அஜித் மாமனார் தொடங்கிய யூடுயூப் சேனல் – MS குரலில் பாடி நடித்த ஷாலினியின் தந்தை. வைரலாகும் வீடியோ.

0
1934
Ajith
- Advertisement -

அஜித்தின் மாமனார் டி எம் எஸ் குரலில் பாடி அசத்திருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக அல்டிமேட் ஸ்டார் ஆக ஜொலித்துக் கொண்டிருப்பவர் அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த வகையில் கடைசியாக அஜித் நடிப்பில் வெளியாகியிருந்த படம் துணிவு.

-விளம்பரம்-

இந்த படத்தை இயக்குனர் வினோத் இயக்கி இருக்கிறார். போனி கபூர் இந்த படத்தை தயாரித்து இருக்கிறார். வங்கி கொள்ளையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் வசூலில் நல்ல சாதனை செய்து இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து தற்போது அஜித் அவர்கள் விடாமுயற்சி என்ற படத்தில் நடிக்க இருக்கிறார்.

- Advertisement -

அஜித் நடிக்கும் படம்:

இந்த படத்தை மகிழ்ந்திருமேனி இயக்க இருக்கிறார். கூடிய விரைவில் இந்த படத்தினுடைய படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது. ரசிகர்கள் விடாமுயற்சியின் அப்டேட்டுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் அஜித்தின் மாமனார் வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

ஷாலினியின் தந்தை:

அஜித் அவர்கள் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டது அனைவரும் அறிந்ததே. திருமணத்திற்கு பின் நடிகை ஷாலினி நடிக்கவில்லை. மேலும், நடிகை ஷாலினியின் தந்தை பெயர் தான் பாபு. இவர் இசையின் மீது அதிக ஆர்வம் கொண்டவர். தமிழ் சினிமாவில் 50, 60களில் வெளிவந்த பாடல்கள் என்றால் இவருக்கு மிகவும் பிடிக்கும். இவர் டி.எம்.சௌந்தரராஜனின் தீவிர ரசிகர்.

-விளம்பரம்-

ஷாலினி தந்தை குறித்த தகவல்:

இதனால டிஎம்எஸ்ஸை அண்ணா என்று தான் குறிப்பிடுவார்கள். மேலும், இவர் பொழுதுபோக்குக்காக நிறைய ஆர்கெஸ்ட்ரா நிகழ்ச்சிகளில் டிஎம்எஸ்ஸின் பாடல்கள் எல்லாம் பாடி இருக்கிறார். இவருடைய குரல் அப்படியே டி எம் எஸ் குரல் போல இருப்பதால் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்நிலையில் தற்போது இவர் எ எஸ் பி என்ற பெயரில் யூடியூப் சேனலை தொடங்கி இருக்கிறார்.

குவியும் பாராட்டுக்கள்:

அதில் யார் அந்த நிலவு, ஆயிரத்தில் ஒருவன் படத்தில் எல்லாம் இடம் பெற்று பாடல்களை பாடி நடித்து இருக்கிறார் பாபு. இந்த இரண்டு பாடல்களும் டி எம் சௌந்தரராஜன் குரலிலேயே இருக்கிறது. தற்போது இந்த இரண்டு பாடல்கள்தான் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. தற்போது ஷாலினியின் தந்தை பாட்டு வீடியோ தான் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இனியும் இவர் வீடியோக்களை யூடியூபில் பதிவு இடுவார் என்றும் கூறப்படுகிறது.

Advertisement