பாடலில் பெரியார் வரி முதல், முக்கிய சீன் வரை – ரீ ரிலீஸ் ஆன பாபா படத்தில் இவ்வளவு மாற்றங்களா?

0
523
rajini
- Advertisement -

முக்கிய சீன்ஸ் படத்தில் மாற்றி ரீ ரிலீஸ் செய்யப்பட்ட பாபா படம் குறித்து ரசிகர்கள் கூறி இருக்கும் கருத்து தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். 80 காலகட்டம் தொடங்கி தற்போது வரை இவர் எண்ணற்ற படங்களில் நடித்து இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருக்கிறது.

-விளம்பரம்-

இதனால் இவருக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும், வசூலில் கோடிகளை குவித்து இருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து ரஜினி அவர்கள் தற்போது ஜெயிலர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு அனிரூத் இசை அமைக்கிறார். இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

- Advertisement -

ஜெயிலர் படம்:

இவர்களுடன் பிரியங்கா மோகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கிளி அரவிந்த், இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் உட்பட பலர் இந்த படத்தில் நடிக்கிறார்கள். மேலும், இந்த படம் 2023 ஆம் ஆண்டு வெளியாகும் என்று கூறப்படுகிறது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை அடுத்து ரஜினி அவர்கள் இரண்டு படங்களில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

பாபா படம்:

இப்படி ஒரு நிலையில் ரஜினி நடிப்பில் 20 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியாகி வெளியாகி இருக்கும் பாபா திரைப்படம் தற்போது திரையரங்கில் ரீ ரிலீஸ் ஆகி இருக்கிறது. இந்த புதிய பாபா படத்தில் சில மாற்றங்களை படக்குழுவினர் செய்திருக்கிறார்கள்.அதாவது, பாபா படத்தின் ரஜினி அறிமுக காட்சியை நீக்கி பாபா வந்துட்டு இருக்கான் என்று அவருடைய அம்மா கூறும் போது அடுத்த காட்சியே டிப்பு டிப்பு என்ற காட்சி வருகிறது.

-விளம்பரம்-

பெரியார் ராஜாஜி வரிகள் நீக்கம் :

படத்தில் ரஜினி தன்னுடைய நண்பர்களுடன் மது அருந்தும் காட்சிகள் எல்லாம் நீக்கப்பட்டு இருக்கிறது. அத்துடன் ரியாஸ்கான் உடன் சண்டைக்காட்சியும் குறைக்கப்பட்டு இருக்கிறது. மனிஷா கொய்ராலா வரும்போது ரஜினியின் காட்சி நீக்கப்பட்டிருக்கிறது. அதே போல இந்த படத்தில் ரஜினி நாத்திகனாக இருந்து ஆத்திகனாக மாறும் போது வரும் ராஜ்யமா, இமையமா பாடலில் ரஜினி திருநீர் பூசும் போது வரும் ‘அதிசயம் அதிசயம் பெரியார் தான் ஆனதென்ன ராஜாஜி’ என்ற வரிகளும் நீக்கப்பட்டு இருக்கிறது.

மாற்றங்கள் செய்த காட்சி:

நண்பரை மட்டும் வீட்டிற்குள் இருக்க சொல்லி நல்ல வரைவு பெற்ற காட்சியையும் நீக்கி இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் ரஜினிக்கு அளிக்கப்பட்ட ஏழு மந்திரங்கள் ஐந்தாக குறைக்கப்பட்டு இருக்கிறது. ரம்யா கிருஷ்ணன் இடம் பெற்ற படையப்பா காட்சி எல்லாம் நீக்கப்பட்டிருக்கிறது. இப்படி பல காட்சிகள் பாபா படத்தில் மாற்றங்கள் செய்திருந்தாலும் புதிய பாபா ரசிகர்கள் மத்தியில் திருப்தி அளித்திருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement