ரிலீஸ் சமயம் அல்லாத நாட்களில் மக்கள் நலனுக்காக அடிக்கடி முதல்வர்களை சந்திப்பாரா? – விஜய்க்கு ப்ளூ சட்டை மாறன் கேள்வி. எதுக்கு பாருங்க.

0
395
bluesattai
- Advertisement -

சினிமா உலகில் வெளிவரும் திரைப்படங்களை கிண்டலாகவும் ,கேலியாகவும் விமர்சனம் செய்து வருபவர் தான் ‘ப்ளூ சட்டை மாறன்’. இவர் பிரபலமான ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் என யாருடைய படமானாலும் பாரபட்சம் பார்க்காமல் கிண்டல் செய்து வருவார். இவருடைய வீடியோக்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமும் இருந்து வருகிறது. இவருக்கு இதுவரை 9 லட்சத்திற்கும் மேலான சப்ஸ்கிரைபர் உள்ளார்கள். இவருடைய விமர்சனங்களால் படத்தின் வசூல் பாதிக்கப்படுகிறது என சினிமா பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் புலம்பி கொட்டுகின்றனர்.

-விளம்பரம்-

அதோடு இவர் ‘ஆன்டி இந்தியன்’ என்ற படத்தை இயக்கி நடித்தும் இருந்தார். இந்த படம் சரியாக ஓடவில்லை. பின் மீண்டும் இவர் தனது விமர்சன பணியை செய்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் வெளியான அஜித்தின் ‘வலிமை’ படத்தை ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் செய்த போது அஜித்தை உருவக் கேலி செய்து இருந்தார். இதனால் அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாது பல பிரபலங்களும் கண்டனம் தெரிவித்தனர்.

- Advertisement -

விஜய் ரசிகர்களை சீண்டிய மாறன் :

இப்படி ஒரு நிலையில் விஜய் ரசிகர்களை சீண்டும் வகையில் பதிவு ஒன்றை போட்டுள்ளார் மாறன். தொடர்ந்து தற்போது தளபதி விஜய் அவர்கள் நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து இருக்கிறார். மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் செல்வராகவன், கிங்ஸ்லே, பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள்.

மளமளவென விற்று தீர்ந்த டிக்கெட்டுகள் :

இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி இருந்தது. அதே போல இந்த படத்தின் முன்பதிவுகள் ஏற்கனவே தவங்கிய நிலையில் பெருமபாலான திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவு தீர்ந்துவிட்டது. இதனால் விஜய் ரசிகர்கள் பலரும் பிளாக்கில் ஆயிர கணக்கில் பணத்தை செலவழித்து டிக்கெட்டுகளை வாங்கி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் புதுவையில் உத்தரவுப்படி காட்சிகளுக்கான கட்டணம் உயர்த்தப்படுவதாக போர்டுகள் தயாரித்துள்ளனர்.

-விளம்பரம்-

மூன்று மடங்கு வரை உயர்ந்த டிக்கெட் :

அதே போல பீஸ்ட் திரைப்படத்தின் டிக்கட் விலையை மூன்று மடங்கு வரை உயர்த்த புதுச்சேரி அரசு முடிவு செய்து இருப்பதாகவும் திரையரங்க உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று இந்த கட்டண உயர்வுக்கு அனுமதி கொடுத்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் இந்த செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மாறன் ‘சமீபத்தில் புதுவை முதல்வரை விஜய் சந்தித்தது இதற்குத்தானா? – சினிமா ரசிகர்கள் கேள்வி.’ என்று பதிவிட்டுள்ளார்.

மக்கள் நலனுக்காக அடிக்கடி முதல்வர்களை சந்திப்பாரா?

அதே போல தலைவா, மாஸ்டர், பீஸ்ட் என தனது பட ரிலீஸ் சமயத்தில் மட்டும் 100% அனுமதி, டிக்கட் உயர்வு, சிறப்புக்காட்சி அனுமதி கேட்டு தமிழக, புதுவை முதல்வரை சந்திக்கிறாரா விஜய்? இதேபோல ரிலீஸ் சமயம் அல்லாத நாட்களில் மக்கள் நலனுக்காக அடிக்கடி முதல்வர்களை சந்திப்பாரா? – தமிழக மக்கள் கேள்வி என்று ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement