விஜய்யை பின்னுக்கு தள்ளிய அசத்திய சிம்பு.! இதுதான் விஷயமா..? எப்படி தெரியுமா..?

0
86
vijay
- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் எந்த அளவிற்கு ஒரு மாஸ் ஹீரோ என்பத நம் அனைவருக்கும் தெரியும். அவரது படங்களின் டீசர் அல்லது ட்ரைலர் வெளியனாலே சமூக வலைதளத்தில் ட்ரெண்டிங்கில் வந்து விடும் என்பதில் ஐயமில்லை. சமீபத்தில் விஜய் நடித்துள்ள “சர்கார்” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான போதும் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் வந்தது.

vijay-in-bairavaa

அதே போல விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான ” மெர்சல்” படத்தின் ட்ரைலர் பல்வேறு லைக்ஸ்களை பெற்றது. மேலும், விஜய் நடிப்பில் வெளியான “பைரவா” ட்ரைலர் யூடூயூப்பில் 2.4 லட்சம் நபர்களால் விரும்பட்டது.ஆனால், இந்த சாதனையை சமீபத்தில் வெளியான “செக்க சிவந்த வானம்” படத்தின் ட்ரைய்லர் முறியடித்துள்ளது.

- Advertisement -

சமீபத்தில் வெளியான படத்தின் ட்ரைலர் யூடூயூப்பில் 2.6 லட்சம் நபர்களால் விரும்பபட்டுள்ளது. இதன் மூலம் விஜய்யின் “பைரவா” படத்தின் ட்ரைலர் சாதனையை இந்த படம் முறியடித்துள்ளது. இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகியுள்ள “செக்க சிவந்த வானம்” படத்தில் அரவிந்த் சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா போன்ற பல்வேறு நடிகர்கள் நடித்துள்ளனர்.

chekka-sivantha-vaanam

மல்டி ஹீரோ கதையாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிகம் வரவேற்பு இருந்ததால் தான், இந்த படத்தின் ட்ரைலர் இத்தனை லட்சம் நபர்களால் விரும்பபட்டுள்ளது. இருப்பினும் இத்தனை ஆண்டுகளில் சிம்பு நடித்துள்ள ஒரு படத்தின் ட்ரைலர் விஜய் படத்தின் ட்ரைலர் சதனையைய் முறுயடித்துள்ளது சிம்பு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய கொண்டாட்டமாக அமைந்துள்ளது.

Advertisement