சினிமா துறையில் மட்டுமில்லாமல் மக்களின் மத்தியிலும் கூட ‘பல்வாள் தேவன்’ என்று சொன்னாலே போதும் ரசிகர்கள் உற்சாகத்திலும், ஆர்ப்பாட்டத்திலும் துள்ளி குதிப்பார்கள். அந்த அளவிற்கு தமிழக மக்களின் மனதில் அதிக இடம் பிடித்தவர் ராணா. இவர் இயற்பெயர் ராணா டகுபதி ஆகும். இவர் 1984 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். இவர் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் டகுபதி சுரேஷ் பாபுவின் மகன். அதுமட்டுமில்லாமல் நடிகர் வெங்கடேஷ் அவர்களின் அண்ணன் மகனும் ஆவார்.மேலும், பழம்பெரும் தயாரிப்பாளர் டகுபதி ராமாநாயுடு பேரனும் ஆவார். இப்படி குடும்பமே சினிமா துறையில் கலைஞர்களாக பங்கு வகித்து வருகிறார்கள்.

மேலும்,ராணா தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் பணியாற்றி உள்ளார். இவர் அஜித் அவர்களின் ஆரம்பம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தமிழில் அறிமுகமானர். தற்போது நடிகர் ராணா அவர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. நம்ம ரானா வா! இவரு ‘எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்’ என்று சொல்லும் அளவிற்கு அவருடைய உடல் தோற்றம் மாறி இருக்கிறது.

இதையும் பாருங்க : ‘A’ என்ற வார்த்தையில் முடியும் நபர் தான் வின்னரா.! ட்வீட் செய்த முக்கிய பிரபலம்.!

Advertisement

மேலும், பாகுபலி படத்தின் மூலம் மக்களிடையேயும், தமிழக ரசிகர்கள் மனதிலும் அதிக இடம் பிடித்தவர். சொல்லப்போனால் இவருக்கு ஒரு தனி ரசிகர் கூட்டமே உள்ளது என்று கூட சொல்லலாம். தற்போது இவருடைய “என்னை நோக்கி பாயும் தோட்டா” படத்தின் ரிலீசுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.மேலும், இந்த படத்தில் ராணா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்றும் தெரியவந்தது. இந்த நிலையில்ராணா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எச்டிஎப்சி பேங்க் விளம்பரத்துக்கான புகைப்படம் ஒன்றை அவர் பதிவிட்டுள்ளார்.

அதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்திலும், கவலையிலும் உள்ளனர். மேலும் அவருடைய பழைய புகைப்படத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால் யாராலும் நம்ப முடியாத அளவிற்கு தன்னுடைய உடல் எடையை குறைத்திருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. மேலும், பலரும் பாகுபலி படத்தில் கம்பீரமாக தோற்றமுடைய பல்வாள் தேவனா ! என்று ஆச்சரியப்படும் அளவிற்கு இணையங்களில் கேள்வி கேட்டு வருகின்றனர் ரசிகர்கள்.அதுமட்டுமில்லாமல் இவருடைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்னாச்சு உங்களுக்கு?ஏதேனும் பிரச்சனையா? நல்லா தானே இருக்கிறீர்கள் என்று ட்விட்டர் பக்கத்தில் நலம் விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

இதைத்தொடர்ந்து சமீபத்தில் ரானாவுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அமெரிக்காவில் நடந்தது என்று வந்த தகவலை குறித்து அவர் இதெல்லாம் வதந்தி ,பொய் என்று மறுத்து இருந்தார். ஆனால் தற்போது அவருடைய புகைப்படத்தை பார்த்தால் உண்மையாக இருக்குமோ? என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். இது ஒரு பக்கம் இருந்தாலும் ராணா ‘விரதபர்வம் 1992’ என்ற தெலுங்கு படத்திற்காக தான் தன்னுடைய உடல் எடையை இந்த அளவிற்கு குறைத்துள்ளார் என்றும் பேசப்பட்டு வருகிறது.எது உண்மை ? என்ற அளவில் குழம்பிப்போய் உள்ளனர் ரசிகர்கள். மேலும் நாங்கள் எங்கள் ராணாவை பல்வாள் தேவன் போல மீண்டும் பார்க்க வேண்டும் என்றும் கூறிவருகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement