விசேஷத்திற்கோ, கோவிலிக்கோ செல்ல முடியல அதான் மதம் மாறிட்டேன்.! தாடி பாலாஜி புலம்பல்.!

0
1780
Thadi-Balaji
- Advertisement -

காமெடி நடிகர் தாடி பாலாஜிக்கும் அவரது மனைவி நித்யாவிற்கும் உள்ள மனக்கஷ்டங்கள் கோலிவுட்டை தாண்டி வீதிக்கு வந்த விஷயம் ஆகி இருந்தது. இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுபிரச்சனை ஆகி போலீஸ் வரை சென்று தற்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று.

-விளம்பரம்-

சினிமாவில் காமெடி நடிகராக இருந்து வந்த பாலாஜி சில ஆண்டுகள் சினிமாவில் வாய்ப்பில்லாமல் இருந்து வந்தார். பின்னர் சின்னத்திரை பக்கம் திரும்பிய இவர் கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் தனக்கென்று ஒரு அடையாளத்தை பெற்றார். மேலும், கடந்த ஆண்டு பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் பங்குபெற்றார்.

- Advertisement -

தாடி பாலாஜி சொந்த வாழ்க்கையில் பல்வேறு இன்னல்களை சந்தித்துள்ளார். அந்த வகையில் நானும் 6 ஆண்டுகளுக்கு முன்னர் மதமாற்றப்பட்டேன் என்றும் அதனால் பல வகையில் துன்பங்களை அனுபவித்தாகவும் தாடி பாலாஜி அதிர்ச்சியான தகவலை தெரிவித்துள்ளார்.

மதம் மாற்றப்பட்டதால் பல்வேறு இன்னல்களை சந்தித்தாகவும்
சொந்த பந்தங்களுடன் விசேஷங்களுக்கு செல்ல முடியாமல் , குலசாமி கோவிலுக்கு சென்று ஊர் காரர்களுடன் இணைந்து சாமி கும்பிட முடியமால், நம்முடைய வரலாறு கலாச்சாரத்தை இழந்து அடிமைபோல் வாழவேண்டும் என்று வேதனை தெரிவித்துள்ளார் பாலாஜி.

-விளம்பரம்-

ஆனால், தற்போது மீண்டும் இந்து மதத்திற்கு திரும்பியுள்ள பாலாஜி தாய் மதம் திரும்பியுள்ளது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறியுள்ளார். பாலாஜி பல ஆண்டுகளுக்கு முன்னர் மதம் மாறினார் என்ற விடயம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழத்தியுள்ளது.

Advertisement