இரண்டு வருடத்திலே அடையாளம் தெரியாமல் மாறிப்போன காமெடி நடிகர். இப்போ எப்படி இருக்காரு தெரியுமா?

0
651
bala
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான காமெடி நடிகராக திகழ்பவர் பாலசரவணன். ஆரம்பத்தில் இவர் சின்னத்திரையில் ஒளிபரப்பான தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தான் பங்கு பெற்றிருந்தார். அதற்கு பிறகு இவர் வெள்ளித்திரையில் சென்று பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் முதன் முதலாக 2013 ஆம் ஆண்டு வெளிவந்த குட்டிபுலி என்ற படத்தின் மூலம் தான் வெள்ளித்திரையில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ஈகோ, திருடன் போலீஸ், டார்லிங், வலியவன், வேதாளம், கூட்டத்தில் ஒருவன் போன்ற பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.

-விளம்பரம்-

தற்போது இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் டான் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பாலசரவணன். நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இருந்த டாக்டர் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. இந்தப் படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் அவர்கள் ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

- Advertisement -

பாலசரவணன் நடிக்கும் டான் படம்:

இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அவர்கள் டான் என்ற படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி தான் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தை லைக்கா நிறுவனமுன், சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷனும் ஒன்றாக இணைந்து தயாரித்து வருகிறது. இந்த படத்தில் பாலசரவணன் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார். மேலும், டான் படம் குறித்து ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.

டான் படம் பற்றிய தகவல்:

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டாக்டர் படத்தில் நடித்த பிரியங்கா அருள்மோகன் நடித்து வருகிறார். மேலும், இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் படத்தில் சூரி, முனீஸ்காந்த், காளி வெங்கட், குக் வித் கோமாளி சிவாங்கி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் ரீலிசுக்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றன.

-விளம்பரம்-

பாலசரவணன் பதிவிட்ட டீவ்ட்:

இது ஒரு பக்கம் இருக்க, நடிகர் பாலசரவணன் அவர்கள் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பயங்கர குண்டாக இருந்தார். இதற்கு பலரும் விமர்சித்து இருந்தார்கள். இந்நிலையில் தற்போது இவர் சோஷியல் மீடியாவில் அவருடைய புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார். அதில் அவர் 2019 ஆம் ஆண்டு இருந்த புகைப்படத்தையும், 2022 ஆம் ஆண்டிற்கும் புகைப்படத்தையும் பதிவிட்டு,

வைரலாகும் டீவ்ட்:

Started Dieting in Dec 2020 and lost 22kgs in Mar 2021. நன்றி மித்ரன் ப்ரோ, மகிழ்ச்சி என்று தெரிவித்தார். தற்போது இந்த புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் பார்க்கும் போது பாலசரவணன் செம ஸ்லிம்மாக அடையாளமே தெரியாத அளவிற்கு மாறியிருக்கிறார். இதற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்கள்.

.

Advertisement