நான் ஓவியராவதற்கு காரணம் அஜித்தின் மகள் தான் என்று நடிகை ஷாமிலி அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பேபி ஷாலினியாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை ஷாலினி. இவர் தன்னுடைய மூன்று வயதிலேயே சினிமா துறையில் நடிக்க தொடங்கி விட்டார். பின் இவர் தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் மட்டும் 90 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார். திருமணத்திற்கு பின் ஷாலினி அவர்கள் சினிமாவில் நடிக்கவில்லை.

மேலும், நடிகை ஷாலினியின் தங்கை தான் ஷாமிலி. இவர் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருக்கிறார். இருந்தாலும், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அஞ்சலி திரைப்படத்தின் மூலம் தான் ஷாமிலி பெரும் பிரபலம் அடைந்தார். இதற்காக இவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. அதன் பின்னர் தமிழில் துர்கா, தைப்பூசம், செந்தூர தேவி என்று பல படங்களில் நடித்திருக்கிறார். மேலும், இவர் தமிழில் கதாநாயகியாக சில படங்களில் நடித்திருக்கிறார்.

Advertisement

பின் இவர் இறுதியாக விக்ரம் பிரபு நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான வீர சிவாஜி படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் இவர் தமிழில் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தி கொண்டார். இந்தநிலையில் நடிகை ஷாமிலியின் ஓவிய திறமை குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, தமிழ் சினிமா உலகில் அல்டிமேட் ஸ்டார் ஆக ஜொலித்துக் கொண்டிருக்கும் அஜித் அவர்கள் நடிப்பை தாண்டி கார் ரேஸ் துப்பாக்கி சுடுதலில் அதிக ஆர்வம் கொண்டவர்.

அதேபோல் இவருடைய மனைவி ஷாலினி பேட்மிட்டன் மீது பிரியம் கொண்டவர். ஷாலினியின் தங்கை ஷாமிலிக்கு ஓவியத்தின் மீது அதிக பிரியம் உடையவர். இவர் நடிப்பை தாண்டி ஓவியத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டவர். தற்போது இவர் தான் வரைந்த ஓவியங்களை she என்ற தலைப்பில் கண்காட்சியாக வைத்திருக்கிறார். இந்த கண்காட்சி நிகழ்ச்சியில் இயக்குனர் மணிரத்தினம், இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான், தோட்டா தரணி, ஷாலினி, அஜித்தின் மகள் அனோஷ்கா, அஜித்தின் மகன் ஆத்விக் என பலருமே கலந்து கொண்டு இருந்தார்கள்.

Advertisement

அது மட்டுமில்லாமல் இவர் துபாய் உட்பட பல வெளிநாடுகளிலும் ஓவிய கண்காட்சியை நடத்தி இருக்கிறார். ஷாமிலி அவர்கள் சிங்கப்பூரில் உள்ள லசால் கலைக் கல்லூரியில் விஷுவல் ஆர்ட்ஸில் டிப்ளமோ பட்டம் பெற்றிருக்கிறார். பின் இவர் ஃபிலிம் மேக்கிங் கோர்ஸும் முடித்து இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் பாரீஸ் கலைக் கல்லூரியில் பயிற்சி, சிங்கப்பூரில் சீன இங்க் (Chinese ink), புளோரன்ஸ் அகாடமியா ரியாசியில் கண்ணாடி ஓவியம் வரைவதில் இவர் திறமை பெற்றவர். இப்படி ஷாமிலி பல திறமைகளை கொண்டிருப்பதை பார்த்து பலரும் பாராட்டி இருந்தார்கள்.

ஷாமிலி அளித்த பேட்டி:

இந்நிலையில் தான் ஓவியம் வரைவதற்கான காரணம் குறித்து ஷாமிலி பேட்டி ஒன்று அளித்து இருக்கிறார். அதில் அவர், நான் ஓவியம் வரைவதற்கு காரணம் அஜித்தின் மகள் அனோஷ்கா தான். ஓவியர் ஏவி இளங்கோ சார் பெயிண்டிங்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும். தொன்மத்தையும் நவீனத்தையும் ஒன்று சேர அவர் ஓவியங்கள் பிரதிபலிக்கும். இளங்கோ சாரிடம் அனோஷ்கா ஓவியம் கற்றுக் கொண்டிருந்தார். அவளை ட்ராயிங் கிளாஸ்க்கு கூட்டிட்டு போயிட்டு வந்தது நான் தான். அதனால் தான் எனக்கு ஓவியத்தின் மீது அதிக ஈடுபாடு வந்தது. ஓவியம் வரைவது மட்டுமில்லாமல் அதை புரிந்து கொள்வதும் ஒரு கலை தான் என்பதை தெரிந்து கொண்டேன் என்று கூறியிருக்கிறார்.

Advertisement