விஜய் டிவியில் டிஆர்பியில் முன்னிலை வகுக்கும் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. சீரியலில் பாக்கியாவை அவர் கணவர் கோபி விவாகரத்து செய்து ராதிகாவை இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறார். விவகாரத்திற்கு பின் பாக்கியா கேண்டீன், சமையல், கல்லூரி என்று சுற்றி கொண்டிருக்கிறார். பின் ராதிகா கர்ப்பமாக இருந்தார். ஆனால், எதிர்பாராத விதமாக கால் தடுமாறி ராதிகா கீழே விழுந்ததால் கர்ப்பம் கலைந்து விட்டது. இதனால் கோபமடைந்த ராதிகா, ஈஸ்வரியை பயங்கரமாக திட்டி தீர்த்தார். பின் கோபி, தன் அம்மாவை வீட்டை விட்டு வெளியே போக சொன்னார்.
இந்த நேரத்தில் ராதிகா அம்மா, போலீஸ் ஸ்டேஷனில் ஈஸ்வரி மீது புகார் கொடுத்து விட்டார். இதனால் போலீசும் ஈஸ்வரியை கைது செய்தது. மேலும், நீதிமன்றத்தில் எல்லா பக்கமும் ஈஸ்வரிக்கு எதிராக இருந்ததால் ஈஸ்வரியை நீதிமன்ற காவலில் வைத்து இருந்தார்கள். அப்போது பார்க்கில் இருந்த மையூ, என்னுடைய அம்மா பூ ஜாடி தடிக்கி தான் கீழே விழுந்தார். ஈஸ்வரி பாட்டி தள்ளிவிடவில்லை. அவர் காப்பாற்ற சென்றதை நான் பார்த்தேன் என்று சொன்னதைக் கேட்டு பாக்கியா அதிர்ச்சி ஆகி இருந்தார். பின் மயூ சொன்ன சாட்சியை ஏற்று நீதிமன்றம் ஈஸ்வரி வழக்கை தள்ளுபடி செய்தது. மொத்த குடும்பமும் சந்தோஷமாகி இருக்கிறது.
பாக்கியலட்சுமி சீரியல்:
பின் ராதிகா, கமலா மீது கோபப்பட்டு பேசி இருந்தார். கடைசியில் கமலா வீட்டை விற்று சென்று விட்டார். பின் கோபி, தன்னுடைய அம்மா ஈஸ்வரிடம் மனம் விட்டு அழுது மன்னிப்பு கேட்டார். ஆனால், கோபத்தில் ஈஸ்வரி, இனி எனக்கு மகனே இல்லை. எனக்கு இருப்பது ஒரே மகள் பாக்யா தான். நான் இறந்த பிறகு கூட என்னுடைய சாவிற்கு நீ வரக்கூடாது என்று தலையில் தண்ணீர் எடுத்து ஊற்றிக் கொண்டார். கோபி எதுவும் பேச முடியாமல் மனம் நொந்து வெளியே வந்து விட்டார். இந்த சூழ்நிலையில் சென்னையில் சமையல் போட்டி நடக்கிறது. அதில் பாக்கியா-கோபி இருவரும் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.
சமையல் போட்டி:
சமையல் போட்டியும் மும்முரமாக நடைபெற்றது. இன்னொரு பக்கம் இனியா தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து படிக்க செல்கிறேன் என்று பொய் சொல்லி பார்ட்டியில் ஆட்டம் பாட்டம் என்று சந்தோசமாக இருந்தார். அப்போது இனியா போன் எடுக்கவில்லை என்ற பதட்டத்தில் செழியனிடம் சொல்கிறார் பாக்கியா. செழியன், இனியாவை தேடி அலைந்து இருந்தார். ஆனால், பார்ட்டியில் நண்பர்களுக்குள் இடையில் சண்டை வந்ததால் போலீசிக்கு தகவலை சொல்லி விடுகிறார்கள். போலீஸ் வந்து அனைவரையுமே கைது செய்ய பார்க்கிறது. அந்த சமயம் அங்கு வந்த ராதிகாவிடம் நடந்தது குறித்து இனியா சொல்லி அழுகிறார்.
ராதிகா செய்த வேலை:
பின் ராதிகா, இனியாவை காப்பாற்றுகிறார். அதற்கு பின் செழியனுக்கு போன் செய்து வரவைத்தார். அதனை அடுத்து ராதிகா, இனியா கையை பிடித்து உன் அம்மா இங்க வர வேண்டும், அதுவரையும் நான் இனியாவை போக விடமாட்டேன் என்று சொன்னதைக் கேட்டு இனியா-செழியன் இருவருமே அதிர்ச்சி ஆகிறார்கள். நேற்று எபிசோடில், பார்ட்டி நடந்த இடத்திற்கு பாக்கியாவை வர வைத்து நடந்ததை ராதிகா சொன்னதைக் கேட்டு அதிர்ந்து போகிறார் பாக்யா. பாக்கியம் எதுவும் பேசாமல் கையெடுத்து கும்பிட்டு நன்றி என்று ராதிகாவிடம் சொல்கிறார்.
இன்றைய எபிசோட் :
இந்த நிலையில் எல்லோரும் கிளம்பி வந்து விடுகிறார்கள். சமையல் போட்டியில் கோபி நன்றாக சமைத்து வெற்றி பெற்று விடுகிறார். பின் அவர் செல்வியை வம்பிழுத்து, உங்க பாக்கியா அம்மா எங்கே பயந்து ஓடி விட்டாரா? என்று கிண்டலடித்து பேசுகிறார். இன்னொரு பக்கம் வீட்டில் எல்லோருமே இனியாவை திட்டிக் கொண்டிருக்கிறார்கள். எதுவுமே பேச முடியாமல் நடந்ததை நினைத்துப் பார்த்து பாக்கி அழுகிறார். கடைசியில் இனியாவை அடித்து, உன்னால் தான் எல்லா பிரச்சனையும் வருகிறது என்று திட்டிக் கொண்டிருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது. இனி வரும் நாட்களில் இனியா பிரச்சனையில் மாட்டிய விஷயம் கோபிக்கு தெரிய வருமா? பாக்கியா என்ன முடிவு எடுக்கப் போகிறார்? போன்ற விறுவிறுப்பில் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.