விஜய் டிவியில் டிஆர்பியில் முன்னிலை வகுக்கும் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ரா நடிக்கிறார். இவரை அடுத்து இந்த தொடரில் சதீஸ், ரேஷ்மா, நேகா என பலர் நடித்து வருகிறார்கள். சீரியலில் பாக்கியாவை அவர் கணவர் கோபி விவாகரத்து செய்து ராதிகாவை இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறார்.
விவகாரத்திற்கு பின் பாக்கியா கேண்டீன், சமையல், கல்லூரி என்று சுற்றி கொண்டிருக்கிறார். பின் கோபியும் பாக்கியாவிற்கு போட்டியாக ரெஸ்ட்ராண்ட் திறந்தார். இன்னொரு பக்கம் ராதிகா கர்ப்பமாக திறந்தார். பின் வீட்டில் எல்லோருக்கும் இந்த உண்மை தெரிந்து அதிர்ச்சி ஆகி கோபியை திட்டினார்கள். ஈஸ்வரிக்கு, ராதிகா குழந்தையை பெற்று கொள்வதில் விருப்பம் இல்லை, கலைத்து விடு என்று சொன்னார். இறுதியில் கோபி, ஈஸ்வரியை தன்னோடு அழைத்து கொண்டு ராதிகா வீட்டிற்கு சென்று விட்டார்.
பாக்கியலட்சுமி சீரியல்:
கடந்த சில வாரங்களாக ஈஸ்வரி, ராதிகா அம்மா இடையே கலாட்டா கலவரங்கள் நடந்தது. ஈஸ்வரி வந்தது ராதிகா அம்மாவிற்கு பிடிக்கவில்லை. இப்படி இருக்கும் நிலையில், கடந்த வாரம் கால் தடுமாறி ராதிகா கீழே விழுந்து விடுகிறார். இதனால் மருத்துவர்கள், ராதிகா கர்ப்பம் கலைந்துவிட்டது என்று சொல்கிறார்கள். இதனைக் கேட்டு கோபமடைந்த ராதிகா, உங்க அம்மா தான் என்னை தள்ளிவிட்டார். உங்க அம்மா தான் என் குழந்தை கொன்று விட்டார். குழந்தை வேண்டாம் என்று சொல்லி சொல்லி கடைசியில் குழந்தையே இல்லாமல் போய்விட்டது என்று வருத்தப்பட்டு ராதிகா பேசுகிறார்.
ராதிகா கர்ப்பம் கலைந்தது:
ராதிகா அம்மா பயங்கரமாக ஈஸ்வரியை திட்டுகிறார். இதையெல்லாம் கேட்டு கோபி, தன் அம்மா மீது கோபப்படுகிறார். பின் ஈஸ்வரி, நான் எதையும் செய்யவில்லை, பொய் சொல்கிறார்கள் என்று அழுகிறார். இருந்தும் கோபி, நீங்கள் நினைத்தபடி குழந்தை கலைந்துவிட்டது சந்தோசமா என்று திட்டுகிறார். மேலும், ஈஸ்வரியை வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார் ராதிகா. கோபியும் தன் அம்மாவை வெளியே போக சொன்னார். இதனால் மனமுடைந்த ஈஸ்வரி, பாக்கியா வீட்டிற்கு சென்று விடுகிறார். இருந்தாலும் கோபி சொன்னதை நினைத்து அழுது கொண்டே இருக்கிறார்.
சீரியல் ட்ராக்:
பின் அவரை பாக்கியா வெளியில் அழைத்துக் கொண்டு செல்கிறார். மேலும், ராதிகா அம்மா, போலீஸ் ஸ்டேஷனில் ஈஸ்வரி மீது புகார் கொடுக்கிறார். இதனால் போலீசும் ஈஸ்வரியை கைது செய்ய பாக்கியா வீட்டிற்கு வருகிறது. ஆனால், அங்கு ஈஸ்வரி இல்லை. இன்னொரு பக்கம், ராதிகா கோபியை நினைத்து புலம்பி இருந்தார். அப்போது ராதிகா அம்மா, இனி கவலைப்பட வேண்டாம். ஈஸ்வரி மீது புகார் கொடுத்து விட்டேன் என்று சொல்கிறார். இதை கேட்டு ராதிகா அதிர்ச்சியாகி இருக்கிறார். நேற்று எபிசோடில் போலீஸ் வந்து ஈஸ்வரியை கைது செய்கிறார்கள். இதை பார்த்து மொத்த குடும்பமே அதிர்ச்சி ஆகிறது.
சீரியல் ப்ரோமோ:
பின் கோபியை அவருடைய அப்பா பயங்கரமாக அடிக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், நீதிமன்றத்தில் ஈஸ்வரி நான் எந்த தவறும் செய்யவில்லை என்று அழுகிறார். ராதிகாவிடம் விசாரித்தபோது அவர் ஈஸ்வரி தான் என்னை தள்ளிவிட்டார் என்று சொல்கிறார். கோபி விசாரித்தபோது என் அம்மா குழந்தை வேண்டாம் என்று சொன்னது உண்மைதான் என்று சொல்கிறார். எல்லா பக்கமும் ஈஸ்வரிக்கு எதிராக இருப்பதால் ஈஸ்வரியை நீதிமன்றம் கஸ்டடியில் வைத்து விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிடுகிறார் நீதிபதி. இனிவரும் நாட்களில் ஈஸ்வரி விடுதலை ஆவாரா? கோபி என்ன செய்யப் போகிறார்? பாக்கியா எடுக்கும் முடிவு என்ன? போன்ற பரபரப்பான கட்டத்துடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.