நித்யா மற்றும் மனோஜ் பேசிய ஆடியோவை வெளியிட்ட தாடி பாலாஜி.! இவர் நல்லவர் தான் போல.!

0
1296
Balaji
- Advertisement -

சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படத்தில் காமெடி நடிகராக நடித்தவர் நடிகர் தாடி பாலாஜி. சினிமாவில் வாய்ப்பு குறையவே தொலைக்காட்சி பக்கம் திரும்பிவிட்டார். மேலும், கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.  

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சியில் பாலாஜிவின் மனைவி நித்யாவும் கலந்து கொண்டார். பல மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த இவர்கள் இருவரும் நிகழ்ச்சி முடிவதற்குள் ஒன்றிணைத்து விடுவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போதும் இவர்கள் பிரிந்தே வாழ்ந்து வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு பாலாஜி மீது அவரது மனைவி மீண்டும் மாதவரம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதில் மது அருந்துவிட்டு பாலாஜி தகாத வார்த்தைகளில் திட்டியதோடு வீட்டிற்கு வந்து கண்ணாடியை உடைத்தாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கூறியிருந்தார்.

பின்னர் காவல் நிலையத்திற்கு நேரில் சென்ற பாலாஜி, நித்யா கூறிய குற்றச்சாட்டை மறுத்தார். இந்த நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாலாஜி, காவல் உதவி ஆய்வாளர் மனோஜ் குமார் என் குடும்பத்தை நாசமாக்கிவிட்டார். என் மன உளைச்சலுக்கு அவர் தான் காரணம். அவரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். நித்யா எங்கள் மகளை பகடைக்காயாக பயன்படுத்துகிறார்.

-விளம்பரம்-

மகளின் கல்விச் செலவை ஏற்க நான் தயார். பணத் தேவைக்காக மட்டுமே நித்யா என்னிடம் பேசினார். என் வாழ்வில் நடப்பது பற்றி கமல் சாருக்கு தெரியும். கமல் சாரிடம் கூறிவிட்டு தான் செய்தியாளர்களை சந்திக்க வந்தேன் என்று கூறினார். அதுமட்டுமல்லாமல் தற்போது நித்யா மற்றும் மனோஜ் பேசிய ஆடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார் பாலாஜி. மனோஜ் என்பவர் நித்யாவை கேட்ட வார்த்தையில் திட்டியுள்ளார். மேலும், நாம் பேசியதை ஏன் பிறரிடம் சொன்னாய் என்று ஆத்திரமடைந்த மனோஜ், உன்னக்கு உதவி செய்ய போய் நான் மாட்டிக்கொண்டேன் என்கிறார். அதற்கு நித்யாவோ நீ எனக்கு கெடுதல் தான் செஞ்ச, என் பெற்றோர்களை ஏன் மிரட்ன என்றதும் மனோஜ் அவரை கொச்சை வார்த்தையில் திட்டி போனை வைத்து விடுகிறார்.

Advertisement