62 வயது பாலய்யாவிற்கு அம்மாவாக நடித்துவிட்டு, சக்சஸ் பார்ட்டியில் பாலய்யாவுடன் மது அருந்திய 31 வயசு ஜீவா பட நடிகை.

0
1030
bala
- Advertisement -

தெலுங்கு சினிமாவில் பல ஆண்டு காலமாக மிகப் பிரபலமான நடிகராக கொடிகட்டி பறப்பவர் நந்தமூரி பாலகிருஷ்ணா. இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் ஆரசியல்வாதியும் ஆவார். ஆந்திராவில் முதலமைச்சராக இருந்த என் டி ராமாராவ் அவர்களின் ஆறாவது மகன் தான் நந்தமூரி பாலகிருஷ்ணா. இவர் குழந்தை நட்சத்திரமாக தாத்தம்மா கலா என்ற திரைப்படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகம் ஆகியிருந்தார்.

-விளம்பரம்-

அதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அதோடு இவர் ஆந்திர சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து இருக்கிறார். வயதானாலும் பாலகிருஷ்ணா அவர்கள் இன்னும் படங்களில் ஹீரோவாக கலக்கிக் கொண்டிருக்கிறார். அதிலும் அதிரடி, ஆக்ஷன் போன்ற படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் பாலகிருஷ்ணா.

- Advertisement -

வீர சிம்ஹா ரெட்டி படம் :

இந்த நிலையில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் இயக்குனர் கோபிசந்த் இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்த வீர சிம்ஹா ரெட்டி திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெலுங்கு சினிமாவில் வெளியானது. இப்படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் வரலட்சிமி சரத்குமார், ஹனி போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு வாரிசு இசையமைப்பாளர் தமன் இசையமைத்திருந்தார்.

ஸ்ருதி ஹாசன் ஜோடி :

இதே நாளில் சிரஞ்சீவி நடித்திருந்த “வால்டர் வீரய்யா” திரைப்படமும் ஒன்றாக வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் எந்த படம் வெற்றியடைய போக்கியது என்ற எதிர்பார்ப்பு நிலவியது. வீர வீர சிம்ஹா ரெட்டி திரைப்பாடல் பழைய படங்களை போல எதிரிகளை எறும்புகளை போல தூக்கி வீசி ரசிகர்களை கவர்த்திருந்தார். அதே போல இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

அம்மாவாக நடித்துள்ள நடிகை :

62 வயது பாலகிருஷ்ணாவிற்கு 36 வயது ஸ்ருதி ஹாசன் ஜோடியாக நடித்தது கூட ஆச்சரியமில்லை. இந்த படத்தில் பாலகிருஷ்ணாவிற்கு அம்மாவாக 31 வயது உடைய நடிகை நடித்து இருப்பது தான் ஆச்சரியம். மிழில் விக்ராந்த் ஜோடியாக முதல் கனவே, ஜீவா நடித்த சிங்கம் புலி, சலங்கை துரை இயக்கிய கதிரவன் உள்ளிட்ட ஒரு சில படங்களில் மட்டும் தான் நடித்து இருந்தார். அதற்கு பிறகு இவர் தமிழ் படங்களில் நடிக்கவில்லை.

பின் நடிகை ஹனிரோஸ் அவர்கள் மலையாள படங்களில் மட்டும் அதிக கவனம் செலுத்தி வந்தார். இப்படி ஒரு நிலையில் இவர் 62 வயது பாலகிருஷ்ணாவிற்கு அம்மாவாக நடித்துள்ளார். இதனை ரசிகர்கள் பலரும் கேலி செய்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த படத்தின் வெற்றி விழா சமீபத்தில் கொண்டாடப்பட்ட நிலையில் இதில் படக்குழுவினர் மற்றும் சிறப்பு விருந்தினர் கலந்து கொண்டனர். இந்த சக்சஸ் பார்ட்டியில் பாலகிருஷ்ணா உடன் அவருடன் நடித்த நடிகை ஹனிரோஸ் கலந்து கொண்ட நிலையில் இருவரும் கைகோர்த்துக்கொண்டு ரொமான்டிக்காக மது குடிக்கும் புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement