என்னது புதிய கண்ணம்மாவும் சுந்தரி கேபியும் அக்கா தங்கையா ? வீடியோவால் குழம்பி போன ரசிகர்கள்.

0
676
vinusha
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான தொடர்களில் பாரதி கண்ணம்மா ஒன்று. இந்த சீரியல் தொடங்கிய காலத்திலிருந்து இப்போது வரை விறுவிறுப்புடனும், பல திருப்பங்களுடனும் சென்று கொண்டிருக்கின்றது. பாரதி கண்ணம்மா சீரியல் இல்லத்தரசிகளின் பேவரட் சீரியல்களில் ஒன்றாக உள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இதனிடையே கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரோஷினி ஹரிப்ரியன் இந்த சீரியலில் இருந்து திடீரென விலகியது அனைவருக்கும் தெரிந்ததே. மாடலிங் மூலம் தன்னுடைய கேரியரை தொடங்கினார் ரோஷினி. அதற்கு பிறகு தான் இவர் சின்னத்திரை நோக்கி வந்தார்.

-விளம்பரம்-

உண்மையாகவே கண்ணம்மா கதாபாத்திரத்தில் ரோஷினி மக்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று சொல்லலாம். இந்த சூழலில் திடீரென சீரியல் இருந்து ரோஷினி வெளியேறியது குறித்து ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. மேலும், இவருக்கு சினிமாவில் பல பட வாய்ப்புகள் வந்ததாகவும், சினிமாவில் கவனம் செலுத்துவதற்காக தான் சீரியலில் இருந்து வெளியேறினார் என்றும் சொல்லப்பட்டது. இந்த நிலையில் பாரதி கண்ணாமாவில் சீரியலில் புதிய கண்ணம்மாவாக வினுஷா தேவி நடித்து வருகிறார்.

- Advertisement -

இவர் விஜய் டிவி பிரபலமான மைக்கேல் நடித்த ‘N4’ என்ற படத்தில் 3 நாயகிகளில் ஒருவராக நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு புதிய கண்ணம்மா பார்ப்பதற்கு அப்படியே ரோஹினியின் ஜெராக்ஸ் போலவே இருக்கிறார் என்று பலரும் கூறி வருகின்றனர். வினுஷா தேவி தமிழ்நாட்டை சேர்ந்தவர். இவர் சென்னையில் உள்ள கல்லூரியில் படிப்பை முடித்துள்ளார். வினுஷா தேவி ஒரு புரோபஷனல் மாடல். அதுமட்டுமில்லாமல் இவர் டிக் டாக் வீடியோக்கள் மூலம் சமூக வலைத்தளங்களில் மிக பிரபலமானவர்.

May be an image of one or more people, beard, wrist watch and text

அதிலும் இவரின் திமிரு பட டிக் டாக் வீடியோக்கள் மூலம் ரசிகர் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர். மேலும், இன்ஸ்டாகிராமில் இவரை லட்சக்கணக்கான பேர் ஃபாலோ செய்கிறார்கள். அந்த வகையில் இவரும் சுந்தரி சீரியல் கேப்ரில்லாவும் ஒரே மாதிரி டிக் டாக் செய்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்த பலர் கேபியும் இவரும் சகோதரிகளா என்று குழம்பி போய்யுள்ளனர்.

-விளம்பரம்-

உண்மையில் வினுஷா மற்றும் கேப்ரில்லா இருவரும் நெருங்கிய தோழிகள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், வினுஷா, கேப்ரியலா இருவரும் இணைந்து பல நிகழ்ச்சியில் கலந்து உள்ளார்கள். இவர்கள் இருவருமே N4 படத்தில் நடித்து இருந்தனர் என்பது குறிப்பிடதக்கது. இந்நிலையில் வினுஷா தேவி போஸ்ட் ஒன்று போட்டு உள்ளார். அதில் அவர் கூறியது, எனக்கு கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு தந்ததற்காக சீரியலின் இயக்குனருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். கண்ணம்மா என்ற மிகவும் சக்தி வாய்ந்த கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகப்பெரிய வரம் என்று கூறியிருந்தார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அனைவரும் வினுஷா தேவிக்கு வாழ்த்துக்களையும், நீங்கள் கண்ணம்மாவை போலவே இருக்கிறீர்கள் என்றும் கமெண்ட் போட்டு விடுகிறார்கள்.

Advertisement