தன்னை பற்றி விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை நேஹா வெளியிட்டு இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. இதனால் இந்த சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

மேலும், இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும், பாக்கியா கணவர் கோபி கதாபாத்திரத்தில் சதீசும் நடித்து வருகிறார்கள். இந்த தொடர், குடும்ப பெண்கள் எல்லோரும் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள், போராடுகிறார்கள் என்பதை மையப்படுத்திய கதை. நாளுக்கு நாள் பாக்கியா உடைய கதாபாத்திரம் குடும்ப பெண்களுக்கு முன் உதாரணமாகவும், எடுத்துக்காட்டாகவும் இருக்கிறது. பெண்கள் யாருக்கும் சளைத்தவர் இல்லை என்பதை இந்த சீரியல் உணர்த்துகிறது.
பாக்கியலட்சுமி சீரியல்:
தற்போது சீரியலில் இனியா செல்வியின் மகன் ஆகாஷை காதலிக்கிறான் என்று தெரிந்தவுடன் அவசர அவசரமாக சுதாகரின் மகன் நிதிஷுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். சுதாகர், பாக்கியாவின் ரெஸ்டாரண்டை யாருக்குமே தெரியாமல் அபகரித்து விடுகிறார். இதனால் பாக்கியா மனம் உடைந்து, ஒரு சின்ன ஹோட்டல் ஆரம்பித்திருக்கிறார். பின் பாக்கியா ரெஸ்டாரண்டை சுதாகர் தான் அபகரித்தார் என்ற விஷயம் இனியாவிற்கு தெரிந்து விடுகிறது. இருந்தாலுமே அவரால் எதுவுமே செய்ய முடியவில்லை.

சீரியல் ட்ராக்:
பின் இனியா, ஆகாஷை காதலித்தார் என்ற விஷயம் நிதிஷுக்கு தெரிந்ததிலிருந்து அவர் நடவடிக்கைகள் சரியே இல்லை. நிதிஷ் போதைப் பொருளுக்கு அடிமையாகி இருக்கிறார். ஆனால், இந்த விஷயம் தெரியாமல் இனியாவை திருமணம் செய்து வைத்துவிடுகிறார்கள். கடைசியில் இனியாவிற்கு நிதிஷ் போதை பழக்கத்திற்கு அடிமையாகி கைதான விஷயம் தெரிந்து விடுகிறது. இதனால் அவர் ரொம்பவே மனமடைந்து விடுகிறார். இனி அடுத்து என்ன? என்று விறுவிறுப்பில் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

பாக்கியலட்சுமி நேஹா:
மேலும், இந்த சீரியலில் இனியா கதாபாத்திரத்தில் நடிகை நேஹா நடித்துக் கொண்டு வருகிறார். இவர் இதற்கு முன்பே நிறைய சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். குறிப்பாக சன் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த சித்தி தொடரில் இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றிருந்தது. இதை அடுத்து பாக்கியலட்சுமி சீரியலின் மூலம் இவர் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை பிடித்து இருக்கிறார். இது மட்டுமில்லாமல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் லட்சுமி வந்தாச்சு என்ற தொடரிலும் நேகா நடித்துக் கொண்டிருக்கிறார்.
View this post on Instagram
நேஹா வீடியோ:
இது ஒரு பக்கம் இருக்க, கடந்த சில மாதங்களாகவே பாக்கியலட்சுமி தொடரில் இனியா நடன போட்டியில் கலந்து நடனம் ஆடியிருந்த வீடியோ சோசியல் மீடியாவில் பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டிருக்கிறது. பலரும் இனியா நடனத்தை கிண்டல் கேலி செய்திருந்தார்கள். அதற்காக இனியா விளக்கம் அளித்து இருந்தார்.இருந்தும் அவரை அவருடைய நடனம் வீடியோக்கள் ட்ரோல் செய்யப்படுகிறது. இந்நிலையில் இது தொடர்பாக இனியா போட்ட பதிவில், அய்யய்யோ இவரு மூஞ்சிய பாத்தியா, இவரு மூஞ்சி அப்படியே சோப்பு விளம்பரத்துல வர்ற மாடல் மாதிரியே இருக்காருல. குரங்கு கடிச்ச கொய்யாக்கா மாதிரி ஒரு மூஞ்சி. இவங்க என் மூஞ்ச குறை சொல்றாங்க என்று ரீல்ஸ் செய்து இருக்கிறார்.






