விஜய் டிவி வாய்ப்பளித்து மறுத்துள்ள அமீர் – BB ஜோடியில் தொடருமா பாவமீர் ஜோடி. பாவனியின் பதிவு.

0
413
pavni
- Advertisement -

பாவனி கழுத்தில் அமீர் தாலி கட்டி இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தனெக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்து இருப்பவர் பாவனி ரெட்டி. இவர் சின்னத்திரையில் ஆரம்பத்தில் ரெட்டை வால் குருவி, தவணை முறை வாழ்க்கை போன்ற பல சீரியல்களில் நடித்து இருந்தார். பின் இவர் சின்ன இடைவெளிக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த சின்ன தம்பி என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து இருந்தார். இந்த சீரியல் மூலம் இவருக்கு மக்கள் மத்தியில் பிரபலம் கிடைத்தது.

-விளம்பரம்-

அதுமட்டும் இல்லாமல் இவர் சில படங்களிலும் நடித்து இருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு மொழியிலும் நடித்து வருகிறார். இதனிடையே பாவனி கடந்த 2016 ஆம் ஆண்டு பிரதீப் என்ற நடிகரை திருமணம் செய்து இருந்தார். ஆனால், ப்ரதீப் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். அதன் பின் சிறிது காலம் பாவனி மீடியாவில் இருந்து விலகி இருந்தார். பின் சின்னத்திரை பிரபலத்தின் மூலம் தான் பாவனிக்கு பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்து இருந்தது.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாவனி-அமீர்:

பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்பத்திலிருந்தே பாவனி பல பிரச்சினைகளில் சிக்கி இருந்தார். இருந்தும் அவரை நாமினேஷனில் காப்பாற்றி இறுதி சுற்றுக்கு அனுப்பி வைத்து இருந்தார்கள் ரசிகர்கள். அதோடு இந்த நிகழ்ச்சியில் வைல் கார்ட் என்ட்ரியாக வந்த அமீர் பாவனியை காதலிப்பதாக வெளிப்படையாக கூறி இருந்தார். ஆனால், பாவனி முடியாது என்று சொல்லி விட்டார். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக ரசிக்கப்பட்ட ஜோடிகள் என்றால் பாவனி-அமீர்.

பாவனி-அமீர் காதல்:

இந்த நிகழ்ச்சிக்கு பின் வெளியே வந்தவுடனே அமீர்- பாவனி இருவருமே வெளியே சுற்றி இருந்தார்கள். அதேபோல் பிக் பாஸ் வீட்டில் வெடித்த அனைத்து சர்ச்சைகளுக்கும் இவர்கள் இருவரும் தைரியமாக பதில் கூறி இருந்தார்கள். தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிபி 2 ஜோடிகள் நிகழ்ச்சியில் அமீர்-பாவனி இருவரும் பங்கேற்று நடனம் ஆடி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் இவர்கள் நெருக்கத்தைப் பார்த்து இருவரும் காதலிக்க தொடங்கி விட்டார்கள் என்றெல்லாம் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

பிபி ஜோடிகள் 2 நிகழ்ச்சி :

-விளம்பரம்-

மேலும், அமீரும் ஒவ்வொரு எபிசோடும் பாவனிக்கு தன்னுடைய காதலை வெளிப்படுத்திக் கொண்டே வருகிறார். ஆனால், பாவனி எனக்கு கொஞ்சம் டைம் வேண்டும். கூடிய சீக்கிரத்தில் நல்ல பதிலைச் சொல்கிறேன் என்று கூறியிருந்தார். இப்படி ஒரு நிலையில் இவர்கள் இருவரும் பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2வில் பங்கேற்று இருக்கிறார்கள். இப்படி ஒரு நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் பாவனி பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

விலகுகிறார்களா அமீர் – பாவனி :

நான் உண்மையிலேயே ஒரு அதிர்ஷ்டசாலியான போட்டியாளர், உங்களைப் போன்ற ஒரு சிறந்த நடன இயக்குநரையும் ஒரு மாஸ்டரையும் பெற்றேன், எனது கனவிலும் நடனமாடுவதை நினைத்து கூடவில்லை, பயிற்சிக்கு ஒரு நாள் மட்டுமே கிடைத்தாலும், பயமின்றி நடனமாட முடியும். இதை விட யாரும் சிறப்பாக என்னை உருவாக்க முடியாது. கடுமையான முழங்காலில் காயம் ஏற்பட்டதால், உங்களுக்கு விடுப்பு எடுக்க வாய்ப்பு கிடைத்தது, சக்கர நாற்காலியில் அமர்ந்து நடிப்பதற்கு சேனல் உங்களுக்கு வாய்ப்பளித்தது, ஆனால் நீங்கள் இன்னும் கைவிடவில்லை, எப்போதும் போல் உங்களை நம்பியவர்களுக்காக நடனமாடத் தேர்ந்தெடுத்தீர்கள் ஒரு வேலைக்கான அர்ப்பணிப்பு கொடுக்கப்பட்டவுடன் என்னிடம் சொல்லுங்கள், பின்னர் எதுவும் நடக்கட்டும், அதை ஒருபோதும் நடுவில் விட்டுவிடாதீர்கள். உங்கள் பணிக்கான கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்காக உங்கள் மீது மிகுந்த மரியாதை. கடைசியாக உண்மையில் இது உங்களை மகிழ்விப்பதற்காகவே நாங்கள் நிகழ்த்த நினைத்தோம். இது எங்களின் சிறந்ததாக இருக்காது என்று எங்களுக்குத் தெரியும்.. ஆனால் நண்பர்களே இதை மறக்கமுடியாத ஒன்றாக மாற்றியுள்ளீர்கள் நண்பர்களே எங்கள் மீது பொழிந்த அன்பிற்கு நன்றி, உங்களுக்காக இன்னும் அதிகமாகச் செய்ய வேண்டும் என்ற உணர்வு

Advertisement