கோபியை வெளுத்து வாங்கிய ஈஸ்வரி, பாக்கியா கொடுத்த பதிலடி- விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி

0
373
- Advertisement -

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் ஜெனி கர்ப்பமாக இருப்பது வீட்டில் தெரிந்து எல்லோரும் சந்தோஷப்பட்டு இருந்தார்கள். ஆனால், அமிர்தா, குழந்தை பெற்றுக் கொள்ளாது குறித்து ஈஸ்வரி மோசமாக திட்டி இருந்தார். இதனால் எழில் கோபப்பட்டு ஈஸ்வரியிடம் பேசி இருந்தார். பின் இருவருக்கும் இடையே நடந்த சண்டையில் பாக்யாவுக்கு கோபம் வந்து, நீ வீட்டை விட்டு வெளியே போ எழில் என்று சொல்ல, எல்லோருமே அதிர்ச்சியானார்கள். கடைசியில் எழில் வீட்டை விட்டு வெளியே போனார்.

-விளம்பரம்-

இந்த விஷயத்தை அறிந்த கோபி, எழில் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து சென்று இருந்தார். ஆனால் எழில் முகம் கொடுத்து கூட பேசவில்லை. கடந்த வாரம் வீட்டில் தாத்தாவின் 80 ஆவது நாள் பிறந்தநாளை கொண்டாட எல்லோருமே பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஈஸ்வரி, தாத்தாவின் பிறந்தநாளுக்கு வரவேண்டும் என்று எழிலை கூப்பிட்டார். ஆனால், எழில் வர மறுத்தார். உடனே கோபமாக ஈஸ்வரி, நீ வராதே என்று சொல்லி போனை வைத்து விட்டார். மேலும், எழில் வராததை நினைத்து ஈஸ்வரி வருத்தப்பட்டு இருந்தார்.

- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியல்:

பின் ராமமூர்த்தியின் 80 ஆவது பிறந்தநாளை கொண்டாட எல்லோருமே கோவிலுக்கு போய் இருந்தார்கள். இதை வெளியில் இருந்து பார்த்த கோபி, என்ன வீட்டில் விசேஷம்? என்று குழப்பத்தில் செழியனுக்கு கால் செய்தார். ஆனால், அவர் எடுக்கவே இல்லை. கோவிலில் தடபுடலாக தாத்தாவின் பிறந்த நாள் நடந்து கொண்டிருக்கின்றது. தாத்தாவின் பிறந்தநாளுக்கு உறவினர்கள், நண்பர்கள் எல்லோரும் வந்து இருந்தார்கள். பின் தாத்தா- பாட்டி இருவரும் மாலை மாற்றிக் கொள்ளும் போது எழில் வந்து நின்றார். இதை பார்த்தவுடன் மொத்த குடும்பமே சந்தோஷப்பட்டது.

சீரியல் கதை:

நேற்று எபிசோடில் கோபி, செழியனுக்கு கால் பண்ணி எல்லா விஷயத்தையும் தெரிந்து கொண்டார். பின் இதை ராதிகாவிடம் சொல்ல இருவருக்கும் சண்டை வந்தது. கடைசியில் கோபி கோவிலுக்கு சென்றார். கோபியை பார்த்தவுடன் மொத்த பேருமே அதிர்ச்சியாக, ராமமூர்த்தி கோபப்பட்டு பேசி இருந்தார். நேற்று எபிசோடில் ஈஸ்வரி- ராமமூர்த்தி எவ்வளவு திட்டியும், அசிங்கப்படுத்தியும் கோபி கிளம்பாமல் அங்கே இருந்தார். பின் எல்லோருமே ஈஸ்வரி- ராமமூர்த்தி இடம் ஆசிர்வாதம் வாங்கி செல்கிறார்கள்.

-விளம்பரம்-

நேற்று எபிசோட்

இது எல்லாம் பார்த்து கோபி சந்தோசப்பட்டு போட்டோ எடுத்தார். கடைசியில் கோபி ஆசிர்வாதம் வாங்க வந்தவுடன் ஆசிர்வாதம் செய்யாமல் ராமமூர்த்தி திட்டி விட்டார். பின் கோபி கிஃப்ட் கொடுத்ததற்கு, ராமமூர்த்தி தூக்கி வீசிவிட்டு சென்று விட்டார். அதற்கு பின் கோபி, தன் அம்மாவிடம் மன்னிப்பு கேட்க, ஈஸ்வரி கோபமாக திட்டுகிறார். இந்நிலையில் இன்றைய எபிசோடில், கோபி அழுந்து, மன்னிப்பு கேட்டும் ஈஸ்வரி மனம் இறங்காமல் திட்டுகிறார். உடனே ராமமூர்த்தி ஈஸ்வரியை கூட்டிட்டு சென்று விடுகிறார்.

இன்றைய எபிசோட்:

பின் எல்லோருமே உட்கார்ந்து சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதை பார்த்து கோபி சந்தோஷப்பட்டு அழுகிறார். இன்னொரு பக்கம் கோபி, பாக்கியாவை பார்த்து கோபப்படுகிறார். ராமமூர்த்தி எல்லோருக்கும் சாப்பாடு உருண்டை பிடித்து கொடுக்கிறார். அப்போது பாக்கியவை பார்த்து கோபி, என் குடும்பம் என்னை விட்டு பிரிந்து இருக்கிறது. அதற்கு காரணம் நீ தான். அவர்களிடம் தப்பு தப்பாக சொல்லித் தந்து என்னை பிரித்து விட்டாய் என்று சொல்ல, அடுத்தவர்கள் மேல் வீண் பழி போட வேண்டாம் என்று பதிலடி கொடுத்து விட்டு பாக்கியா வந்து விடுகிறார். இருந்தாலும் பாக்கியாவை பழி வாங்கியே தீர வேண்டும் என்று கோபி நினைக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Advertisement