பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தனெக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்து இருப்பவர் பாவனி ரெட்டி. இவர் சின்னத்திரையில் ஆரம்பத்தில் ‘ரெட்டை வால் குருவி’ ‘தவணை முறை வாழ்க்கை’ போன்ற பல சீரியல்களில் நடித்து இருந்தார். பின் இவர் சின்ன இடைவெளிக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த சின்ன தம்பி என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து இருந்தார். இந்த சீரியல் மூலம் இவருக்கு மக்கள் மத்தியில் பிரபலம் கிடைத்தது. அதுமட்டும் இல்லாமல் இவர் சில படங்களிலும் நடித்து இருக்கிறார்.
மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு மொழியிலும் நடித்து வருகிறார். இதனிடையே பாவனி கடந்த 2016 ஆம் ஆண்டு பிரதீப் என்ற நடிகரை காதலித்து திருமணம் செய்து இருந்தார். ஆனால், ப்ரதீப் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். அதன் பின் சிறிது காலம் பாவனி மீடியாவில் இருந்து விலகி இருந்தார். பின் சின்னத்திரை பிரபலத்தின் மூலம் தான் பாவனிக்கு பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்து இருந்தது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாவனி-அமீர்:
பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்பத்திலிருந்தே பாவனி பல பிரச்சினைகளில் சிக்கி இருந்தார். அது மட்டுமில்லாமல் 11 முறை நாமினேஷனில் பாவனி வந்து இருந்தார் . இருந்தும் அவரை நாமினேஷனில் காப்பாற்றி இறுதி சுற்றுக்கு அனுப்பி வைத்து இருந்தார்கள் ரசிகர்கள். அதோடு இந்த நிகழ்ச்சியில் வைல் கார்ட் என்ட்ரியாக வந்த அமீர் பாவனியை காதலிப்பதாக வெளிப்படையாக கூறி இருந்தார். ஆனால், பாவனி முடியாது என்று சொல்லி விட்டார்.
பாவனி-அமீர் காதல்:
மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக ரசிக்கப்பட்ட ஜோடிகள் என்றால் பாவனி-அமீர். நிகழ்ச்சிக்கு பின் வெளியே வந்தவுடனே அமீர்- பாவனி இருவருமே நல்ல நண்பர்கள் என்று தொடங்கி இருந்தார்கள். அதேபோல் பிக் பாஸ் வீட்டில் வெடித்த அனைத்து சர்ச்சைகளுக்கும் இவர்கள் இருவரும் தைரியமாக பதில் கூறி இருந்தார்கள். தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிபி 2 ஜோடிகள் நிகழ்ச்சியில் அமீர்-பாவனி இருவரும் பங்கேற்று நடனம் ஆடி வருகின்றனர்.
பிபி 2 ஜோடிகள் நிகழ்ச்சி ப்ரோமோ:
இந்த நிகழ்ச்சியில் இவர்கள் நெருக்கத்தைப் பார்த்து இருவரும் காதலிக்க தொடங்கி விட்டார்கள் என்றெல்லாம் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் பாவனி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் அமீரை காதலிப்பது குறித்து மறைமுகமாக பதிவு போட்டிருந்தார். அப்படியே நாளுக்கு நாள் இவர்களின் நடனம் பாராட்டுகளை பெற்றிருக்கிறது. இந்த நிலையில் இந்த வார பிபி ஜோடிகள் நிகழ்ச்சிகள் புரோமோ வெளியாகியுள்ளது. அதில், பாவனிக்கு சர்ப்ரைசாக அவருடைய அக்கா என்ட்ரி கொடுத்திருக்கிறார்.
பாவனி அக்கா கூறியது:
அவர் அமீர் குறித்து கூறியிருந்தது, அமீர் தான் பாவ்னியை மாற்றி அந்த நிகழ்ச்சியில் வெளிப்படையாக பேச வைத்து அந்த பிரச்சனைக்கு தீர்வு காண வைத்தார். அதனால் தான் அமீர் – பாவ்னி உறவு இன்னும் பலமாக உள்ளது. எங்களுக்கும் அது மகிழ்ச்சியை தருகிறது. அதற்காக அமீருக்கு நன்றி சொல்கிறேன் என்று சொல்லி வாட்ச் ஒன்றையும் அமீருக்கு கிப்ட் செய்திருக்கிறார். இதை பார்த்து சாக்கான பாவனி அந்த வாட்சை வாங்கி அமீருக்கு தனது கையால் போட்டு விடுகிறார். இந்த வீடியோ தான் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.