தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக மோகன் ஜி திகழ்ந்து கொண்டிருக்கிறார். பழைய வண்ணார்பேட்டை என்ற படத்தின் மூலம் தான் மோகன் இயக்குனராக தமிழ் சினிமாவில் கால் அடி எடுத்து வைத்தார். பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு மோகன் அவர்கள் திரௌபதி என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் ஜாதி ரீதியாக பிற்போக்கு தனமான கருத்துகளை பேசியிருக்கிறது என்று சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இருந்தாலும் இந்த படம் மக்கள் மத்தியில் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனை அடுத்து இயக்குனர் மோகன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம் ருத்ரதாண்டவம். இந்த படமும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை மையமாக கொண்ட கதை. இந்தப் படத்தை குறித்தும் சோசியல் மீடியாவில் சில சர்ச்சைகள் எழுந்து இருந்தது. இப்படி இவர் இயக்கிய மூன்று படங்களும் விமர்சன ரீதியாக தோல்வி இருந்தாலும் சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

Advertisement

இந்நிலையில் தான் இவர் இயக்கிய பகாசுரன் படம் வரும் 17 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இது தொடர்பாக அடிக்கடி பிரஸ் மீட்களை வைத்து வருகிறார் மோகன். அந்த வகையில் சமீபத்தில் சென்னையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்று இருந்தது. இதில் செல்வராகவன், ராதாரவி, நட்டி, தயாரிப்பாளர் ராஜன், தயாரிப்பாளர் தேனப்பன் என்று பலர் கலந்துகொண்டு இருந்தனர்.

இப்படி ஒரு நிலையில் இந்த விழாவில் பேசிய தயாரிப்பாளர் தேனப்பன் ‘இந்த படத்திற்கு மீடியாவிடம் இருந்து மிகப்பெரிய ஆதரவை எதிர்பார்க்கிறேன் நான் ஓப்பனாக சொல்கிறேன் பா ரஞ்சித்திற்கு எதிரான ஒரு படம் தான் இந்த படம். பா ரஞ்சித்துக்கு அவ்வளவு பெரிய ஆதரவு கொடுக்கும்போது மோகனுக்கு மட்டும் ஏன் கொடுக்க மாட்டீர்கள். எனவே, அனைவரும் ஆதரவு கொடுங்கள்.

Advertisement

இது சமூகத்திற்கு மிகவும் தேவையான ஒரு படம் என்பதை மோகன் நிரூபிப்பார் இதற்கு பிறகு மோகன் ஒரு பெரிய அளவில் ஒரு இயக்குனராக செல்வார் என்பதில் எந்த ஒரு மாற்றமும் கிடையாது’ என்று கூறியுள்ளார். ஏற்கனவே, மோகன் ஜி குறிப்பிட்ட சாதியினருக்கு எதிராக படம் எடுக்கிறார் என்று ஒரு குற்றச்சாட்டு நிலவி வருகிறது. அதே போல பா ரஞ்சித்துக்கு எதிராக தான் மோகன் ஜி தனது படங்களை எடுக்கிறார் என்று விமர்சனங்கள் இருக்கும் நிலையில் தயாரிப்பாளர் தேனப்பன் பேசிய இந்த பேச்சு தற்போது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement
Advertisement