விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் ராமமூர்த்தி இறந்துவிட்டார் என்று சொன்னவுடன் மொத்த குடும்பமும் நம்பவும் முடியாமல், ஏற்று கொள்ள முடியாமல் பரிதவித்து இருந்தது. ஒவ்வொருவருமே தாத்தாவை நினைத்து புலம்பி அழுது இருந்தார்கள். கடந்த வாரம், இறுதி சடங்கு செய்ய கோபி தயாராகி இருந்தார். ஆனால் ஈஸ்வரி, நீ செய்யக்கூடாது. என்னுடைய புருசனின் கடைசி ஆசையே அதுதான் என்று சொன்னவுடன் எல்லோருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. உடனே கோபி, என்னுடைய அப்பாவிற்கு நான் தான் இறுதி சடங்கு செய்வேன் என்று அழுது கெஞ்சி இருந்தார்.
இருந்தாலுமே, ஈஸ்வரி ஏற்றுக் கொள்ளவில்லை. பின் மகள் இடத்தில் இருந்து எல்லாமே பாக்கியா செய்வாள் என்று சொன்னவுடன் கோபி ஒத்து கொள்ளவில்லை. கடைசியில் பாக்கியா தன்னுடைய மாமனாருக்கு இறுதி சடங்குகளை எல்லாம் செய்தார். ராமமூர்த்தியை மயான பூமிக்கு எடுத்து சென்றார்கள். பாக்கியா தான் கடைசி சடங்குகளை எல்லாம் செய்து கதறி கதறி அழுதார். கோபி ஓரமாக நின்று எதுவும் செய்ய முடியவில்லை என்ற வருத்தத்தில் இருந்தார். அதன் பின் வேதனையில் ஈஸ்வரி, பாக்யாவின் மடியில் படுத்து ராமமூர்த்தியின் உடைய பழைய நினைவுகளை பகிர்ந்து இருந்தார்.
பாக்கியலட்சுமி சீரியல்:
பின் இனியா தன்னுடைய தாத்தாவை பற்றி பேசி அழ, எழில் சமாதானம் செய்து அனுப்பி விட்டு தனியாக நின்று வருத்தப்பட்டார். பாக்கியா வரும்போதும் சேரில் ராமமூர்த்தி உட்கார்ந்திருப்பது போல பார்த்து கதறி அழுதார். மறுநாள் ராமமூர்த்தியின் அஸ்தியை செழியன்,எழில் வாங்கி வந்தார்கள். அப்போது கோபி, ராதிகாவும் மயானத்திற்கு போயி அஸ்தியை வாங்கி இருந்தார். இன்னொரு பக்கம் வீட்டில் ஜெனியை தங்களுடன் அழைத்து செல்வதற்கு அவரின் அப்பா- அம்மா பேச, எல்லோருமே ஒத்துக் கொள்கிறார்கள். ஆனால், ஜெனி மட்டும் வரமாட்டேன் என்று அடம் பிடித்தார்.
சீரியல் கதை:
நேற்று எபிசோடில், ராமமூர்த்தியின் அஸ்தியை வைத்த வீட்டில் சாமி கும்பிட்டு கங்கையில் கரைத்தார்கள்.
இன்னொரு பக்கம் கோபியும் தன்னுடைய அப்பாவின் அஸ்தியை கங்கையில் கரைத்தார். எல்லா சடங்குகளையும் எழில் செய்து முடித்துவிட்டு தாத்தாவை பற்றி நினைத்து வருத்தப்பட்டு பேச, செழியன் ஆறுதல் சொல்லி இருந்தார். நேற்று எபிசோடில், ராமமூர்த்தியை நினைத்து ஈஸ்வரி வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார். அப்போது எல்லோருமே வீட்டில் தங்களுடைய அடுத்த வேலைகளை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். உடனே பாக்கியா, ஈஸ்வரிக்கு நெத்தியில் பொட்டு வைத்து, நீங்கள் இப்படி இருந்தால் தான் மாமாவுக்கு பிடிக்கும் என்று சொல்கிறார்.
இன்றைய எபிசோட்:
மறுநாள் செழியன்-எழில் வாக்கிங் போகும்போது கோபியும் வாக்கிங் சென்றிருந்தார். அவர்கள் பெரிதாக அவரிடம் பேசவில்லை . அப்போது ஒருவர் கோபியிடம், ராமமூர்த்திக்கு பத்தி பேசி வம்பு இழக்க, ஆத்திரத்தில் கோபி கத்துகிறார். உடனே செழியன் தடுத்து சமாதானம் செய்து அனுப்பி விடுகிறார். அதற்குப் பின் இனியா கல்லூரிக்கு செல்லும் போது தன்னுடைய தாத்தாவை பார்த்து அழ, உடனே ஈஸ்வரி அவருக்கு ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தார். இந்நிலையில் இன்றைய எபிசோடில், ராமமூர்த்தியின் துணிகளை எடுத்து அடுக்கிக் கொண்டிருந்தார்கள்.
சீரியல் ட்ராக்:
அப்போது அவர் கடிதம் எழுதி வைத்த விஷயம் தெரிகிறது. உயில் பத்தியும் எழுதிய விஷயம் தெரிகிறது. பின் எல்லோரையுமே ஹாலில் வரவைத்து ஈஸ்வரி, செழியனிடம் உயிலை கொடுத்து படிக்க சொல்கிறார். அதைக் கேட்டு அனைவருமே கண் கலங்குகிறார்கள். பின் ஒவ்வொருவருக்கும் எழுதிய கடிதத்தை எடுத்துப் படிக்கிறார்கள். ஈஸ்வரி, ராமமூர்த்தியின் கடிதத்தை படித்து மனம் உடைந்து அழுகிறார். பின் பாக்கியாவுக்கு ஆறுதல் சொல்லி ராமமூர்த்தி பேசியிருக்கிறார். அதைப் படித்து பாக்கி தேம்பி அழுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.