பீஸ்ட் பட பூஜையில் இருந்த ஒரே இளம் நடிகை – படத்தில் இப்படி ஒரு ரோலில் நடிக்கிறாராம்.

0
1980
aparna
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக தளபதி விஜய் ஜொலித்து கொண்டிருக்கிறார். இவருடைய படத்தை பார்ப்பதற்கு என்றே திரையரங்குகளில் திருவிழா போன்று கூட்டம் அலைமோதும். ஏன்னா, அந்த அளவிற்கு அவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மாஸ்டர் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது தளபதி விஜய் அவர்கள் ‘பீஸ்ட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை நெல்சன் திலிப்குமார் இயக்கி வருகிறார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is image-5.png

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இது தளபதி விஜய்யின் 65வது படம். சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக இந்த படத்தை தயாரித்து வருகிறது. இந்த படத்தில் இயக்குனர் செல்வராகவன் வில்லனாக நடித்து வருகிறார். படத்தில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் யோகி பாபு மற்றும் விடிவி கணேஷ் நடிக்கின்றனர். பீஸ்ட் படம் காதல், நகைச்சுவை, அதிரடி சண்டை காட்சிகள் என்று எல்லாம் கலந்த கலவையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதையும் பாருங்க : வ உள்ள இருக்கும் போதே என்ஜாய் பண்ணுங்க, இல்லனா அவ வெளியில் வந்ததும் இதான் பண்ணுவா – பிரியங்காவின் தம்பி போட்ட பதிவுகள்.

- Advertisement -

அதோடு விஜய்யின் அம்மாவாக பிரபல செய்தி வாசிப்பாளரான சுஜாதா பாபு இப்படத்தில் நடித்துள்ளார்.
அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். மேலும், விஜய்யின் பீஸ்ட் படத்தின் போஸ்டர்கள் எல்லாம் சமீபத்தில் சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இந்த படத்தில் முக்கியமான வேடத்தில் நடிகை அபர்ணா தாஸ் நடிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்தது. மேலும், இந்த படத்திற்கு பூஜை போட்ட அன்றே பூஜையிலும் அபர்ணா தாஸ் கலந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பீஸ்ட் படத்தில் இவரின் கதாபாத்திரம் என்ன என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

This image has an empty alt attribute; its file name is image-4.png

பீஸ்ட் படத்தில் அபர்ணா அவர்கள் தளபதி விஜயின் தங்கையாக நடிக்கிறாராம். மேலும், கடந்த மே மாதமே இவருடைய காட்சிகள் படமாக்க பட வேண்டியதாக இருந்தது. ஆனால், கொரோனா இரண்டாவது அலை காரணமாக இவருடைய காட்சிகள் தள்ளி வைக்கப்பட்டது. சமீபத்தில் தான் இவருடைய காட்சிகளெல்லாம் சென்னையில் படமாக்கப்பட்டது. இந்த படத்தின் மூலம் தான் அபர்ணா தாஸ் தமிழில் அறிமுகமாக இருக்கிறார் என்று கூறப்படுகிறது. நடிகை அபர்ணா தாஸ் அவர்கள் ஏற்கனவே மலையாளத்தில் பகத் பாசிலுடன் ஞானப்பிரகாசன் மற்றும் வினித் சீனிவாசனுடன் மனோகரம் என்ற இரண்டு படங்களில் நடித்துள்ளார். மேலும், பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. பீஸ்ட் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்து இருக்கின்றனர்..

-விளம்பரம்-
Advertisement