ப்பா, பேச்சுளர் படத்தில் இளசுகளின் நெஞ்சை கொள்ளை கொண்ட திவ்ய பாரதிய இது – கல்லூரி புகைப்படத்தில் எங்க இருக்கார்னு கூட கண்டுபிடிக்க முடியல.

0
2870
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் உள்ள பிரபலமான நடிகர்களில் ஒருவராக ஜி.வி.பிரகாஷ் இருக்கிறார். இவர் தமிழ் சினிமா உலகில் இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பல துறைகளில் கலக்கி கொண்டு இருக்கிறார். இவர் இசைத்துறையில் புகழ்பெற்ற ஏ.ஆர்.ரகுமானின் அக்கா மகன் ஆவார். இவர் சினிமா துறையில் முதன் முதலாக வெயில் படத்தில் தான் இசை அமைத்து அறிமுகமானார். இந்த படத்தில் வெளிவந்த பாடல்கள் மூலம் மக்களிடையே இவருக்கு அதிக வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தை தொடர்ந்து இவர் நிறைய படங்களில் இசை அமைத்து இருக்கிறார்.

-விளம்பரம்-

அதுமட்டும் இல்லாமல் இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார். இவர் நடித்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் ஜி வி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த படம் ‘பேச்சுலர் ‘. இந்த படத்தை இயக்குனர் சதீஷ் செல்வகுமார் இயக்கி இருக்கிறார். மேலும், இந்த படத்தில் திவ்யா பாரதி, முனிஸ்காந்த், பகவதி பெருமாள் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் மற்றும் ஜான் லோகேஷ் எடிட்டிங் செய்திருக்கிறார்.

- Advertisement -

பேச்சுலர் படம்:

இந்த படத்தை ஆக்சஸ் பிலிம் பேக்டரி தயாரித்திருக்கிறார்கள். இந்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்த படத்தில் ஜி வி பிரகாஷுக்கு ஜோடியாக திவ்யா பாரதி என்பவர் நடித்துள்ளார். இவர் பிரபல மாடல் ஆவார். இந்த படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி கொடுக்கவுள்ளார். அதோடு இந்த படத்தின் மூலம் தற்போது இளைஞர்களின் கிரஸ் ஆகவே திவ்யபாரதி திகழ்கிறார் என்று சொல்லலாம்.

திவ்யபாரதி நடிக்கும் படங்கள்:

இந்த படத்தை தொடர்ந்து திவ்யபாரதி அவர்கள் மதில் மேல் காதல் என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.
இந்த படத்தை இயக்குனர் அஞ்சனா அலிகான் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் ஹீரோவாக முகென் நடித்திருக்கிறார். இதற்கு முன்பு இவர் வேலன் என்ற படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நிவாஸ் கே பிரசன்னா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இவர்களுடன் இந்த படத்தில் சாக்ஷி அகர்வால், நிழல்கள் ரவி, அனுஹாசன், சுப்பு பஞ்சு என பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் மே மாதம் திரைக்கு வெளியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-

சோசியல் மீடியாவில் திவ்யபாரதி :

இப்படி பிரபல மாடல் ஆன திவ்யா இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. மாடல் ஆக இருந்ததால் இவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது வழக்கம். இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். அதில் தான் அடிக்கடி நடத்தும் போட்டோஷூட் புகைப்படங்கள் எல்லாம் பகிர்ந்து உள்ளார். சமீபத்தில் கூட இவர் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.

திவ்யபாரதி கல்லூரி புகைப்படம்:

இது குறித்து பல விமர்சனங்கள் எழுந்தது. இந்த நிலையில் தற்போது அவருடைய புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. அதை பார்த்து பலரும் வியந்து போனார்கள் என்று சொல்லலாம். அது என்னவென்றால், இவர் கல்லூரி காலத்தில் இருக்கும் போது எடுத்த புகைப்படம் தான் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இதை பார்த்து பலரும் உண்மையிலேயே இவர் தான் திவ்யபாரதியா! கல்லூரியில் படித்தபோது இருப்பதற்கும் இப்போ இருப்பதற்கும் சம்பந்தம் இல்லை. அந்த அளவிற்கு மாறி உள்ளார் என்று ரசிகர்கள் கமெண்ட் போட்டு இவருடைய புகைப்படத்தை வைரலாகி வருகிறார்க்ள.

Advertisement