போது புது நபர் ஒருவர் என்ட்ரி கொடுத்தார்.

-விளம்பரம்-

நேற்று எபிசோட்:

அவரிடம் கோபி, பாக்கியா ரெஸ்டாரன்ட்டை கெடுக்க திட்டம் போடுகிறார். இந்நிலையில் இன்றைய எபிசோடில் எழில், சினிமா வாய்ப்பு தேடி ஒரு கம்பெனிக்கு சென்றிருக்கிறார். அங்கு அவரைப் பற்றி தெரிந்து கொண்டு வாய்ப்பு தர முடியாது என்று மறுத்து விடுகிறார்கள். இன்னொரு பக்கம் வீட்டில் செழியன், தனக்கு புதிய ஆர்டர் கிடைத்திருக்கிறது என்று சொல்லி சந்தோஷப்படுகிறார். பின் தன்னுடைய சம்பளத்தையும் அம்மாவிடம் கொடுக்கிறார்.

இன்றைய எபிசோட்:

அதை பாக்கியா வாங்க மறுத்தாலும் செழியன் கொடுத்து விடுகிறார். அந்த சமயம் பார்த்து எழில் வீட்டுக்கு வருகிறார். அவருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்காததை தெரிந்த ஈஸ்வரி எழிலை பயங்கர மோசமாக திட்டி விடுகிறார். எழில் எதுவும் பேசாமல் அழுது கொண்டே சென்று விடுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது. இனி வரும் நாட்களில் எழில் சினிமா வாய்ப்பை விட்டு வேறு வேலைக்கு செல்வாரா? மகனுக்காக பாக்கியா எடுக்கும் முடிவு என்ன? போன்ற விறுவிறுப்பில் சீரியல் சென்று கொண்டு இருக்கிறது.

Advertisement