‘Bad Girl’ படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் வர்ஷா பரத் பேசியது தான் தற்போது சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது. அனுராக் காஷ்யப் மற்றும் வெற்றிமாறன் இணைந்து கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில் வெற்றிமாறனின் உதவி இயக்குனரான வர்ஷா பரத்தின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘Bad Girl’. இப்படத்தில் அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, ஹ்ரிது ஹருண், ‘Teejay’ அருணாச்சலம் மற்றும் சரண்யா ரவிச்சந்திரன் நடித்திருக்கிறார்கள்.
அப்போ திருமதி ஆர்த்தி வெற்றிமாறன் பத்தினி இல்லைனு சொல்லுதா இந்த பைத்தியம்? அவனும் உக்காந்து சிரிக்கிறான்.🤔pic.twitter.com/xBW0qXjd2O
— Ramya Mohan (@_Ramya_mohan_) January 27, 2025
இந்தப் படத்தின் டீசர் வெளியீடு விழா சமீபத்தில் சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. டீசர் வெளியீட்டு விழாவில் படத்தின் தயாரிப்பாளர்களான வெற்றிமாறன் மற்றும் அனுராக் காஷ்யப், இயக்குனர் வர்ஷா பரத், நடிகர்கள், படத்தின் எடிட்டரான ராதா ஸ்ரீதர் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக கலைப்புலி எஸ். தானு, இயக்குனர் மிஷ்கின், நடிகை டாப்ஸி பண்ணு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஒரு பெண்ணின் வாழ்க்கையிலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ‘பேட் கேர்ள்’ படத்தின் டீசரை விருந்தினர்கள் அனைவரும் பார்த்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
கலாச்சார சீரழிவு:
இந்தப் படம் இளம் பெண்ணின் காதல், தனிப்பட்ட விருப்பங்களில் அவர்களின் சுதந்திரமான முடிவு எப்படி இருக்கும் என்பதை மையப்படுத்தி உருவாகி இருக்கிறது. இதுவரை திரைக்கு வராத கதைகளை இயக்க வேண்டும் என்ற பெயரில், சில இயக்குனர்கள் கலாச்சார சீரழிவை முன்னிறுத்துவதாக, இந்த டீசரை பார்த்த பின்னர் நெட்டிசன்கள் பலர் தங்களின் ஆதங்கத்தை பதிவிட்டு வருகிறார்கள். அதேபோல் பிராமண சமூகத்தை முன்னிறுத்தி ஏன் இந்த படத்தில் நடிக்கும் பெண்ணின் கதாபாத்திரத்தை வடிவமைத்திருக்க வேண்டும் என்கிற குற்றச்சாட்டுகளையும் வைத்து வருகிறார்கள்.
வெற்றிமாறன் அவன் வீட்டு பெண்களை இப்படி அனுப்பிதான் இயக்குனர்&தயாரிப்பாளர் ஆனானோ!??💦 pic.twitter.com/ZbQLtnZizM
— T.சுப்ரமணியன்.வள்ளாத்தேவர்.( மோடியின் குடும்பம்) (@Tsubramaniyan14) January 27, 2025
இயக்குனர் வர்ஷா பரத் பேச்சு:
அதேபோல் இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் வர்ஷா பரத், தமிழ் மெயின் ஸ்ட்ரீம் சினிமாக்களில், எப்பவுமே எப்படி கதை எழுதுகிறார்கள் என்றால் பெண் என்றால் ஒரு பூ, ஒரு பத்தினி, ஒரு தெய்வம், தாய், தூய்மை அந்த மாதிரி நிறைய விஷயங்கள் இருக்கு. இது எல்லாம் ஒரு பெண் தோளில் சுமப்பதற்கு அழுத்தமாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். அதனால் நான் பெண்களுக்கு தகுந்த மாதிரியான ஒரு கதாபாத்திரத்தை உருவாக்க நினைச்சேன். அந்தக் கதாபாத்திரத்தை கேட்டு ராதா எப்படி ரியாக்ட் பண்ணாங்களோ, அதே மாதிரி தான் எல்லா பெண்களும் ரியாக்ட் பண்ணுவாங்க. ஆனா, பசங்க கிட்ட இருந்து ஒரு மிக்ஸ்ட் ரியாக்ஷன் தான் வந்தது என்று பேசி இருந்தார்.
அதிகரிக்கும் கண்டனங்கள்:
ஆனா, பசங்க கிட்ட இருந்து ஒரு மிக்ஸ்ட் ரியாக்ஷன் தான் வந்தது என்று பேசி இருந்தார். தற்போது இவரின் பேச்சு, தமிழகத்தின் கலாச்சார முறையை சீரழிக்கும் விதத்தில் உள்ளதாக பலர் தங்களின் கட்டணத்தை எழுப்பி வருகிறார்கள். அதேபோல் பள்ளி படிக்கும் பெண்ணை எப்படி தவறாக இயக்குனர் சித்தரிக்க முடியும் என்ற கேள்வியையும் தற்போது ஒரு பக்கம் எழுந்து வருகிறது. அதேபோல் கடைசி வரைக்கும் மக்களுக்கு எந்த ஒரு நல்ல கருத்தும் சொல்ல கூடாதுன்னு வெற்றிமாறன் முடிவு பண்ணிட்டாரு என்பது போல் இணையவாசிகள் கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.
மோகன் ஜி:
அதே நேரம் பா ரஞ்சித், போன்ற பலர் இந்த படத்தின் டீசருக்கு வாழ்த்து கூறி வரவேற்பு தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. அதற்கு நேற்றைய தினம் இயக்குனர் மோகன் ஜி, ஒரு பிராமணப் பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையை சித்தரிப்பது இந்த கூட்டத்திற்கு எப்போதும் தைரியமான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் படம். வெற்றிமாறன், அனுராக் காஷ்யப் மற்றும் அவர்களை சார்ந்தோரிடமிருந்து இன்னும் என்ன எதிர்பார்க்க முடியும். பிராமண அப்பா அம்மாவை வசைபாடுவது எல்லாம் பழசு, ட்ரெண்டிங் கிடையாது. இது போன்ற படங்களை உங்கள் சொந்த ஜாதிப் பெண்களுடன் முயற்சி செய்து, முதலில் உங்கள் சொந்த குடும்பத்தாரிடம் காட்டவும் என்று காட்டமாக பதிவிட்டுருந்தார்.