இந்த ஆண்டு அதிகமாக டுவிட்டரில் ஹாஸ்டேக் செய்யப்பட்ட டாப் 10 டீவ்ட்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. அந்த பட்டியலை பற்றி இங்கு பார்க்கலாம்.
Covid19:
2021 ஆம் ஆண்டு கோடை காலத்தில் இந்தியா முழுவதும் Covid-19 இரண்டாவது அலை பரவியது. இதனால் பல மக்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்கள். இது நாட்டின் அமைதியை குலைத்தது மட்டுமில்லாமல் பொருளாதாரத்தையும் முடக்கியது. இதனால் மக்கள் அனைவரும் சோசியல் மீடியாவில் கோவிட் குறித்து பல தகவல்களை தேடினார்கள். சமூக வலைத்தளங்களில் கொரோனா வைரஸ்க்கு உதவி செய்ய திரண்டவர்கள், தேவையான ஆக்சிஜன், மருத்துவமனை, படுகைகள், மருத்துவ பொருள்கள் என பல தேவைகளை டீவீடரில் தேடினார்கள். இது பல வகையில் மக்களை இணைக்கவும் உதவியாக இருந்தது.
FarmersProtest:
விவசாயிகள் போராட்டம் பற்றிய உரையாடல்கள் 2020 முழு 2021ஆம் ஆண்டு வரை தொடர்ந்தது. அதில் அரசியல்வாதிகள், பிரபலங்கள், குடிமக்கள் மற்றும் எதிர்ப்பில் ஈடுபட்ட விவசாயிகள் என பலரும் ட்விட்டரில் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து வந்தார்கள். இந்த ஆண்டு இந்தியாவில் அதிகம் டீவ்டரில் ஹாஸ்டேக் செய்யப்பட்ட விவசாயம் ஆக அமைந்திருக்கிறது.
TeamIndia:
இந்த 2021 ஆம் ஆண்டு இந்திய விளையாட்டுக்கு ஒரு பிஸியான ஆண்டாக இருந்தது என்று சொல்லலாம். டுவிட்டரில் விளையாட்டு சமூகத்திற்கும், கிரிக்கெட் அணியின் வரலாற்று வெற்றியிலிருந்து ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் வரை என அனைத்து விளையாட்டு சம்பந்தப்பட்ட தகவல்களையும் ரசிகர்கள் பகிர்ந்து இருக்கிறார்கள். அதுவும் கிரிக்கெட் விளையாட்டு ரசிகர்கள், போட்டிகள் முழுவதையும் #TeamIndia என்ற ஹேஸ்டேக் மூலம் உற்சாகமாக தங்களுடைய கருத்துகளை பகிர்ந்து உள்ளார்கள்.
Tokyo2020:
விளையாட்டுப் போட்டிகளில் ஒலிம்பிக்கில் 7 பதக்கங்கள் மற்றும் பாரா ஒலிம்பிக்கில் 19 பதக்கங்கள் பெற்ற நிலையில் டோக்கியோ 2020 என்ற ஹாஸ்டேக்கை ரசிகர்கள் பயன்படுத்தி தங்களுடைய அனைத்து கருத்துக்களையும் பகிர்ந்து இருக்கிறார்கள்.
IPL2021:
இந்தியாவில் மிகப் பிரபலமான விளையாட்டுக்களில் ஒன்றான கிரிக்கெட் ஐபிஎல் உள்ளது. இந்த விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் வருடம் வருடம் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் covid-19 இடையூறால் 2021 ஆம் ஆண்டு இந்த நிகழ்வு நடுவிலேயே நிறுத்தப்பட்டது. பிறகு 6 மாதமாக நீட்டிக்கப்பட்டு மீண்டும் கிரிக்கெட் ஐபிஎல் 2021 விளையாடப்பட்டது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் நான்காவது ஐபிஎல் பட்டத்தை வென்றது. இதற்காக ரசிகர்கள் ஐபிஎல் 2021 என்ற ஹாஸ்டேக்கை உருவாக்கி அதிகமாக பேசி இருந்தார்கள்.
IndVEng:
இந்த ஆண்டு இங்கிலாந்து மைதானத்தில் நடந்த ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியாவின் ரோலர் கோஸ்டர் விளையாடியது. இந்திய விளையாட்டு ரசிகர்கள் பயங்கரமாக இதுகுறித்து டுவிட்டரில் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வந்தார்கள்.
Diwali:
இந்த ஆண்டில் கொண்டாடப்பட்ட நிகழ்வுகளில் ஒன்று தான் தீபாவளி. தீபாவளி இந்தியா முழுவதும் மிக பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது. நண்பர்கள், குடும்பத்தினர்கள், மக்கள் என அனைவருமே தங்களுடைய வாழ்த்துக்களையும் அன்பையும் டிவிட்டரில் பகிர்ந்து இருக்கிறார்கள். கொரோனாவின் இரண்டாவது அலையின் போது அயராது உழைத்த கோவிட் வீரர்களுக்கும் நன்றி தெரிவித்தார்கள்.
Master:
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்பவர் விஜய். விஜய் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகி இருந்த படம் மாஸ்டர். இந்த படம் தொடங்கிய ஆரம்பத்திலிருந்து படம் ரிலீசாகும் வரை ரசிகர்கள் ட்விட்டரில் மாஸ்டர் குறித்து பலவிதமான கருத்துக்களை பதிவிட்டு இருந்தார்கள். 2021 ஆம் ஆண்டு மாஸ்டர் படம் தான் டுவிட்டரில் அதிகமாக ஹாஸ்டேக் செய்யப்பட்டு பகிரப்பட்டது.
Bitcoin:
இந்த ஆண்டு ட்விட்டரில் அதிகமாக உரையாடல்களில் ஒன்று தான் கிரிப்டோகரன்சி மற்றும் டிஜிட்டல் சொத்து. இதுவரை இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு கிரிப்டோகரன்சி பற்றி அதிகமான உரையாடல் போயிருக்கிறது. இந்த ஆண்டு பிரபலமான உரையாடல் பட்டியலில் கிரிப்டோகரன்சி முன்னிலை வகித்துள்ளது.
PermissionToDance:
தென்கொரியா இசைக்குழு BTSன் இந்த பாடல் வீடியோ அதிகமாக பகிரப்பட்டது. மேலும், விசுவாசம் ரசிகர்களின் அன்பை பகிர்ந்து இருக்கிறது. சேவையில் பெருகிய முறையில் பிரபலமான இசை வகையாக இது மாறி வருகிறது. இந்த பாடல் இந்தியா உட்பட உலகெங்கிலும் பிரபலமாகி உள்ளது