நீங்க 2 பேரும் ஜாதி வெறி பிடிச்சவங்களா ? Kgf பிரஸ் மீட்டில் முகம் சுழிக்கும் கேள்வி கேட்ட பயில்வான். வைரலாகும் வீடியோ.

0
732
bayilwan
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பிரபலமான காமெடி நடிகராக இருந்தவர் பயில்வான் ரங்கநாதன். இவர் ரஜினி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் உடன் இணைந்து படத்தில் நடித்து இருக்கிறார். பின் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்தவுடன் தனியாக யூட்யூப் சேனல் உருவாக்கி அதில் சினிமா பிரபலங்கள் பலரை பற்றி அவதூறாக பேசி வருகிறார். அதோடு இவர் நீண்ட காலமாகவே பத்திரிகையாளராக பணியாற்றி வருகிறார். அதனால் சினிமா துறையில் நடக்கும் பல அந்தரங்க விஷயங்களை வெளி உலகிற்கு கொண்டு வந்து கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இவர் எம்ஜிஆர் காலத்தில் இருந்து தமிழ் சினிமாவில் இருந்து வருவதால் சினிமா நட்சத்திரங்களைப் பற்றி அறியாத பல ரகசியங்களை தன்னுடைய பத்திரிக்கையின் மூலம் வெளியிட்டு வருகிறார்.மேலும், இவர் சினிமா துறையில் உள்ள நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என ஒருவரையும் விட்டு வைக்காமல் அவர்களைப் பற்றி அவதூறாக பேசி வீடியோக்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து உள்ளார்.

- Advertisement -

பயில்வானும் சர்ச்சை பேச்சுகளும் :

அதனால் இவருக்கும் சினிமா துறையை சேர்ந்த பிரபலங்களுக்கும் இடையயே வாக்குவாதம் இருந்து கொண்டு தான் இருக்கின்றது. இருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல், வரும் எதிர்ப்புகளுக்கும் பதிலடி கொடுத்து தன்னுடைய வேலையை தொடர்ந்து செய்து வருகிறார் பயில்வான். இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் சினிமா பிரபலங்களை பற்றி பேச ஆரம்பித்த பின் தான் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார்.

சமீபத்தில் கூட பயில்வான் ரங்கநாதன் மீடு புகார் அளிக்கும் நடிகைகள் குறித்து கொச்சையாக பேசி வீடியோ பதிவிட்டு இருக்கிறார். இதனால் பாடகி சின்மயி உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் பலரும் பயில்வான் மீது கடுமையாக கண்டனம் தெரிவித்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் Kgf2 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ஜாதி குறித்து பேசி சர்ச்சையை கிளப்பி இருக்கிறார்.

-விளம்பரம்-

ஜாதி குறித்து கேட்ட பயில்வான் :

யாஷ் நடிப்பில் வருகிற 14 ஆம் தேதி வெளியாக இருக்கும் ‘kgf2’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் படத்தின் இயக்குனர் மற்றும் நாயகி ஶ்ரீனிதி ஷெட்டி மற்றும் ஈஸ்வரி ராவுக்கும் பங்கேற்று இருந்தார்கள். அப்போது பேசிய பயில்வான் ‘இந்த இரண்டு நடிகைகளும் ஜாதி வெறி பிடித்தவர்களா ? இங்க ஈஸ்வரி ராவ், ஶ்ரீனிதி ஷெட்டி இருகாங்க’ என்று கேட்டிருந்தார்.

பீஸ்ட் Vs kgf2 :

இதனால் மேடையில் இருந்த ஈஸ்வரி ராவ் தர்ம சங்கடத்திற்கு உள்ளனர். உடனே மேடையில் இருந்தவர்கள் இங்கு படம் சம்மந்தபட்ட விஷயத்தை மட்டும் பேசுங்கள் என்று கூறிவிட்டனர். விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் பீஸ்ட் திரைப்படம் வருகிற 13 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. பீஸ்ட் திரைப்படம் தான் அடுத்த நாளே பிரம்மாண்ட படமான Kgf2 வும் வெளியாக இருக்கிறது. மேலும், தமிழகத்தில் பீஸ்ட் திரைப்படம் 800 முதல் 850 திரையரங்குகளிலும் Kgf2 திரைப்படம் 200 முதல் 250 திரையரங்குகளிலும் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement