தமிழ் சினிமாவில் முன்னி நடிகராக வலம் வரும் அஜித் நடித்து வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் வெளியானது துணிவு திரைப்படம். மேலும் இப்படம் விஜய் நடித்த வாரிசு திரைப்படத்துடன் வெளியானதால் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவிய நிலையி ல்துணிவு படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் பிரபல சினிமா விமர்சகரான பயில்வான் ரங்கநாதன் துணிவு படம் குறித்து மிகவும் சர்ச்சையான விஷியத்தை சொல்லியிருக்கிறார்.

துணிவு படத்தில் இந்தியாவில் வளர்ந்து வரும் Your Bank என்ற வங்கியை கொள்ளையர்கள் தங்கள் வசப்படுத்துகின்றனர். வங்கியையும் அங்குள்ள மக்களையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பை சமுத்திரக்கனி ஏற்கிறார். அவர்களுக்கு சவால் விடும் வேலையே அஜித் செய்து வருகிறார். வங்கியில் நடக்கும் மோசடிகளை மக்களுக்கு விழிப்புணர்வு செய்யும் வகையில் மாசான வில்லனாக அஜித் நடித்திருக்கிறார்.

Advertisement

இந்த நிலையில் பிரபல சினிமா விமர்சகரான் பயில்வான் ரங்கநாதன் துணிவு திரைப்படம் சமீபத்தில் ஜெய் அவர் இயக்கத்தில் வெளியான “காலேஜ் ரோடு” படைத்த போல இருக்கிறது என்றும், இரண்டு கதையும் ஒன்றுதான் காலேஜ் ரோடு படத்தில் ஆக்சன் காட்சிகள் குறைவு, அஜித் நடித்த துணிவு படத்தில் ஆக்ஷன் காட்சிகள் அதிகம் என்று கூறினார். மேலும் மற்றபடி எந்த மாற்றமும் இல்லை என்று கூறினார். இது ரசிகர்களுக்கு அதிச்சியை ஏற்படுத்தியது.

ஏன் என்றால் இயக்குனர் ஜெய் இயக்கத்தில் வெளியான காலேஜ் ரோடு திரைப்படம் முற்றியும் வேறு மாதிரியான கதை. அதாவது காலேஜ் ரோடு படத்தில் பல படங்களில் துணை கதாபாத்திரமாக நடித்த லிங்கேஷ் இப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகினார். மேலும் இப்படத்தில் “கல்வி என்பது ஒரு மனிதனின் தேவை கிடையாது என்று அது அவர்களின் உரிமை” என்றும் கதையின் வாயிலாக கூறியிருந்தார்.

Advertisement

கதாநாயகன் லிங்கேஸ் ஒரு பெரிய கல்லுரியில் படித்து வருகிறார். இவர் மேலும் படிப்பதற்கு பணம் தேவை. இந்தநிலையில் இவர் ரிவர்ஸ் ஹேக்கிங் என்ற ப்ராஜெக்ட் இவர் ஆனால் அங்கே வங்கிகளில் கொள்ளை நடக்கிறது. அப்படி ஒரு கொள்ளையை லிங்கேஷ் பார்த்து விடுகிறார். எனவே இவரை வைத்து கொள்ளையர்களை போலீசார் பிடிக்க திட்டம் தீட்டுகின்றனர். இந்நிலையில் எதற்காக கொள்ளை நடக்கிறது?, யார் இந்த கொள்ளையில் ஈடுபடுகிறார்கள்?,

Advertisement

அப்படி கொள்ளையடித்த பணத்தை என்ன செய்கிரார்கள்? என்பதுதான் மீதி கதையாக இருந்தது. இந்த நிலையில் இரண்டு படங்களும் கதையாலும் சரி படத்தின் கருவானாலும் சரி முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. இப்படிபட்ட நிலையில் அஜித் நடித்திருக்கும் துணிவு , காலேஜ் ரோடு திரைப்படமும் ஒன்றுதான் என்று பயில்வான் ரங்கநாதன் கூறியது ரசிகர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement