தன் அம்மாவை ஆசையாக பார்க்க வந்த கோபி, கோபத்தில் ஈஸ்வரி செய்த செயல்- விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி

0
642
- Advertisement -

பரபரப்பான கட்டத்துடன் ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் புது புரோமோ வீடியோ தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. விஜய் டிவியில் டிஆர்பியில் முன்னிலை வகுக்கும் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ரா நடிக்கிறார். இவரை அடுத்து இந்த தொடரில் சதீஸ், ரேஷ்மா, நேகா என பலர் நடித்து வருகிறார்கள். சீரியலில் பாக்கியாவை அவர் கணவர் கோபி விவாகரத்து செய்து ராதிகாவை இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறார். விவகாரத்திற்கு பின் பாக்கியா கேண்டீன், சமையல், கல்லூரி என்று சுற்றி கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

பின் ராதிகா கர்ப்பமாக இருந்த உண்மை வீட்டில் எல்லோருக்கும் தெரிந்து அதிர்ச்சி ஆகி கோபியை திட்டி இருந்தார்கள். ஈஸ்வரிக்கு, ராதிகா குழந்தையை பெற்று கொள்வதில் விருப்பம் இல்லை, கலைத்து விடு என்று சொன்னார். இறுதியில் கோபி, ஈஸ்வரியை தன்னோடு அழைத்து கொண்டு ராதிகா வீட்டிற்கு சென்று இருந்தார். அதற்கு பின் வீட்டில் கலவரங்கள் நடந்தது. கடந்த வாரம், கால் தடுமாறி ராதிகா கீழே விழுந்ததால் கர்ப்பம் கலைந்தது என்று மருத்துவர்கள் சொன்னார்கள். இதனைக் கேட்டு கோபமடைந்த ராதிகா, ஈஸ்வரியை பயங்கரமாக திட்டி தீர்த்தார்.

- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியல்:

அதேசமயம் ராதிகா அம்மா, கோபி எல்லோரும் ஈஸ்வரியை தான் திட்டி இருந்தார்கள். பின் கோபி, தன் அம்மாவை வீட்டை விட்டு வெளியே போக சொன்னார். இதனால் மனமுடைந்த ஈஸ்வரி, பாக்கியா வீட்டிற்கு வந்து விட்டார். இருந்தாலும் கோபி சொன்னதை நினைத்து அழுது கொண்டே இருந்தார் ஈஸ்வரி. இந்த நேரத்தில் ராதிகா அம்மா, போலீஸ் ஸ்டேஷனில் ஈஸ்வரி மீது புகார் கொடுத்து விட்டார். இதனால் போலீசும் ஈஸ்வரியை கைது செய்தது. இதனால் மொத்த குடும்பமும் உடைந்து விட்டது. இன்னொரு பக்கம் ராதிகா, கமலா மீது கோபி பயங்கரமாக கோபப்படுகிறார்.

ஈஸ்வரி கைது:

மேலும், நீதிமன்றத்தில் ஈஸ்வரி, நான் எந்த தவறும் செய்யவில்லை என்று அழுகிறார். அதை அடுத்து ராதிகா, கோபியிடம் விசாரித்தார்கள். எல்லா பக்கமும் ஈஸ்வரிக்கு எதிராக இருக்கிறது. இதனால் ஈஸ்வரியை நீதிமன்ற காவலில் வைக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். என்ன செய்வது என்று புரியாமல் பாக்கியா குடும்பம் திகைத்துப் போய் நின்றது. அப்போது பார்க்கில் இருந்த மையூ, என்னுடைய அம்மா பூ ஜாடி தடிக்கி தான் கீழே விழுந்தார். ஈஸ்வரி பாட்டி தள்ளிவிடவில்லை. அவர் காப்பாற்ற தான் சென்றார். அதை நான் பார்த்தேன் என்று சொன்னதைக் கேட்டு பாக்கியா அதிர்ச்சி ஆகிறார்.

-விளம்பரம்-

கோர்ட் விசாரணை:

மேலும், நேற்று எபிசோடில் கோர்ட்டில் ஈஸ்வரி கேஸ் விசாரணைக்கு வருகிறது. இதனால் எல்லோருமே கோர்ட்டுக்கு வந்து விட்டார்கள். நீதிமன்றத்தில், ஈஸ்வரி தான் ராதிகாவை தள்ளிவிட்டார் என்பதற்கான ஆதாரங்கள் சரியாக இருக்கிறது. இதனால் ஈஸ்வரிக்கு தண்டனை வழங்கப்படும் என்று நீதிபதி சொல்கிறார். அந்த சமயத்தில் பாக்கியா, கோர்டுக்கு மயூவை அழைத்துக்கொண்டு வந்தார். இதை பார்த்து ராதிகா, கமலா எல்லோருமே ஷாக் ஆகி இருந்தார்கள். கூண்டில் ஏறிய மையூ, ஈஸ்வரி பாட்டி தள்ளிவிடவில்லை. அம்மா பூ ஜாடி தடுக்கி கீழே விழுந்தார் என்று சொல்ல எல்லோருமே அதிர்ச்சியாகி விடுகிறார்கள்.

சீரியல் புது ப்ரோமோ:

இந்த நிலையில் இன்று எபிசோட்டில், மயூ சொன்ன சாட்சியை ஏற்று நீதிமன்றம் ஈஸ்வரி வழக்கை தள்ளுபடி செய்து விடுகிறது. ஈஸ்வரியும் விடுதலை ஆகிறார். இதனால் மொத்த குடும்பமும் சந்தோஷமாக இருக்கிறது. ஆனால், ராதிகா- கமலா கோபத்தில் இருக்கிறார்கள். ஒரு வழியாக ஈஸ்வரி வீட்டுக்கு வந்து விடுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது. இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஈஸ்வரியை பார்க்க கோபி வீட்டிற்கு வருகிறார். கோபியை பார்த்தவுடன் ஈஸ்வரி கோபத்தில், நீ என் மகனே கிடையாது. எனக்கு ஒரே ஒரு மகள் பாக்கியா தான். உன்னை இன்றோடு தலைமுழுகி விடுகிறேன் என்று தண்ணீரை எடுத்து தலையில் ஊற்றுகிறார். இதை பார்த்து அதிர்ச்சியில் கோபி நிற்கிறார். இனி வரும் நாட்களில் கோபியை ஈஸ்வரி ஏற்றுக் கொள்வாரா? இந்த பொய் வழக்கால் கோபி- ராதிகா இடையே விரிசல் ஏற்படுமா? போன்ற விறுவிறுப்பான கட்டத்துடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

Advertisement