நான் அடிப்பேன் ! ஆனால் இதுதான் உண்மை – பாலாவே கூறிய உண்மை தகவல் ?

0
2245
bala

தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்களுக்கு நடுவில் எப்போதும் தன் பாணியை மாற்றாமல் வித்யாசமான கதைக் களங்களில் தரமான படங்களைக் கொடுப்பவர் இயக்குனர் பாலா.
bala சமீபத்தில் இவரது இயக்கத்தில் ஜோதிகா மற்றும் ஜீ.வீ. பிரகாஷ் நடித்துள்ள படம் நாச்சியார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து மக்களின் நல்ல வரவேற்பை பெற்றது. இதற்குமுன் இவருடைய படங்களில் மிக வித்யாசமான கதைக் களத்தைக் கொண்டது அதர்வா மற்றும் வேதிகா நடித்த ‘பரதேசி’ படம்.

இதையும் படிங்க: கந்து வட்டியில் 20 லட்சம் கடனுக்காக 7 கோடி ரூபாய் வீட்டை இழந்தேன் ! பிரபல நடிகர் உருக்கம் ?

சில வருடங்களுக்கு முன்னர் இந்த ‘பரதேசி’ படத்தின் டீசரில் இயக்குனர் பாலா, படத்தின் நடிகர்கள் அதர்வா மற்றும் வேதிகா ஆகியோரை குச்சியை வைத்து அடிப்பது போல் இருந்தது.
paradesiஇது குறித்து இயக்குனர் பாலா அப்போது கூறியதாவது, ‘அது டம்மி குச்சி என்பது அனைவருக்கும் தெரியும், நான் அடிப்பது போல் அடிப்பேன் அவர்களும் வலிப்பது போல் நடிப்பார்கள் அவ்வளது தான், சாதாரண மக்களுக்குத் தான் தெரியவில்லை என்றால் திரைத் துறையில் இருப்பவர்களுக்குமா இது தெரியவில்லை, சிறுபிள்ளைத் தனமாக உள்ளது’எனக் கூறினார் இயக்குனர் பாலா