ராதிகாவை வீட்டை விட்டு வெளியே போக சொல்லும் கோபி, ஈஸ்வரியை காப்பாற்ற போராடும் பாக்கியா- பாக்கியலட்சுமி

0
462
- Advertisement -

விஜய் டிவியில் டிஆர்பியில் முன்னிலை வகுக்கும் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ரா நடிக்கிறார். இவரை அடுத்து இந்த தொடரில் சதீஸ், ரேஷ்மா, நேகா என பலர் நடித்து வருகிறார்கள். சீரியலில் பாக்கியாவை அவர் கணவர் கோபி விவாகரத்து செய்து ராதிகாவை இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறார். விவகாரத்திற்கு பின் பாக்கியா கேண்டீன், சமையல், கல்லூரி என்று சுற்றி கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

பின் ராதிகா கர்ப்பமாக இருந்த உண்மை வீட்டில் எல்லோருக்கும் தெரிந்து அதிர்ச்சி ஆகி கோபியை திட்டி இருந்தார்கள். ஈஸ்வரிக்கு, ராதிகா குழந்தையை பெற்று கொள்வதில் விருப்பம் இல்லை, கலைத்து விடு என்று சொன்னார். இறுதியில் கோபி, ஈஸ்வரியை தன்னோடு அழைத்து கொண்டு ராதிகா வீட்டிற்கு சென்று இருந்தார். அதற்கு பின் வீட்டில் கலவரங்கள் நடந்தது. கடந்த வாரம், கால் தடுமாறி ராதிகா கீழே விழுந்ததால் கர்ப்பம் கலைந்தது என்று மருத்துவர்கள் சொன்னார்கள். இதனைக் கேட்டு கோபமடைந்த ராதிகா, ஈஸ்வரியை பயங்கரமாக திட்டி தீர்த்தார்.

- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியல்:

அதேசமயம் ராதிகா அம்மா, கோபி எல்லோரும் ஈஸ்வரியை தான் திட்டி இருந்தார்கள். பின் கோபி, தன் அம்மாவை வீட்டை விட்டு வெளியே போக சொன்னார். இதனால் மனமுடைந்த ஈஸ்வரி, பாக்கியா வீட்டிற்கு வந்து விட்டார். இருந்தாலும் கோபி சொன்னதை நினைத்து அழுது கொண்டே இருந்தார் ஈஸ்வரி. இதனால் அவரை பாக்கியா வெளியில் அழைத்து சென்று இருந்தார். இந்த நேரத்தில் ராதிகா அம்மா, போலீஸ் ஸ்டேஷனில் ஈஸ்வரி மீது புகார் கொடுத்து விட்டார். இதனால் போலீசும் ஈஸ்வரியை கைது செய்து விடுகிறது. இதை பார்த்து மொத்த குடும்பமே அதிர்ச்சி ஆகிறது.

சீரியல் கதை:

இன்னொரு பக்கம் கோபி, ராதிகா, கமலா மீது பயங்கரமாக கோபப்படுகிறார். மேலும், நீதிமன்றத்தில் ஈஸ்வரி, நான் எந்த தவறும் செய்யவில்லை என்று அழுகிறார். அதை அடுத்து ராதிகாவிடம் விசாரித்தபோது அவர், ஈஸ்வரி தான் என்னை தள்ளிவிட்டார் என்று சொல்கிறார். கோபியை விசாரித்தபோது என் அம்மா குழந்தை வேண்டாம் என்று சொன்னது உண்மைதான் என்று சொல்கிறார். எல்லா பக்கமும் ஈஸ்வரிக்கு எதிராக இருக்கிறது. இதனால் ஈஸ்வரியை நீதிமன்ற காவலில் வைக்க வேண்டும் என்று நீதிபதி உத்தர விடுகிறார்கள்.

-விளம்பரம்-

சீரியல் ட்ராக்:

என்ன செய்வது என்று புரியாமல் பாக்கியா குடும்பம் திகைத்துப் போய் நிற்கிறது. அப்போது பார்க்கில் இருந்த மையூ, என்னுடைய அம்மா பூ ஜாடி தடிக்கி தான் கீழே விழுந்தார். ஈஸ்வரி பாட்டி தள்ளிவிடவில்லை. அவர் காப்பாற்ற தான் சென்றார். அதை நான் பார்த்தேன் என்று சொன்னதைக் கேட்டு பாக்கியா அதிர்ச்சி ஆகிறார். இதை பாக்கியா வக்கீல் இடம் சொல்கிறார். அதற்கு அவர், இந்த உண்மையை கோர்ட்டில் சொன்னால் தான் ஈஸ்வரியை வெளியே எடுக்க முடியும் என்று சொல்கிறார். இந்நிலையில் இன்றைய எபிசோடில், கோபி, ராதிகா அவருடைய அம்மாவை பயங்கரமாக திட்டி வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார்.

இன்றைய எபிசோட்:

அதற்கு அவர்கள் போகமாட்டோம், இங்கு தான் இருப்போம் என்று சொல்கிறார்கள். இன்னொரு பக்கம் கோர்ட்டில் ஈஸ்வரி கேஸ் விசாரணைக்கு வருகிறது. இதனால் எல்லோருமே கோர்ட்டுக்கு வந்து விட்டார்கள். ஆனால், பாக்யா மட்டும் வரவில்லை. எங்கு போனார் என்று தெரியவில்லை. இனி வரும் நாட்களில் மையூ சாட்சி சொல்வாரா? பாக்கியா என்ன செய்யப் போகிறார்? ராதிகா அம்மா திட்டம் நிறைவேறுமா? போன்ற விறுவிறுப்பான கட்டத்துடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

Advertisement