நீருக்கு அடியில் கணவருடன் லிப் லாக் - முன்னாள் ராதிகா, ஜெனி நடத்திய Pregnancy போட்டோ ஷூட்.

By Rajkumar · 14/11/2021

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும் அவரது கணவராக சதீசும் நடித்து வருகிறார். அதே போல இந்த தொடரில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் ஜெனிபர். பாக்கியலட்சுமி தொடரில் நடித்து வரும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் வரும் அம்மன் சீரியலிலும் நடித்துவந்தார் ஜெனிபர்.

ஆனால், இவருக்கு பெரும் பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது என்னவோ பாக்கியலக்ஷ்மி தொடர் தான். இப்படி ஒரு நிலையில் பாக்கியலட்சுமி தொடரில் இருந்து ஜெனி விலகி இருந்தார். இது குறித்து வீடியோ மூலம் விளக்கமளித்த ஜெனி தான் கர்ப்பமாக இருப்பதால் சீரியலில் இருந்து விலகி விட்டதாகவும், தன்னுடைய கதாபாத்திரம் செல்லும் போக்கு தனக்கு பிடிக்கவில்லை என்றும் கூறி இருந்தார்.

இதையும் பாருங்க : தன் பிறந்தநாளுக்கு வாழ்த்திய சூப்பர் ஸ்டார் - ஆடியோவை பகிர்ந்து புகழ் பதிவிட்ட பதிவு. (என்ன சொல்லியுள்ளார் பாருங்க)

ஜெனிக்கு ஏற்கனவே இவருக்கு ஒரு மகன் இருக்கும் நிலையில் இரண்டாம் குழந்தை குறித்து பேசிய ஜெனி, நான் கர்பமாக இருப்பது என் மகனுக்கு தான் அதிக சந்தோஷம் என்று கூறி இருந்தார். கர்ப்பமாக இருக்கும் ஜெனி அடிக்கடி போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். இப்படி ஒரு நிலையில் நீருக்கு அடியில் படு வித்யாசமான போட்டோ ஷூட்டை நடத்தியுள்ளார் ஜெனிபர்.

பொதுவாக பிரபலங்கள் பலர் அன்டர் வாட்டர் போட்டோ ஷூட் நடத்துவது வழக்கம்.ஆனால், சமீப காலமாக கர்ப்பமாக இருக்கும் பிரபலங்கள் கூட இப்படி நீருக்கு அடியில் போட்டோ ஷூட் நடத்துவதை வாடிக்கையாக வைத்து வருகின்றனர். அந்த வகையில் ஜெனிபரும் இப்படி அன்டர் வாட்டர் போட்டோ ஷூட் நடத்தி இருக்கிறார். அதிலும் நீருக்கு அடியில் தன் கணவருக்கு லிப் லாக் முத்தம் கொடுத்துள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full