சட்டை பட்டனை கழட்டிவிட்டு படு கிளாமர் போஸ் - அட்வைஸ் செய்தவர்களுக்கு ஜெனிபர் கொடுத்த பதில்.

By Rajkumar · 7/6/2021

சினிமா நடிகைகளுக்கு இணையாக சீரியல் நடிகைகளும் கவர்ச்சி காட்ட தயங்குவது இல்லை. கவர்ச்சியான போட்டோ ஷூட் மூலம் பிரபலமடைந்த பல சீரியல் நடிகைகள் இருக்கிறார்கள். ஷிவானி, ரம்யா பாண்டியன் போன்ற பலர் போட்டோ ஷூட் மூலமே இளசுகள் மத்தியில் வைரலானார்கள். இப்படி ஒரு நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் குடும்ப குத்து விளக்காக நடித்து வரும் ஜெனிபர் சமீபத்தில் பதிவிட்ட கவர்ச்சியான புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் கொஞ்சம் ஷாக்கடைந்து உள்ளனர்.

தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் ரசிகர்கள் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்களுக்கு பிடித்தமான சீரியல்களை ஒளிபரப்ப தொலைக்காட்சிகள் போராடி வருகின்றனர். ஆனால், விஜய் தொலைக்காட்சி படங்களில் தலைப்பில் அடுத்தடுத்து சீரியல்களை வெளியிட்டு வெற்றியை கண்டு வருகிறது. அந்த வகையில் மவுனராகம், சின்னத்தம்பி, அரண்மனைக் கிளி, அஞ்சலி, கடைக்குட்டி சிங்கம், ராஜா ராணி இப்படியான சினிமாப் பட டைட்டில் வரிசையில் பாக்கியலட்சுமி என்ற சீரியல் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது.

இதையும் பாருங்க : மணிரத்னம் ஸ்டூடன்ட் உன்ன மாதிரி கேவளமான படமெல்லாம் எடுக்க மாட்டாங்க - கேலி செய்தவருக்கு திரௌபதி இயக்குனர் பதிலடி.

இந்த தொடரில் ஜெனிபர் என்ற கதாபாத்திரத்தில் குடும்ப குத்து விளக்காக நடித்து வருபவர் நடிகை திவ்யா கணேஷ்.சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம் அந்த வகையில் சமீபத்தில் இவர் படு கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் 'என்ன சிம்ரன் இதெல்லாம்' , 'உங்க கிட்ட இருந்து இத எதிர் பார்க்கல' என்று பல விதமான கமன்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர் ஒருவர் போட்ட ஸ்டோரி ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ஹேட்டர்கள் பற்றி கவலைப்படாதீர்கள். நீங்கள் என்ன ஆடை அணியவேண்டும் என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். நீங்கள் தைரியமாக இருங்கள். இது எல்லா பெண்களுக்கும் பொருந்தும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full