ஓணம் புடவையில் அசத்திய விஸ்வாசம் குழந்தை நட்சத்திரம் பேபி அனிகா.! லைக்ஸ் அள்ளுது.!

0
18778
baby anikha
- Advertisement -

தமிழ் திரைப்படங்களில் மகத்தான வெற்றி கொடுத்த என்னைஅறிந்தால், விசுவாசம் ஆகிய படங்களில் தல அஜித்குமாருக்கு மகளாக நடித்த அனிகா சுரேந்தர் ஓணம் பண்டிகையை கொண்டாடினர்.அந்த ஓணம் பண்டிகையில் அனிகா அழகான உடை அணிந்தும் ,அருமையான அலங்காரத்துடன் காட்சி கொடுக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. கண் வைக்கும் அளவுக்கு அழகாக இருக்கும் அஜித் மகளின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் தன்னுடைய கருத்துக்களை இணையங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Image

அதுமட்டுமில்லாமல் விஜய் டிவியின் சீரியல் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் அணிகா சுரேந்தர் புகைப்படத்தை பார்த்து பேரழகி என்றும் சினிமா துறையில் கதாநாயகியாக நடிக்க பல வாய்ப்புகள் உள்ளன என்றும்,ஓணம் வாழ்த்துக்கள் குறித்தும் பதிவிட்டுள்ளார். மேலும் அணிகா சுரேந்தர் கூறியது என்னை அறிந்தால், விசுவாசம் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக தல அஜித் அப்பாவின் அறுபதாவது படத்தில் நடிக்கப் போகிறேன் என்று ஆச்சரியமூட்டும், சுவையான தகவலை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

மேலும், தலையின் 60 ஆவது படத்தின் படப்பிடிப்பை துவங்கப் போகிறது என்று பகிரங்கமாக இணையதளங்களில் தகவல் வெளிவராத நிலையில் ட்விட்டர் பக்கத்தில் அஜித் அப்பாவுடன் மூன்றாவது முறையாக நடிக்கப் போகிறேன் என்று அதிக சந்தோஷத்தில் கூறியுள்ளார் நடிகை அனிகா.மேலும் அனிகா அவருடன் இரு படங்களில் மகளாக நடித்ததனாலே என்னவோ அவரை பார்த்தால் எனக்கு அப்பா உணர்வு ஏற்படுகிறது. அவரை நான் “பப்பா” என்று தான் அழைப்பேன் என்றும் கூறியுள்ளார்.

இந்த செய்தி அஜித் ரசிகர்களிடையே அதிக வரவேற்பையும்,பேர் அதிர்ச்சியையும் ஏற்பட்டிருந்தது. ஒரு சில பேருக்கு அனிக்காக தான் அஜித்தின் உண்மையான மகள் என்ற அளவிற்கு அவருடைய நடிப்பு இருந்தது. இந்த நிலையில் கேரளாவில் கோலாகலமாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெள்ளைப் புடவை உடுத்தியும்,அழகான வெளிர் ரோஸ் கலர் தாமரைப்பூவை கூந்தலின் ஓரத்தில் வைத்தும், அழகான அணிகலன்கள் உடன் அலங்காரமாக பேரழகியாக காட்சி தரும் புகைப்படம் அனிகா பதிவிட்டிருந்தார்.

-விளம்பரம்-
Image

அந்த உடையில் இருந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலர் தன்னுடைய கருத்துக்களை பதிவு செய்தனர். பலரும் பல பதிவுகள் செய்த நிலையில் விஜய் டிவியின் தொகுப்பாளராகவும் , நடிகையுமான ஜாக்லின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அனிகா குறித்து பதிவிட்டு உள்ளார்.அனிகா நீங்கள் செம அழகாக இருக்கீங்க !! மேலும் நீங்கள் கூடிய விரைவில் கதாநாயகியாக வர என்னுடைய வாழ்த்துக்களும்என்றும் ஓணம் வாழ்த்துக்களை தெரிவித்தார். கண் வைக்கிற அளவுக்கு அழகாக இருக்கிறீர்கள் சுத்தி போடுங்கள் என்றும் கூறினார்.கண்ணு படும் அளவிற்கு அவருடைய புகைப்படத்தை ரசிகர்கள் வர்ணித்து தல்லுகிறார்கள்.

Advertisement