2024 ஆம் ஆண்டில் நடிப்பால் மிரள வைத்த தமிழ் சினிமா நடிகர்களின் பட்டியல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. காலம் காலமாக மக்களுடைய பொழுதுபோக்கு அம்சங்களில் ஒன்றாக சினிமா திகழ்கிறது. அதிலும் சமீபகாலமாக மக்களை மகிழ்விக்க சினிமாவும் பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் இந்த 2024 ஆம் ஆண்டில் தங்களுடைய நடிப்பால் மக்கள் மனதில் இடம் பிடித்த சிறந்த நடிகர்களுடைய பட்டியல் தான் தற்போது வெளியாகியிருக்கிறது.

விக்ரம்:
தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக விக்ரம் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் தன்னுடைய ஒவ்வொரு படத்திற்குமே கடும் உழைப்பை கொடுப்பது அனைவரும் அறிந்ததே. அவருடைய கதாபாத்திரத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்யக் கூடியவர். இந்த ஆண்டு இவருடைய நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகியிருந்த தங்கலான் படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றிருந்தது. இந்த படத்தில் விக்ரம் நடிப்பில் பட்டையை கிளப்பி இருந்தது என்று சொல்லலாம்.
விஜய் சேதுபதி:
மக்கள் செல்வனாக ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருப்பார் விஜய் சேதுபதி. இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. அந்த வகையில் இந்த ஆண்டு இவருடைய நடிப்பில் வெளிவந்து பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த படங்கள் மகாராஜா, விடுதலை 2. இந்த இரண்டு படத்திலும் இவர் தன்னுடைய நடிப்பில் அசத்தியிருக்கிறார்.

சூரி:
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி தற்போது ஹீரோவாக தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார் சூரி. அந்த வகையில் சூரி நடிப்பில் விடுதலை 2 படம் சமீபத்தில் வெளியாகி இருந்தது. கடந்த ஆண்டு வெளிவந்த விடுதலை படத்தின் மூலம் தான் இவர் கதாநாயகனாக அறிமுகமானார். அதற்கு பின் கருடன், கொட்டுக்காளி போன்ற படங்களில் நடித்திருந்தார். தற்போது விடுதலை 2 படத்தின் மூலம் பட்டையை கிளப்பியிருக்கிறார் என்று சொல்லலாம். இந்த படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கியிருக்கிறார்.

சிவகார்த்திகேயன்:
எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தன்னுடைய கடின உழைப்பினால் தமிழ் சினிமாவில் தனக்கென இடத்தை பிடித்தவர் சிவகார்த்திகேயன். தொகுப்பாளராக சின்னத்திரையில் அறிமுகமாகி தற்போது கோடி கணக்கில் சம்பாதிக்கும் ஹீரோவாக மிரட்டி கொண்டிருக்கிறார். இந்த வருடம் இவருடைய நடிப்பில் வெளியாகியிருந்த அமரன் படம் வேற லெவலில் பட்டையை கிளப்பி இருக்கிறது. சிவகார்த்திகேயன் திரை பயணத்திலேயே இந்த படம் ஒரு மைல்கல் என்றே சொல்லலாம். மேலும், மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் முகுந்த் வரதராஜனாக வாழ்ந்திருந்தார் என்று சொல்லலாம்.
ரஜினிகாந்த்:
என்றென்றும் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ஆக ஜொலித்து கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். இவருடைய படைப்பில் வெளிவந்த பல படங்கள் பிளாக்பஸ்டர் கொடுத்திருக்கிறது. அந்த வகையில் இந்த ஆண்டு இவருடைய நடிப்பில் வெளியாகியிருந்த வேட்டையன் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. குறிப்பாக இது ரஜினி படமா என்று சொல்லும் அளவிற்கு தன்னுடைய நடிப்பில் ரஜினி மிரட்டி இருந்தார்.

தினேஷ் & ஹரிஷ் கல்யாண்:
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்கள் தினேஷ் & ஹரிஷ் கல்யாண். இவர்களின் திரைப்பயணத்தில் ஒரு திருப்புமுனையாக இந்த ஆண்டு வெளிவந்த லப்பர் பந்து படம் அமைந்திருக்கிறது. கெத்து, அன்பு கதாபாத்திரத்தில் இருவருமே வேற லெவலில் கலக்கி இருக்கிறார்கள் என்று சொல்லலாம்.

சூர்யா:
தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுத் தந்திருக்கின்றது. அந்த வகையில் சூர்யாவின் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியிருந்த படம் கங்குவா. இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் இந்த படத்தில் சூர்யாவின் நடிப்பு வேற லெவல் என்று சொல்லலாம்.

தனுஷ்:
தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் இவரும் ஒருவர். இந்த ஆண்டு இவருடைய நடிப்பில் வெளியாகியிருந்த ராயன் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது. இந்த படத்தை இவரே இயக்கி நடித்திருந்தார்.

கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி:
இந்த ஆண்டி இவர்களுடைய நடிப்பில் வெளியாகியிருந்த மெய்யழகன் படம் மிகப்பெரிய அளவில் பாராட்டை பெற்றிருந்தது. இந்த படத்தில் இவர்கள் நடித்தார்கள் என்பதை விட இருவருமே வாழ்ந்திருந்தார்கள் என்று சொல்லலாம்.

சசிகுமார்:
தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி தற்போது நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் சசிகுமார். இவருடைய நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகி இருந்த நந்தன் படம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டிருந்தது. சமூகநீதி பேசும் படமாக நந்தன் படம் இருந்தது. இந்த படத்தில் சசிகுமாரின் நடிப்பு அனைவர் மத்தியிலும் பாராட்டை பெற்றிருந்தது.
பிரசாந்த்:
தமிழ் சினிமாவில் டாப் ஸ்டாராக கலக்கிக் கொண்டிருந்தவர் பிரசாந்த். இவருக்கு ஒரு கம்பேக் படமாக இந்த ஆண்டு வெளிவந்த அந்தகன் படம் அமைந்திருக்கிறது. கண் தெரிந்தும், தெரியாதது போல் பிரசாந்த் இந்த படத்தில் நடித்தார் என்பதை விட மிரட்டி இருக்கிறார் என்றே சொல்லலாம்.
விஜய்:
தமிழ் சினிமாவில் என்றென்றும் தளபதியாக வாழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகியிருந்த கோட் படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றது மட்டும் இல்லாமல் வசூலையும் செய்திருந்தது.






