இது Lol இல்ல ஜொள்ளு, திவ்ய பாரதி ரசிகர் வெளியிட்ட காஜித்தனமான எடிட் வீடியோ (ஜி வி பிரகாஷ் கூட இதெல்லாம் பண்ணலயே)

0
539
divya
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் ரசிகர்களின் கிரஸ்ஸாக திகழ்பவர் திவ்ய பாரதி. இவர் பிரபல மாடல் ஆவார். இதன் மூலம் தான் இவருக்கு சினிமா பட வாய்ப்பு கிடைத்தது. சமீபத்தில் திவ்யா பாரதி நடிப்பில் வெளிவந்த படம் ‘பேச்சுலர் ‘. இந்த படத்தை இயக்குனர் சதீஷ் செல்வகுமார் இயக்கி இருக்கிறார். மேலும், இந்த படத்தில் ஜி வி பிரகாஷ், முனிஸ்காந்த், பகவதி பெருமாள் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் மற்றும் ஜான் லோகேஷ் எடிட்டிங் செய்திருக்கிறார். இந்த படத்தை ஆக்சஸ் பிலிம் பேக்டரி தயாரித்திருக்கிறார்கள். இந்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்த படத்தில் ஜி வி பிரகாஷுக்கு ஜோடியாக திவ்யா பாரதி நடித்துள்ளார்.

-விளம்பரம்-

இந்த படத்தின் மூலம் தான் திவ்ய பாரதி தமிழ் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்து உள்ளார். அதுமட்டும் இல்லாமல் முதல் படத்தின் மூலம் இன்றைய இளைஞர்களின் மனதை கவர்ந்து இருக்கிறார் என்று சொல்லலாம். மேலும், இந்த படத்தை தொடர்ந்து திவ்யபாரதி அவர்கள் மதில் மேல் காதல் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் அஞ்சனா அலிகான் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் ஹீரோவாக முகென் நடித்திருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் முகென்.

- Advertisement -

திவ்ய பாரதி நடிக்கும் மதில் மேல் காதல்:

அதோடு முகென் மிக சிறந்த பாடகர் என்பது குறிப்பிடத்தக்கது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் இவர் வேலன் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், திவ்ய பாரதி நடிக்கும் மதில் மேல் காதல் படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். இவர்களுடன் இந்த படத்தில் சாக்ஷி அகர்வால், நிழல்கள் ரவி, அனுஹாசன், சுப்பு பஞ்சு என பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் மே மாதம் திரைக்கு வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சோசியல் மீடியாவில் திவ்யபாரதி:

இப்படி பிரபல மாடல் ஆன திவ்யா இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமானவர். மாடல் ஆக இருந்ததால் இவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது வழக்கம்.
இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். அதில் தான் அடிக்கடி நடத்தும் போட்டோஷூட் புகைப்படங்கள்,வீடியோக்கள், ரசிகர்களுடன் உடன் உரையாடல் என எல்லாம் பகிர்ந்து உள்ளார்.அதிலும் இவர் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.

-விளம்பரம்-

திவ்யபாரதி கல்லூரி புகைப்படம்:

இது குறித்து பல விமர்சனங்கள் எழுந்தது. சமீபத்தில் கூட இவர் கல்லூரி காலத்தில் இருக்கும் போது எடுத்த புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது. இதை பார்த்து பலரும் உண்மையிலேயே இவர் தான் திவ்யபாரதியா! என்று எல்லாம் கேட்டு இருந்தார்கள். இப்படி இவர் பதிவிடும் புகைப்படத்திற்கு இவரை சோசியல் மீடியாவில் எக்கச்சக்கமான ரசிகர்கள் ஃபாலோ செய்கிறார்கள். இந்த நிலையில் இவருடைய ரசிகர் ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அது என்னவென்றால்,

வைரலாகும் திவ்யபாரதி வீடியோ:

திவ்யபாரதி அருகில் அந்த நபர் இருக்கும் மாதிரி எடிட் செய்து காதல் பாடல் என்றை எடிட் செய்து வீடியோவாக பதிவிட்டு இதை பாருங்கள் என்று டேக் செய்திருக்கிறார். உடனே இதை பார்த்த திவ்யபாரதி மற்ற பிரபலங்களை போல் திட்டாமல் விமர்சிக்காமல் lol என்று சிரிக்கும் இமோஜியை போட்டிருக்கிறார். இதை பார்த்த நெட்டிசன்கள், ரசிகர்கள் பலரும் என்ன கொடும சார் இது, திவ்யபாரதிக்கு வந்த சோதனையா? இது என்ன கொடுமை அக்கா, என்ன என்ன பண்றான் பாரு என்று பல மீம்ஸ்களையும் ட்ரோல்களையும் போட்டு வருகின்றார்கள். தற்போது திவ்யபாரதியின் இந்த வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement