ஓ, இது தான் ‘திரை தீப்பிடிக்குமா’ – திரையரங்கில் ஸ்க்ரீனை கொளுத்திய விஜய் ரசிகர்கள் – வீடியோ இதோ.

0
570
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். தற்போது விஜய் அவர்கள் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ்,யோகி பாபு உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.இது நெல்சன் திலீப் குமாரின் மூன்றாவது திரைப்படம் ஆகும். இந்த படத்தில் அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து இருக்கிறார். இன்று அனைவரும் எதிர்பார்த்த விஜய்யின் பீஸ்ட் படம் வெளியாகி உள்ளது.

-விளம்பரம்-

காஷ்மீர் எல்லையில் பல நாட்கள் இருந்து அங்கிருக்கும் முக்கிய பிள்ளையை சிறைபிடிக்க திட்டம் போடுகிறார் வீரராகவன் விஜய். ஆனால், அதை கைவிடும்படி விஜய்க்கு ஆர்டர் வருகிறது. இருந்தாலும் அதையும் மீறி அங்கு இருக்கும் தீவிரவாதிகளை துவம்சம் செய்கிறார். பின் எதிர்பாராதவிதமாக விஜய்க்கு நெருக்கமான குழந்தை இருக்கிறது. இதனால் விஜய் சென்னைக்கு வருகிறார்.சென்னையில் விஜய்க்கு பூஜாவுடன் காதல் ஏற்படுகிறது. இந்த நிலையில் ஒரு நாள் பூஜாவுடன் விஜய் வேலை சம்பந்தமாக மாலுக்கு வருகிறார். அங்கு திடீரென பாகிஸ்தான் தீவிரவாதிகள் மால்லை ஹைஜாக் செய்கிறார்கள்.

- Advertisement -

பீஸ்ட் படத்தின் கதை:

பின் வீரராகவன் கைது செய்த அந்த முக்கிய புள்ளியை விடுவிக்க வேண்டுமென்று கோரிக்கை வைக்கின்றனர். மேலும், மாலில் விஜயும் உள்ளார் என்பது போலீசுக்கு தெரியவருகிறது. கடைசியில் விஜய் மக்களை எப்படி தீவிரவாத கும்பலில் இருந்து காப்பாற்றினார்? அந்த தீவிரவாத தலைவன் விடுவிக்கப்பட்டானா? என்பது தான் படத்தின் மீதி கதை. படத்தில் வீரராகவன் கதாபாத்திரத்தில் விஜய் நடித்திருக்கிறார். இவர் தன்னுடைய அசால்ட்டான நடிப்பு, டயலாக் டெலிவரி, டான்ஸ், ஆக்சன் காட்சிகள் என ஒட்டு மொத்தமாக ஸ்கோர் செய்து இருக்கிறார். சொல்லப்போனால் மொத்த படத்தையும் விஜய் தான் தாங்கி நிற்கிறார்.

பீஸ்ட் படம் வெற்றி அடைந்ததா:

படத்தில் தீவிரவாதிகளை ரொம்பவே வீக்காக காண்பித்துள்ளார்கள். இதனால் விஜய் போடும் திட்டங்களை பார்க்கும் நமக்கு படத்தின் மீது விறுவிறுப்பு குறைந்து விடுகிறது. முதல் பாதி காமெடி, ஆக்சன் என நெல்சன் ஸ்டைலில் கொண்டு சென்றாலும் இரண்டாம் பாதி ரசிகர்களுக்கு சலிப்பு தட்டும் வகையில் உள்ளது. கோகோ, டாக்டர் உள்ளிட்ட படங்களைத் இயக்கிய நெல்சன் பீஸ்ட் படத்தில் புது மாற்றத்தை காண்பிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான். இதுவரை வெளிவந்த விஜய் படங்களில் பீஸ்ட் படம் வித்தியாசமாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் கைக்கொடுக்கவில்லை என்றே சொல்லலாம்.

-விளம்பரம்-

பல வருட கதை தான் பீஸ்ட் :

பல எதிர்பார்ப்புகளுடன் இருந்த விஜய் ரசிகர்களுக்கு பீஸ்ட் படம் ரொம்ப சுமார் தான். கோகோ, டாக்டர் போன்ற இரண்டு படங்களிலும் கடத்தல் கான்செப்ட்டை கையாண்ட நெல்சன் இந்தப்படத்திலும் கடத்தல் கான்செப்டை கையாண்டிருப்பது கைகொடுக்கவில்லை. மொத்தம் பிளாப் தான் ஆகிவிட்டது. பல வருடங்களுக்கு முன்பு படங்களில் வந்த கடத்தல், தீவிரவாதம் என எந்த ஒரு மாற்றத்தையும் கொண்டு வராமல் அப்படியே அரைத்த மாவை அரைத்து இருக்கிறார் நெல்சன். படம் ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை போதும்டா சாமி என்று சொல்லுமளவிற்கு ரசிகர்களுக்கு சலிப்பு தட்டி இருக்கிறது. இந்த கதையில் விஜய் நடிக்க எப்படி சம்மதித்தார் என்று பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

கோபத்தில் ரசிகர்கள் செய்த வேலை:

அதிலும் கூர்கா படத்தோட கதையே தான் பீஸ்ட் படம். அதாவது கூர்காவில் காமெடிகள் இருந்தது, இதில் வெறும் ஆக்சன் மட்டும் தான். பல கனவுகளுடன் எதிர்பார்த்து சென்ற விஜய் ரசிகர்களுக்கு பீஸ்ட் படம் ஏமாற்றம் என்றே சொல்லணும். இதனால் கொந்தளிப்பில் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் பீஸ்ட் படம் குறித்து விமர்சித்து பயங்கரமாக கமெண்டுகளை குவித்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் கோபத்தில் மதுரை மேலூரில் உள்ள கணேஷ் காம்ப்ளக்ஸில் திரையரங்கிற்கு நெருப்பு வைத்து இருக்கிறார்கள். தற்போது அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. வலிமை படத்திற்கு இணையாக பீஸ்ட் படம் வசூலில் சாதனை செய்யுமா? என்பது சந்தேகம் தான் என்று கூறப்படுகிறது. அந்த அளவிற்கு படம் ரசிகர்களுக்கு பயங்கர அதிருப்தியை கொடுத்து இருக்கிறது.

Advertisement