குழந்தை பிறந்த பின் நடிக்க வந்த பரீனா – பாரதி கண்ணம்மா செட்டில் இருந்து அவரே வெளியிட்ட புகைப்படம்.

0
651
venba
- Advertisement -

சமீபத்தில் பிறந்த தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் பரீனா. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல் தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்துள்ளது.சின்னத் தம்பி பெரியதம்பி, ராஜா ராணி, மௌன ராகம், கடைக்குட்டி சிங்கம் என்று சினிமா டைட்டில்களை வைத்து ஒளிபரப்பாகி வந்த சீரியல்கள் நல்ல வெற்றியை பெற்றது. அந்த வகையில் இதே பாணியில் சினிமா டைட்டிலை வைத்து ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரப்பேற்பை பெற்று வருகிறது.

-விளம்பரம்-

இந்த சீரியலில் வெண்பா என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்து வருகிறார் நடிகை பரீனா. இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ரகுமான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் பரீனா கர்ப்பமாக இருப்பதை கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவித்து இருந்தார். இந்த நிலையில் பரீனாவிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் ஆண் குழந்தை பிறந்தது.

- Advertisement -

அதனை ஒரு குட்டி ஷூ புகைப்படம் மூலம் அழகாக தன் இன்ஸ்டா பக்கத்தில் அறிவித்து இருந்தார் பரீனா. பரினாவிற்கு குழந்தை பிறந்த செய்தி வெளியான உடன் பல யூடுயூப் சேனல்கள் வீடியோ வெளியிட்டு இருந்தது. அந்த வகையில் ஒரு யூடுயூப் பக்கம் ஒன்றில் பரினாவின் குழந்தை என்று புகைப்படம் ஒன்று வீடியோவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த குழந்தையின் புகைப்படத்தை பகிர்ந்து பரினாவின் கணவர் ரஹ்மான் இது எங்கள் குழந்தையை இல்லை.

இது போல போலியான விஷயங்களை பரப்பாதீர்கள் என்று கூறி இருந்தார். இப்போது குழந்தை பிறந்து சில நாட்கள் ஆன நிலையில் மீண்டும் பாரதி கண்ணம்மா சீரியல் செட்டிற்கு நடிக்க வந்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வளைத்ததில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement