விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் தாத்தாவின் 80 ஆவது நாள் பிறந்தநாளை கோவிலில் தடபுடலாக கொண்டாடி இருந்தார்கள். கோவிலுக்கு வந்த கோபியை பார்த்தவுடன் மொத்த பேருமே அதிர்ச்சியாக, பின் ஈஸ்வரி- ராமமூர்த்தி கோபியை, திட்டியும் அசிங்கப்படுத்தியும் இருந்தார்கள். பின் ராமமூர்த்தி, மனசுக்கு நிறைவாக இருக்கிறது என்று சொல்லி வீட்டில் பேசிக் கொண்டிருந்தார். கடந்த வாரம் ராமமூர்த்தி தூக்கம் வராமல் அவஸ்தைப் பட்டு இருந்தார். உடனே ஈஸ்வரி, அவரை சமாளித்து தூங்க வைத்தார். மறுநாள் ஈஸ்வரி, ராமமூர்த்தியை எழுப்பி இருந்தார். ஆனால், ராமமூர்த்தி எழவே இல்லை. பயத்தில் ஈஸ்வரி கத்த, மொத்த குடும்பமே வந்து ராமமூர்த்தியை எழுப்பி இருந்தார்கள்.
பின் மருத்துவரை வரவைத்து செக் பண்ண, அவர் இறந்துவிட்டார் என்று சொன்னவுடன் மொத்த குடும்பமும் நம்பவும் முடியாமல், ஏற்று கொள்ள முடியாமல் பரிதவித்து நிற்கிறது. தன்னுடைய தந்தை இறந்ததை அறிந்த கோபி ரொம்ப அழுகிறார். ஒவ்வொருவருமே தாத்தாவை நினைத்து புலம்பி அழுது கொண்டிருக்கிறார்கள். பழனிச்சாமி, இறுதி சடங்கிற்கு தேவையான வேலைகளை செய்கிறார். ஒவ்வொருவரும் ராமமூர்த்திக்கு இறுதி அஞ்சலி செலுத்துகிறார்கள். அப்போது ராதிகாவின் அம்மா வந்து ஓவராக ட்ராமா செய்தார். இதை பார்த்து ஈஸ்வரிக்கு கோபம் வருகிறது. நேற்று எபிசோடில், இறுதி சடங்கு செய்ய கோபி தயாராகி இருந்தார். உடனே ஈஸ்வரி, நீ செய்யக்கூடாது.
பாக்கியலட்சுமி சீரியல்:
என்னுடைய புருசனின் கடைசி ஆசையே அதுதான் என்று சொன்னவுடன் எல்லோருக்கும் அதிர்ச்சியாக இருந்தார்கள். பின் கோபி, என்னுடைய அப்பாவிற்கு நான் தான் இறுதி சடங்கு செய்வேன் என்று அழுது கெஞ்சுகிறார். இருந்தாலுமே, ஈஸ்வரி ஏற்றுக் கொள்ளவில்லை. பின் வீட்டில் உள்ள எல்லோருமே ஈஸ்வரியை சமாதானம் செய்ய பார்க்கிறார்கள். ஆனால், அவர் ஒத்துக் கொள்ளவே இல்லை. மொத்த பேருமே கோபிக்கு ஆதரவாக நின்று பேசியும் மனம் மாறாமல் ஈஸ்வரி இருந்தார். எல்லோருமே, யார் செய்வார்கள்? என்று கேட்டதற்கு பாக்யா தான்.
சீரியல் கதை:
மகள் இடத்தில் இருந்து எல்லாமே செய்வாள் என்று சொன்னவுடன் எல்லோருமே அதிர்ச்சியாகி இருந்தார்கள்.
கடைசியில் பாக்கியா தன்னுடைய மாமனாருக்கு இறுதி சடங்குகளை செய்தார். இதை பார்த்து கோபி அழுது புலம்பி கத்தினார். ராமமூர்த்தி இறுதி ஊர்வலம் நடந்தது. ராமமூர்த்தியை மயான பூமிக்கு எடுத்து சென்றார்கள். பாக்கியா தான் கடைசி சடங்குகளை எல்லாம் செய்து கதறி கதறி அழுதார். கோபி ஓரமாக நின்று எதுவும் செய்ய முடியவில்லை என்ற வருத்தத்தில் இருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோடில், ராமமூர்த்தியின் இறுதி சடங்குகள் எல்லாம் முடிந்து விடுகிறது. மன வேதனையில் பாக்கியா, எழில் வீட்டிற்கு வருகிறார்கள். இன்னொரு பக்கம், கோபி ராதிகாவிடம் புலம்பி அழுது கொண்டிருக்கிறார். ராதிகா ஆறுதல் சொல்லியும் அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தன்னுடைய அப்பாவை நினைத்தும், இறுதி சடங்கை செய்ய முடியாததை நினைத்தும் ரொம்ப புலம்புகிறார்.
சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் பாக்கியா வீட்டில் எல்லோருமே வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார்கள். வேதனையில் ஈஸ்வரி பாக்யாவின் மடியில் படுத்து ராமமூர்த்தியின் உடைய பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டிருக்கிறார். அவருக்கு பாக்கியா ஆறுதல் சொல்லி சமாதானம் செய்கிறார். பின் இனியா தன்னுடைய தாத்தாவை பற்றி பேசி அழுகிறார். எழில் சமாதானம் செய்து அனுப்பி விட்டு தனியாக நின்று வருத்தப்படுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.