இது என்ன Low Budget பீஸ்ட்டா ? நெட்டிசன்களின் கேலிக்கு உள்ளான பாரதி கண்ணம்மா சீரியல் – கமெண்ட்ஸ்ஸ கொஞ்சம் பாருங்க.

0
378
Barathi Kannamma
- Advertisement -

லோ பட்ஜெட் பீஸ்ட் படமா என்று பாரதி கண்ணம்மா சீரியலை நெட்டிசன்கள் கலாய்த்து வரும் மீம்ஸ் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. அந்த வகையில் டிஆர்பி ரேட்டிங்கில் உச்சத்தில் இருக்கும் தொடர்களில் ஒன்றாக பாரதி கண்ணம்மா சீரியல் திகழ்கிறது. இந்த தொடர்கள் தொடங்கிய காலத்திலிருந்து இப்போது வரை விறுவிறுப்புடனும், பல திருப்பங்களுடனும் சென்று கொண்டிருக்கின்றது.

-விளம்பரம்-

மேலும், பாரதி கண்ணம்மா தொடரில் பாரதியாக அருண் பிரசாத் நடிக்கிறார். கண்ணம்மாவாக ரோஷினி ஹரிப்ரியன் நடித்து இருந்தார். சமீபத்தில் தான் ரோஷினி ஹரிப்ரியன் சினிமா வாய்ப்பு கிடைத்ததால் சீரியலில் இருந்து வெளியேறி இருந்தார். பின் கண்ணம்மாவாக வினுஷா தேவி நடித்து வருகிறார். புதிய கண்ணம்மாவாக வினுஷா நடிக்க ஆரம்பத்திலிருந்து சீரியல் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கின்றது. இதற்கு இடையில் சீரியலில் இருந்து அஞ்சலி, பாரதியின் தம்பி அகிலன் ஆகியோர் விலகி இருந்தார்கள்.

- Advertisement -

பாரதி கண்ணம்மா சீரியல்:

இப்படி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகர்கள் பலர் மாற்றங்கள் செய்தாலும் டி ஆர் பி ரேட்டிங்கில் இந்த சீரியல் முன்னிலை வகித்து வருகிறது. தற்போது சீரியலில் வெண்பா- ரோகித் கதை ஒரு பக்கம் சென்று கொண்டிருக்கின்றது. அதேபோல் ஹாஸ்பிடலில் பாரதி, கண்ணம்மா கதை சென்று கொண்டு இருக்கிறது. சமீப காலமாகவே பாரதி கண்ணம்மா சீரியல் பரபரப்பு இல்லாமல் ஓடிக் கொண்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் கடுப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சீரியலின் கதை:

தற்போது பாரதியின் மருத்துவமனையில் கண்ணம்மா வேலை செய்து வருகிறார். இவர்கள் குடும்ப பிரச்சினை ஒரு பக்கம் இருக்க தற்போது அந்த மருத்துவமனையை தீவிரவாதி கும்பல் hijack செய்கிறது. அந்த வகையில் தற்போது பாரதி கண்ணம்மா சீரியல் ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் மொத்த தீவிரவாதிகளும் மருத்துவமனையை கைப்பற்றி அங்கு இருப்பவர்களை கைதிகளாக வைத்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

சீரியலின் ப்ரோமோ:

மருத்துவமனையில் கண்ணம்மா, லட்சுமி, அகிலன்,அஞ்சலி உட்பட பலர் மாட்டி கொள்கிறார்கள். இதை டிவியில் பார்த்த பாரதியின் குடும்பம் பதறிப் போய் இருக்கிறார்கள். அதற்கு பிறகு பாரதி, நான் எப்படியாவது அவர்களை காப்பாற்றுகிறேன் என்று கிளம்புகிறார். தற்போது இந்த புரோமோ சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து நெட்டிஷன்கள் பலரும் சீரியலை கலாய்த்து வருகின்றனர்.

கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்:

அதிலும், சிலர் லோ பட்ஜெட் பீஸ்ட் படமா? என்றெல்லாம் ட்ரோல் செய்திருக்கின்றனர். ஏற்கனவே, ராஜா ராணி 2 வில் தீவிரவாதி கான்செப்ட்டை எடுத்திருந்தார்கள். தற்போது அதே கான்செப்ட்டே தான் பாரதி கண்ணம்மா சீரியலிலும் இயக்குனர் எடுத்திருக்கிறார். தற்போது பாரதி கண்ணம்மா சீரியலை கிண்டல் செய்யும் மீம்ஸ் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Advertisement