‘ஜாலியோ ஜும்கானா’ அர்த்தம் என்னனு தெரியுமா? – விளக்கம் கொடுத்த பீஸ்ட் படத்தின் பாடலாசிரியர்

0
556
beast
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வெளி வரும் படங்கள் எல்லாமே பாக்ஸ் ஆபீஸில் இடம் பெறும். கடைசியாக தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருந்தது. மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் அவர்கள் தற்போது பீஸ்ட் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார். மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இந்த படத்தில் அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து இருக்கிறார். இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றது. மேலும், இந்த படத்தின் அரபிக்குத்து பாடல் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகி இருந்தது. இந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் விஜய்க்காக எழுதியிருக்கிறார். விஜய்யின் அரபிக் குத்து பாடல் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இந்த பாடல் வெளியானதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

- Advertisement -

பீஸ்ட் படத்தின் அரபிக்குத்து பாடல்:

அதுமட்டும் இல்லாமல் இந்த பாடலுக்கு ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் நடனமாடி வீடியோக்களை சோசியல் மீடியாவில் வீடியோக்களை வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். அதோடு இந்த பாடல் 185 மில்லியன் பார்வையாளர்களுக்கு மேல் சென்று சாதனை படைத்துள்ளது. இப்படி ஒரு நிலையில் பீஸ்ட் படத்தின் இரண்டாவது சிங்கிள் புரோமோ நேற்று வெளியாகி உள்ளது. இந்த பாடல் வரும் 19ஆம் தேதி வெளிவர உள்ளதாக படக்குழுவினர் அறிவித்து உள்ளனர். இதில் விஜய், அனிருத், நெல்சன் ஆகியோர் மிகக் கூலாகச் ஜாலியாக பாட்டு பாடி ஆடி இருக்கிறார்கள்.

பீஸ்ட் படத்தின் ஜாலியோ ஜிம்கானா பாடல் :

அந்த வீடியோ ஜாலியோ ஜிம்கானா என்று அழைக்கப்படுகிறது. இந்த பாடலை கு. கார்த்திக் எழுதி இருக்கிறார். இந்த பாடல் ரீலிஸ்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில் இந்த பாடலுக்கு என்ன அர்த்தம், உருவான விதம் குறித்து இந்த பாடலை எழுதிய பாடலாசிரியர் கார்த்திக் அவர்கள் பேட்டி ஒன்று அளித்து உள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு போதே நெல்சன், அனிருத் இருவரும் என்னிடம் பாடல் எழுதுவதைப் பற்றி சொன்னார்கள். பின் எதுக்கும் தயாராக இருங்கள் என்று சொன்னார்கள். நானும் பாடலுக்காக பயங்கரமாக ஒர்க் அவுட் பண்ணிக் கொண்டிருந்தேன்.

-விளம்பரம்-

ஜாலியோ ஜிம்கானா குறித்து பாடலாசிரியர் அளித்த பேட்டி:

ஒரு நாள் அனிருத் என்னை 12 மணிக்கு கூப்பிட்டு பீஸ்ட் படத்தின் கதையை ஒருவரி சொல்லி பாடலை எழுதச் சொன்னார். நானும் சில வரிகள் சொன்னேன். அப்போது அவர் ஜாலியாக செம கூலாக இருக்கணும். அந்த மாதிரி பாடலை எழுதச் சொன்னார்கள். நானும் ராகமாக இருக்க ராவம்மா, ராசம்மா என்ற வரிகள் எல்லாம் போட்டு ஆரம்பித்தேன். உடனே அரை மணி நேரத்தில் இந்த பாடல் உருவானது. ஜாலியாக இருக்கனும் என்ற அர்த்தத்தில் தான் இந்த பாடல் எழுதப்பட்டது. அதுமட்டுமில்லாமல் இந்த பாடலை விஜய் சார் பாடப் போகிறார் என்று சொல்லி இருந்தார்கள்.

ஜாலியோ ஜிம்கானா பாடல் பற்றிய விவரம்:

அதனால் ஒவ்வொரு வரியையும் பார்த்து நிதானமாக யோசித்து எழுதி இருந்தேன். பாடல் உண்மையாகவே அருமையாக வந்திருக்கிறது. வரிகளும், விஜய் சார் பாடியிருப்பதும் சூப்பராக உள்ளது. இந்த பாடல் நிச்சயம் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன் என்று கூறியிருந்தார். இப்படி கார்த்திக் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அரபிக்குத்து போல் இந்த பாடலும் ஹிட் ஆகுமா? என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம். மேலும், இந்த படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வர இருப்பதாக பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டு இருக்கின்றது. ஆனால், அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.

Advertisement