‘சாரதி செல்லம்மா’ – பாரதி கண்ணம்மா சீரியலை வச்சி செய்த Tsk மற்றும் சுனிதா – வைரலாகும் வீடியோ.

0
2147
bharathi
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அந்த வகையில் தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி தான் காமெடி ராஜா கலக்கல் ராணி. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மிகவும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருமே மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளனர். மேலும், குக் வித் கோமாளி நிகழ்ச்சி போட்டியாளர்களை வைத்து தான் தற்போது காமெடி ராஜா கலக்கல் ராணி என்ற நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சி காமெடி, கலாட்டா, பொழுதுபோக்கு என அனைத்தையுமே கொண்டிருப்பதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் சீரியல்களை ஸ்பூப் செய்து போட்டியாளர்கள் நடித்துள்ளனர். அதில் பாரதி கண்ணம்மா சீரியலை டிஎஸ்கே– சுனிதா இருவரும் பங்கமாக வெச்சி செய்துள்ளார்கள். அதற்கான ப்ரோமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்படுகிறது.

- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான தொடர்களில் பாரதி கண்ணம்மா தொடரும் ஒன்று. இந்த தொடர் பல திருப்பங்களுடனும், விறுவிறுப்புடனும் தற்போது சென்று கொண்டிருக்கின்றது. பாரதிகண்ணம்மா சீரியல் என்றே ஒரு தனி ரசிகர் கூட்டம் உள்ளது அனைவருக்குமே தெரியும். தற்போது இந்த சீரியலில் பாரதி, கண்ணம்மாவைப் பற்றி புரிந்து கொள்வது போலும் கண்ணம்மாவை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு மாறுவது போன்றும் போய்க்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியில் டிஎஸ்கே –சுனிதா ஆகிய இருவரும் பாரதிகண்ணம்மா சீரியலை ‘சாரதி செல்லம்மா’ என்று இமிடேட் செய்து நடித்துள்ளார்கள். அதற்கான் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதைப் பார்த்து பலரும் வயிறு குலுங்கி சிரிக்கும் அளவிற்கு டிஎஸ்கே –சுனிதா பங்கமாக வச்சு செய்துள்ளார்கள். இந்த வாரம் காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியில் பாரதிகண்ணம்மா சீரியல் ஓட காமெடி தான் களைகட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நிகழ்ச்சியில் டிஎஸ்கே –சுனிதா இருவரும் பாரதிகண்ணம்மா சீரியலை வைத்து என்ன எல்லாம் செய்திருக்கிறார்கள் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

-விளம்பரம்-
Advertisement