விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் தாத்தாவின் 80 ஆவது நாள் பிறந்தநாளை கொண்டாட ஈஸ்வரி, எழிலை கூப்பிட்டார். ஆனால், எழில் வர மறுத்தார். இதனால் ஈஸ்வரி வருத்தப்பட்டு இருந்தார். பின் ராமமூர்த்தியின் 80 ஆவது பிறந்தநாளை கொண்டாட எல்லோருமே கோவிலுக்கு போய் இருந்தார்கள். கோவிலில் தடபுடலாக தாத்தாவின் பிறந்த நாள் நடந்தது. தாத்தாவின் பிறந்தநாளுக்கு உறவினர்கள், நண்பர்கள் எல்லோரும் வந்து இருந்தார்கள். பின் தாத்தா- பாட்டி இருவரும் மாலை மாற்றிக் கொள்ளும் போது எழில் வந்து நின்றார்.

இதை பார்த்தவுடன் மொத்த குடும்பமே சந்தோஷப்பட்டது. உண்மை அறிந்த கோபி கோவிலுக்கு வந்தார். கோபியை பார்த்தவுடன் மொத்த பேருமே அதிர்ச்சியாக, ராமமூர்த்தி கோபப்பட்டு பேசி இருந்தார். பின் ஈஸ்வரி- ராமமூர்த்தி எவ்வளவு திட்டியும், அசிங்கப்படுத்தியும் கோபி கிளம்பாமல் அங்கே இருந்தார். அதன் பின் எல்லோருமே ஈஸ்வரி- ராமமூர்த்தி இடம் ஆசிர்வாதம் வாங்கி இருந்தார்கள். கடைசியில் கோபி கொடுத்த கிப்ட் தூக்கி எரிந்து ஆசீர்வாதம் பண்ணாமல் ராமமூர்த்தி திட்டி விட்டார். உடனே கோபி, தன் அம்மாவிடம் மன்னிப்பு கேட்க, ஈஸ்வரி கோபமாக திட்டி இருந்தார்.
பாக்கியலட்சுமி சீரியல்:
மேலும், பாக்கியா வீட்டில் எல்லோரும் சந்தோசமாக பேசி இருந்தார்கள். ராமமூர்த்தி, நான் பேசணும், மனசுக்கு நிறைவாக இருக்கிறது என்று சொல்லி பேசிக் கொண்டிருந்தார். கடந்த வாரம் ராமமூர்த்தி தூக்கம் வராமல் அவஸ்தைப் பட்டுக் கொண்டிருந்தார். அப்போது ஈஸ்வரி, ஏன் தூங்கவில்லையா? என்று கேட்டதற்கு இல்லை, நீ தூங்கு என்று சொல்லிவிட்டு நெஞ்சு, கழுத்து வலிப்பது போல ரொம்ப சிரமப்பட்டார். பின் வெளியில் வந்து ஹாலில் சுத்தி எல்லாத்தையும் பார்த்து வேதனை படுவது போல் இருந்தார். அதன் பின் ஈஸ்வரி, அவரை சமாளித்து தூங்க வைத்தார்.

ராமமூர்த்தி இறப்பு:
மறுநாள் வீட்டில் எல்லோரும் பேசிக் கொண்டிருக்க ஈஸ்வரி, ராமமூர்த்தியை எழுப்பி இருந்தார். ஆனால், ராமமூர்த்தி எழவே இல்லை. பயத்தில் ஈஸ்வரி கத்த மொத்த குடும்பமே வந்து ராமமூர்த்தியை எழுப்பி இருந்தார்கள். ஆனால், அவர் எழவே இல்லை. உடனே பயத்தில் மருத்துவரை வரவைத்து செக் பண்ணுகிறார்கள். அப்போது அவர் இறந்துவிட்டார் என்று சொன்னவுடன் மொத்த குடும்பமும் அதிர்ச்சியாகி அழுகிறார்கள்.

இன்றைய எபிசோட்:
ராமமூர்த்தி இறந்ததை நம்பவும் முடியாமல், ஏற்று கொள்ள முடியாமல் மொத்த குடும்பமும் பரிதவித்து நிற்கிறது. ஈஸ்வரி மட்டும் அதிர்ச்சியில் உறைந்து விடுகிறார். பின் வீட்டிற்கு எல்லோருமே வந்து ராமமூர்த்தியை பார்க்கிறார்கள். வெளியில் இருந்து பார்த்த கோபி, என்ன பிரச்சனை? என்று உள்ளே வந்து பார்த்தவுடன் தன்னுடைய தந்தை இறந்ததை அறிந்து ரொம்ப வருத்தப்படுகிறார். இதை அவர் ராதிகாவிடம் சொல்லி அவரையும் கூட்டிக் கொண்டு வருகிறார். கோபி, தன்னுடைய அப்பாவை நினைத்து ரொம்பவே வருத்தப்பட்டு கதறி கதறி அழுகிறார். ராதிகாவும் ஆறுதல் சொல்லுகிறார். மொத்த குடும்பமே சோகத்தில் இருக்கிறது.
https://www.youtube.com/watch?v=e68tTrQw3RQ
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், ராமமூர்த்திக்கு இறுதி சடங்குகளை செய்ய சொல்கிறார்கள். கோபி எழுந்து வருகிறார். உடனே ஈஸ்வரி, நீ செய்யாதே கோபி. நீ செய்தால் உங்க அப்பாவின் உடைய ஆத்மா கூட சாந்தி அடையாது. பாக்யா நீ இறுதி சடங்கை செய் என்று சொன்னவுடன் கோபி காலில் விழுந்து கெஞ்சுகிறார். இருந்தாலும் ஈஸ்வரி ஒத்துக்கொள்ளவில்லை. கடைசியில் பாக்யா தான் தன்னுடைய மாமனாரின் இறுதி சடங்குகளை செய்து அவருக்கு கொல்லி வைத்து கதறி அழுகிறார்.






