பொதுவாக ஒரு திரைப்படம் திரையரங்குகளில் வெளியான போது சந்திக்கும் விமர்சனங்களை விட Ottயில் வெளியான பின்னர் சந்திப்பு விமர்சனங்களை மிக அதிகமாக இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது மோகன் இயக்கத்தில் செல்வராகவன் நடிப்பில் திரையரங்கில் வெளியான பகாசுரன் திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியான பின்னர் பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. அதில் தற்போது முதல் சர்ச்சையாக மகாசூரன் திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் காலண்டர் சூர்யா ரசிகர்களை பெரும் கொந்தளிப்பில் ஆழ்த்தி இருக்கிறது

தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக மோகன் ஜி திகழ்ந்து கொண்டிருக்கிறார். பழைய வண்ணார்பேட்டை என்ற படத்தின் மூலம் தான் மோகன் இயக்குனராக தமிழ் சினிமாவில் கால் அடி எடுத்து வைத்தார். பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு மோகன் அவர்கள் திரௌபதி என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் ஜாதி ரீதியாக பிற்போக்கு தனமான கருத்துகளை பேசியிருக்கிறது என்று சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

Advertisement

இந்த படம் சமூகத்திற்கு தேவையான ஒரு படம் என்று ஒரு புறமும், இந்த படம் பிற்போக்கான படமாக இருக்கிறது என்று மற்றொரு புறமும் விமர்சனங்கள் எழுந்த வண்ணம் இருந்தது. அதே போல இவர் முன்னதாக இயக்கிய ருத்ர தாண்டவம் படமும் ஒரு சமூகத்தை குறை கூறும் வண்ணம் இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தது. இப்படி ஒரு நிலையில் தான் மோகன், செல்வராகவனை வைத்து பகாசுரன் படத்தை இயக்கி இருந்தார்.

இந்த படத்தில் செல்வராகவன் நாயகனாக நடித்துஇருந்தார். மேலும், நட்டி, ராதாரவி, vj லயா என்று பலர் நடித்த இந்த படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்துஇருந்தார்.சமூகத்தில் பெண்கள் பாலியில் தொழில் எப்படி சிக்குகிறார்கள், செல் போன்கல் மற்றும் சமுக வலைத்தளத்தினால் பெண்களுக்கு என்னென்ன பிரச்சனை வருகிறது போன்றவற்றை மையமாக வைத்து இந்த படத்தை இயக்கி இருந்தார்.

Advertisement

மேலும், இந்த படத்திலும் பெண்கள் dp வைக்கக்கூடாது, செல் போன்கள் பயன்படுத்தக்கூடாது என்று பிற்போக்கு தனமான கருத்துக்கள் இருந்ததாக விமர்சனங்கள்எழுந்தது. இப்படி ஒரு நிலை இந்த திரைப்படம் அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கும் மோகன் இந்த திரைப்படத்தை பெரியவர்கள் தான் அதிகம் சென்று பார்த்தீர்கள்.

Advertisement

இளைஞர்கள் யாரும் பார்க்கவில்லை. அதற்கு காரணம் திட்டமிட்டு பரப்பப்பட்ட எதிர்மறையான விமர்சனங்கள் தான். அமேசான் பிரைமில் வந்த பிறகு இன்று பலரும் படத்தை கொண்டாடுகிறார்கள் என்று கூறியிருந்தார். இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் சூர்யாவை கேலி செய்யும் விதமாக காட்சி இடம்பெற்று இருப்பதாக சர்ச்சை எழுந்து இருக்கிறது. இந்த படத்தில் விலை மாது சந்திக்கும் பிரச்சனைகள் காட்டப்பட்டு இருந்தது.

அதானல் பல விலைமாது குறித்த காட்சிகள் இடம்பெற்றது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் விலை மாது வீட்டில் இருக்கும் ஒரு காலெண்டரில் ‘சிவக்குமார் அண்ட் கோ என எழுதப்பட்டுள்ளது. இதனைக்கண்ட ரசிகர்கள் மோகன் ஜி பாமக ஆதரவாளர் என்பதால் வேண்டுமென்றே படத்தில் இப்படி ஒரு காட்சியை வைத்ததாக விமர்சித்து வருகின்றனர். ஜெய் பீம் படத்தில் இடம்பெற்ற அக்னி கலசம் காலண்டர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. தற்போது அதற்க்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே மோகன் இப்படி ஒரு காலண்டரை தன் படத்தில் வைத்து இருக்கிறார் என்று விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

Advertisement