மணிரத்னம் ஸ்டூடன்ட் உன்ன மாதிரி கேவளமான படமெல்லாம் எடுக்க மாட்டாங்க – கேலி செய்தவருக்கு திரௌபதி இயக்குனர் பதிலடி.

0
4625
mohan
- Advertisement -

பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கிய ஜி மோகன் இயக்கத்தில்கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியான திரௌபதி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைபெற்றது . பெரிய நட்சத்திர நடிகர்கள் கிடையாது இயக்குனருக்கு பெரிதாக அனுபவமும் கிடையாது இருப்பினும் இந்த படம் எதிர் பார்ப்பை பூர்த்தி செய்து இருந்தது.இந்த படத்தில் ஹீரோவாக பிரபல நடிகை பேபி ஷாலினியின் அண்ணனும், அஜித்தின் மைத்துனருமான ரீச்சர்ட் நடித்து இருந்தார். என்னதான் அஜித்தின் மைத்துனர் ஆக இருந்தாலும் இவருக்கு சினிமாவில் ஒரு நிலையான அங்கீகாரம் கிடைக்கவில்லை.

-விளம்பரம்-

சினிமாவில் நான்கு ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் திரௌபதி படத்தின் மூலம் ஒரு மாஸ் என்ட்ரியில் மீண்டும் தமிழ் சினிமாவில் களம் இறங்கி இருந்தார்.திரௌபதி படத்தை தொடர்ந்து ரிச்சர்ட்டை வைத்து மீண்டும் ஒரு படத்தை எடுக்க இருக்கிறார் மோகன். அந்த படத்திற்கு ‘ருத்ர தாண்டவம்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் குக்கு வித் கோமாளி தர்ஷா முக்கிய கதாபத்திரத்தில் நடிக்கிறார்.

- Advertisement -

சமீபத்தில் இயக்குனர் மோகன், இயக்குனர் மணிரத்னத்துக்கு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்து ட்வீட் ஒன்றை போட்டிருந்தார். மேலும், பல இயக்குனர்களுக்கு நீங்கள் தான் ஊக்கம். உங்களின் பொன்னியின் செல்வன் படத்திற்காக காத்துகொண்டு இருக்கிறோம் என்று பதிவிட்டு இருந்தார். இதற்கு ரசிகர் ஒருவர், உனக்கு மட்டும் கண்டிப்பா மணிரத்னம் inspiration ஆக இருக்க மாட்டார், காரணம் அவரின் students or fans உன்ன மாதிரி கேவளமான படமெல்லாம் எடுக்க மாட்டார்கள் என்று பதிவிட்டு இருந்தார்.

இதற்கு பதில் அளித்த மோகன், அவரோட உதவி இயக்குனர்கள் யாருடா இன்னிக்கு பெரிய இயக்குனராக இருக்காங்க. சும்மா வாயில வந்ததை எல்லாம் பேசாதீங்கடா என்று பதிவிட்டு இருந்தார். இவர் இராவணன் குறித்து போட்ட ஒரு ட்வீட், இயக்குனர் மணிரத்னத்தை மறைமுகமாக தாக்குவதாக இருக்கிறது என்று புதிய சர்ச்சை கிளம்பியது. அந்த டீவீட்டில், அடுத்தவன் வீட்டு பெண்களை ஆள் இல்லாதப்ப தூக்கிட்டு போறவனை கொண்டாடுறதும், அந்த வகையறா நாங்க அப்படின்னு பெருமையா பேசுறது எல்லாம் வேற லெவல் ப்ரோ.. வேற வேற லெவல்.. கலக்குங்க ப்ரோ என்று பதிவிட்டதோடு, மணிரத்தினம் இயக்கிய ’ராவணன்’ படத்தின் ஒரு புகைபடத்தையும் பதிவு செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement