ஈஸ்வரியை வீட்டை விட்டு வெளியே போக சொல்லும் ராதிகா, அசிங்கப்படுத்திய கோபி- விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி

0
399
- Advertisement -

விஜய் டிவியில் டிஆர்பியில் முன்னிலை வகுக்கும் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ரா நடிக்கிறார். இவரை அடுத்து இந்த தொடரில் சதீஸ், ரேஷ்மா, நேகா என பலர் நடித்து வருகிறார்கள். சீரியலில் பாக்கியாவை அவர் கணவர் கோபி விவாகரத்து செய்து ராதிகாவை இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறார்.

-விளம்பரம்-

விவகாரத்திற்கு பின் பாக்கியா கேண்டீன், சமையல், கல்லூரி என்று பாக்கியா சுற்றி கொண்டிருக்கிறார். பின் கோபியும் பாக்கியாவிற்கு போட்டியாக ரெஸ்ட்ராண்ட் திறந்தார். இன்னொரு பக்கம் ராதிகா கர்ப்பமாக இருக்கிறார். பின் வீட்டில் எல்லோருக்கும் இந்த உண்மை தெரிந்து அதிர்ச்சி ஆகி கோபியை திட்டுகிறார்கள். ஈஸ்வரிக்கு, ராதிகா குழந்தையை பெற்று கொள்வதில் விருப்பம் இல்லை, கலைத்து விடு என்று சொல்கிறார். இறுதியில் கோபி, ஈஸ்வரியை தன்னோடு அழைத்து கொண்டு ராதிகா வீட்டிற்கு சென்று விடுகிறார்.

- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியல்:

கடந்த சில வாரங்களாக ஈஸ்வரி, ராதிகா அம்மா இடையே கலாட்டா கலவரங்கள் சென்றது. ஈஸ்வரி வந்தது ராதிகா அம்மாவிற்கு பிடிக்கவில்லை. ஈஸ்வரி தன்னுடைய வேலையை ஆரம்பித்து விட்டார். அவர் வேணும் என்றே ராதிகா, அவருடைய அம்மாவை வம்பிழுப்பது கொண்டு இருந்தார். பின் ஈஸ்வரி மயக்கம் போட்டு விழுந்தார். இதனால் கோபி, ராதிகா மீது பயங்கரமாக கோபப்பட்டார். அதற்குப் பின் தன்னுடைய அம்மாவை கோபியே நன்றாக கவனித்துக் கொண்டிருக்கிறார். ஹோட்டல் வேலை பார்ப்பது, தன்னுடைய அம்மாவை கவனிப்பது என்று பம்பரம் போல கோபி சுத்திக் கொண்டிருக்கிறார்.

சீரியல் கதை:

இதை பார்க்கும் ராதிகாவிற்கு கோபம் கோபமாக வருகிறது. மேலும், இனியா பிறந்த நாளின் போது பாக்கியாவை பழனிசாமிக்கு திருமணம் செய்து வைப்பது குறித்த விஷயம் கோபிக்கு தெரிகிறது. இதனால் கோபி, பாக்கியாவிடம் பயங்கரமாக கோபப்பட்டு பேசுகிறார். அதன் பின் பாக்கியா, பழனிச்சாமி அம்மாவிடம் நாங்கள் நண்பர்கள் என்று சொல்லி விடுகிறார். இப்படி இருக்கும் நிலையில், கால் தடுமாறி ராதிகா கீழே விழுந்து விடுகிறார். இதனால் மருத்துவர்கள், ராதிகா கர்ப்பம் கலைந்துவிட்டது என்று சொல்கிறார்கள்.

-விளம்பரம்-

ராதிகா கர்ப்பம் கலைந்தது:

இதனைக் கேட்டு கோபமடைந்த ராதிகா, உன் அம்மா தான் என்னை தள்ளிவிட்டார் என்று சொல்கிறார். குழந்தை வேண்டாம் என்று சொல்லி சொல்லி கடைசியில் என் குழந்தையே இல்லாமல் போய்விட்டது என்று வருத்தப்பட்டு ராதிகா பேசுகிறார். ராதிகா அம்மா பயங்கரமாக ஈஸ்வரியை திட்டுகிறார். கோபியிடம் ராதிகா, உங்க அம்மா தான் என் குழந்தை கொன்று விட்டார். அவர்கள் தள்ளி தான் நான் கீழே விழுந்தேன் என்று பொய் சொல்லுகிறார். இதையெல்லாம் கேட்டு கோபி, தன் அம்மா மீது கோபப்படுகிறார்.

இன்றைய எபிசோட்:

ஈஸ்வரி, நான் எதையும் செய்யவில்லை. இவர்கள் பொய் சொல்கிறார்கள் என்று அழுகிறார். இருந்தும் கோபி, நீங்கள் நினைத்தபடி குழந்தை கலைந்துவிட்டது சந்தோசமா! என்று அவருடைய அம்மாவை திட்டுகிறார். மனவேதனையில் ஈஸ்வரி இருக்கிறார். பின் வீட்டிற்கு வந்த ராதிகா, ஈஸ்வரியை பார்த்து வீட்டை விட்டு வெளியே போங்க என்று சொல்கிறார். ஆனால், ஈஸ்வரி அழுது கொண்டே கோபியிடம் நான் எந்த தவறும் செய்யவில்லை என்று சொல்கிறார். ஆனால் கோபி, தயவுசெய்து இந்த வீட்டை விட்டுப் போங்கள் என்று சொல்கிறார். இதைக் கேட்டு அதிர்ச்சியாகி ஈஸ்வரி இருக்கிறார். இனி வரும் நாட்களில் கோபியின் சுயரூபத்தை ஈஸ்வரி அறிவாரா? ராதிகா சூழ்ச்சி வெளிவருமா? பாக்கியா என்ன செய்யப் போகிறார்? போன்ற பரபரப்புடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது

Advertisement