"தெய்வத்திருமகள் " படத்திற்கு பிறகு தமிழில் "சித்திரையில் நிலாச்சோறு, சைவம்,விழித்திரு" போன்ற படங்களில் நடித்திருந்தார் பேபி சாரா. தற்போது ஹலிதா சமீம் என்ற பெண் இயக்குனர் இயக்கவுள்ள புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் பேபி சாரா.
இயக்குனர் ஹலிதா சமீம் தமிழில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளிவந்த "பூவரசம் பீப்பி " என்ற படத்தை இயக்கியிருந்தார். தற்போது இவர் இயக்கவுள்ள புதிய படத்தில் சமுத்திரக்கனி, நடிகை சுனைனா லீலா சாம்சன் போன்றவர்கள் நடிக்கவுள்ளனர். இந்த படத்தில் 4 கதைகள் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இயக்குனர் ஹலிதா சமீம்:
மேலும், இந்த படத்தில் அபிநந்தன் ராமானுஜன், மனோஜ் பரமஹம்சா, விஜய் கார்த்திக், யாமினி யாக்ன மூர்த்தி போன்ற 4 ஒளிப்பதிவாளர்களும் பணியாற்ற உள்ளனர். படத்திற்கு சந்தோஷ் நாராயணின் உதவியாளராக உள்ள பிரதீப் குமார் என்பவர் இசையமைக்கவுள்ளார். படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது.




