தமிழ் சினிமா உலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக தளபதி விஜய் ஜொலித்து கொண்டிருக்கிறார். இவருடைய படத்தை பார்ப்பதற்கு என்றே திரையரங்குகளில் திருவிழா போன்று கூட்டம் அலைமோதும். ஏன்னா, அந்த அளவிற்கு அவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மாஸ்டர் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது தளபதி விஜய் அவர்கள் ‘பீஸ்ட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை நெல்சன் திலிப்குமார் இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இது தளபதி விஜய்யின் 65வது படம். சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக இந்த படத்தை தயாரித்து வருகிறது. இந்த படத்தில் இயக்குனர் செல்வராகவன் வில்லனாக நடித்து வருகிறார். படத்தில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் யோகி பாபு மற்றும் விடிவி கணேஷ் நடிக்கின்றனர்.

இதையும் பாருங்க : மாஸ்டர் முதல் இந்திய கிரிக்கெட் அணி வரை – 2021ல் ட்விட்டரில் டாப் 10 இடம்பிடித்த ஹேஷ் டேக்ஸ்கள்

Advertisement

அதே போல டாக்டர் படத்தில் காமெடியில் கலக்கிய கிங்ஸ்லியும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த இடத்தில் பூஜா ஹேக்டேவை விட இளசுகளின் தேடலாக இருப்பது அபர்ணா தாஸ் தான். இவர் பீஸ்ட் படத்தில் தளபதி விஜயின் தங்கையாக நடிக்கிறாராம். இவர் மலையாளத்தில் ஒரு சில படங்களில் நடித்து இருக்கிறார்.

ஆனால், இதுவே இவருக்கு தமிழில் முதல் படம். சமீபத்தில் கூட பீஸ்ட் படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகி இருந்தது. அதில் இருந்தே இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பலர் பின் தொடர்ந்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் நடிகை அபர்ணா தாஸ் குளியல் துண்டை கண்டுகொண்டு கொடுத்த போஸ் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement
Advertisement